Friday, December 19, 2014

மதுபான அகற்ற கோரி மபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறள்ளது

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பரமக்குடியில் 22.12.2014 அன்று போரசிரியர்:M.H.ஜவாஹிருல்லாஹ்MLA அவர்கள் தலைமையில் இரு மதுபான அகற்ற கோரி மபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறள்ளது

தலைமையக அறிவிப்பு

தமிழகத்தில் ஆங்காங்கே காவல்துறையினரால் பொய் வழக்குகள் போடப்படுவதாகவும், தேவையின்றி விசாரணை என்ற பெயரால் காவல் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதேபோல் காவல் நிலைய பதிவேடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்ற பட்டியலில் யார் யார் பெயர் இருக்கிறதோ அவர்கள் அனைவருமே அவ்வப்போது காவல்துறையினரால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. இப்பிரச்சனைத் தீர்வு காண சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் நடவடிக்கைகளை தமுமுக மேற்கொண்டுள்ளது.
ஆகவே மேற்கண்ட வகைகளில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுடைய முழு விவரங்களையும் வரும் 1.1.2015க்குள் தமுமுக தலைமையகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா (9940085358) அவர்களை தொடர்புகொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
- தமுமுக தலைமையகம்

Thursday, December 11, 2014

இராமநாதபுரம்-கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் ரயில்வே கதவு மேம்பாலம் அமைக்க 5 ஆண்டுள் ஆகும்

இராமநாதபுரம்-கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் ரயில்வே கதவு மேம்பாலம் அமைக்க 5 ஆண்டுள் ஆகும்

சட்டமன்றத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தகவல்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

டிசம்பர் 2014 நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரில் கடந்த 04-12-2014 அன்று நான எழுப்பிய கேள்வியும் அமைச்சரின் பதிலுரையும்

எனது கேள்வி::
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமநாதபுரம் நகரை கீழக்கரை, து£த்துக்குடி போன்ற தென் பகுதிகளிலுள்ள ஊர்களை இணைக்கக்கூடிய கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு புதிய இரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என்று இந்த அரசு 2013&ல் அறிவிப்பு செய்திருந்தது. 
அந்த இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு எந்தவொரு பணியும் நடை பெறுவதாகத் தெரியவில்லை. இராமநாதபுரம் நகரில், மிக பெரிய போக்குவரத்து நெரிசல் இரயில்வே கதவு மூடும்போது ஏற்படும் ஒரு சூழலை தவிர்ப்பதற்காக இந்த அரசு விரைவில் அந்த இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணியை செய்ய ஆவன செய்யுமா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிசாமி:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இராமநாதபுரத்தில் இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான எந்தப் பணிகளும் துவங்கப்படவில்லை என்று சொன்னார்கள், ஒரு இரயில்வே பணியை துவங்க வேண்டும் என்று சொன்னால் குறைந்தபட்சம் நான்கிலிருந்து ஐந்து ஆண்டுகள் காலமாகும். இதனை ஏற்கெனவே 2014&2015 கொள்கை விளக்க குறிப்பில் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம்.

இரயில்வே லைனில் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளகின்றபோது தல வரைப்படம் தயாரித்தல் நேர்பாடு செய்தல், இரயில்வே துறைக்கு அனுப்புதல் 3 மாதம் ஆகின்றது. துறையின் நேர்பாடு, வரைப்பாடு பெறுதல் ஆறு மாதம் நில திட்டம், வரைப்படம் தயாரித்தல் 3 மாதம் 15/2,ல் அறிவிப்பு செய்தல் 6 மாதம் 15/1 ல் அறிவிப்பு செய்தல் 6 மாதம் மதிப்பீடு தயாரிக்க மூன்று மாதம், மதிப்பீடு ஒப்புதல் வழங்குதல் மூன்று மாதம், பணம் வழங்க ஆணைகள் வழங்குதல், நிலம் கையகப் படுத்துதல் 6 மாதம், பயன்பாட்டு சாதனங்களை மாற்றி அமைத்தல் 3 மாதம், வரைப்படம் முடிவடைந்து அதனை தயாரிக்க 3 மாதம் மதிப்பீடு தயாரித்தல் தொழில்நுட்பம் ஒப்புதல் வழங்குதல் 3 மாதம், ஒப்பந்தபுள்ளி முடிவடைந்து பணி ஒப்படைப்பு மூன்று மாதம், ஆக கிட்டத்தட்ட 4 முதல் 5 ஆண்டுகாலம் இதற்கே செலவிடப்படுகின்றது. மீதி 2 1/2 ஆண்டுகள் பணிகள் செய்ய வேண்டிய இதுபோன்ற சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால், பாலம் கட்டும் பணிகளில் காலதாமதம் ஏற்படுகின்றது. எனவே, மாண்புமிகு உறுப்பினர் சுட்டிக்காட்டியதன் காரணமாக பாலப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்

Wednesday, December 10, 2014

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பத்திரிகை அறிக்கை

பத்திரிகை அறிக்கை

திருப்பதியில் தமிழக செய்தியாளர்கள் மதிமுகவினர் மீது தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கத

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
--------------------------------------------------------------------------------------------

திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கருப்புக்கொடி காட்டிய மதிமுக-வினர் மீது சரமாரியாக தடியடி நடத்தியதுடன் போராட்டத்தை படம் பிடித்த தமிழக பத்திரிக்கையாளர்கள் மீது ஆந்திர போலீசார் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளiதை வன்மையாக கண்டிக்கிறேன். 
கருப்புக்கொடி போராட்டத்தை படம் பிடித்து கொண்டிருந்த தமிழக தொலைக்காட்சி செய்தியாளர்கள், காணொளி பதிவாளர்கள் மற்றும் ஏனைய தமிழக பத்திரிக்கையாளர்கள் மீது ஆந்திர போலீசார் கொடூர தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர். செய்தியாளரின் கேமரா, மைக் போன்றவற்றையும் உடைத்து எறிந்துள்ளனர். ஒன்னரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்து விட்டு இன்று சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ராஜபக்சேவிற்கு திருப்பதியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சந்திரபாபுவின் தெலுங்கு தேச அரசு. இதே நேரத்தில் ஜனநாயக ரீதியில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுகவினர் மீது காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியதுடன் அதனை செய்தியாக்கிக் கொண்டிருந்த தமிழக பத்திரிகையாளர்களையும் மோசமாக ஆந்திர மாநில காவல்துறையினர் தாக்கியுள்ளது மன்னிக்க முடியாத குற்றமாகும். பாஜகவின் ராஜபக்சே விசுவாசத்திற்கு தாங்களும் விசுவாசமாக இருக்கின்றோம் என்பதை சந்திரபாபு நாயுடு வெளிப்படுத்துவதற்காகவே ஒத்துமொத்த தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும்வகையில் திருப்பதியில் தமிழர்கள் மீது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று கருதுகிறேன். 
கைதுச் செய்யப்பட்ட மதிமுகவினரையும்பத்திரிகையாளர்களையும் உடனடியாக ஆந்திர அரசு விடுவிக்க வேண்டும் என்று கோருகின்றேன்.
தொடர்ந்து தமிழர்களின் நலனுக்கெதிராக செயல்படும் பாஜக கூட்டணியிலிருந்து மதிமுக விலகியது போல் தேமுதிகவும் பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய முற்போக்கு கூட்டணியும் வெளியேற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

(ஒ-ம்) எம்.எச். ஜவாஹிருல்லா

Tuesday, December 9, 2014

அரசியல் அரங்கில் ஆச்சரியப்படுத்தும் ஜவாஹிருல்லாஹ் MLA!

சென்னை : அரசியல் அரங்கில் எங்கும் எதிலும் கமிஷன், ஊழல் தலைவிரித்தாடும் காலகட்டத்தில், ஒரு ரூபாய் கூட லஞ்சம், கமிஷன் பெறாமல் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் MH. ஜவாஹிருல்லாஹ்,
தனது தொகுதி மக்களுக்காக முழுமையாக ரூ. 36 கோடியே 56 லட்சம் செலவில் இராமநாதபுரம் தொகுதியில் பணிகள் செய்திருப்பது பெரும் பரபரப்பாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் வருமாறு:
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் MH.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் பரிந்துரையின் பேரில்...
கடந்த 2011 முதல் 2014 வரை ரூபாய் சுமார் 17.5 கோடியில் நெடுஞ்சாலைத்துறையின் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் நீண்ட நெடிய கடற்பரப்பை கொண்ட ராம நாதபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1473 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில், 355 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளும், 340 கிலோ மீட்டர் நீளமுள்ள மாவட்ட சாலைகளும், 778 கிலோ மீட்டர் நீளமுள்ள இதர சாலைகளும் அடங்கும்.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையிலும், அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி செய்து கொடுக்கும் நோக்கிலும் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணிகளை நிறைவேற்றி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் சாலை உள்கட்டமைப்பு பணிகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு பணிகளுக்கும், அதன் பராமரிப்பு பணிகளுக்கும் தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலைகளை! நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அகலப்படுத்தி அதன் தரத்தை மேம்படுத்துதல் சாலைகள் மேம்பாடு செய்தல் சாலைகளின் இருபுறமும் உள்ள குறுக்கு வடிகால் சிறு பாலங்களை மராமத்து செய்து திரும்ப கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தந்த கால சூழ்நிலைக்கேற்ப சாலைகளில் ஏற்படும் பழுதுகளை சிறப்பு பராமரிப்பு மேற்கொள்ளுதல், காலமுறை புதுப்பித்தல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வருடாந்திர பராமரிப்பு நிதியின் கீழ் சாலைகளில் நொடிகள் சீர்செய்தல் உள்ளிட்ட பணிகள் சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 2011-2015 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் திட்டம் சாரா பணிகள் குறித்து கோட்ட பொறியாளர் ஆனந்தன் உதவி கோட்ட பொறியாளர் வேல்ராஜ் ஆகியோர் கூறியதாவது:-
இந்த நிதி ஆண்டில் 17 கிலோமீட்டர் தூர முள்ள சாலைகள் ரூ.6 கோடியே 58 லட்சம் மதிப்பில் போடப்பட உள்ளன. இது தவிர பகுதி-2 திட்டத்தின் கீழ் கட்டிட பணிகள் கடந்த 2011-12ம் நிதியாண்டில் ரூ.47 லட்சத்திலும், 2012- 13ம் நிதியாண்டில் ரூ.22 லட்சத்திலும், 2013-14ம் நிதியாண்டில் ரூ.35 லட்சத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2014 -15ம் இந்த நிதி ஆண்டில் மொத்தம் 3 திட்டங்களிலும் சேர்த்து 80 கிலோ மீட்டர் தூர சாலை பணிகள் ரூ.36 கோடியே 56 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளன. மேற்கண்ட பணிகள் மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் M.H. ஜவாஹிருல்லா MLA அவர்களின் பரிந்துரையின் பெயரில்
1 . உத்திரகோசமங்கை மங்கை முதல் திருப்புல்லாணி வரை புதிய சாலை அமைத்தல்
2 . உச்சிப்புளி புதுமடம் சாலை மேம்பாட்டுக்காகவும்
3 . வழுதூர் பெரியபட்டிணம் சாலையை மேம்படுத்துதல்
4 . திருப்புல்லாணி முதல் பிரப்பன்வலசை வரை சாலை மேம்பாடு
5 . பிரப்பன்வலசை முதல் ரெகுநாதபுரம் வரையிலும் சாலை மேம்பாடு
6 . உத்திரகோசமங்கை கிராமசாலை மேம்பாடு
7 . இராமநாதபுரம் முதல் கீழக்கரை சாலை மேம்பாடு
8 . மண்டபம் கிராமசாலை மேம்பாடு
9 . இராமநாதபுரம் முதல் கீழக்கரை செல்லும் வழியில் காஞ்சிராங்குடி வரையிலும் சாலை மேம்பாடு
10 . இருமேனி மீனவர் காலணி சிறப்பு பழுதுநீக்கி சாலை செப்பனிடுதல்
11 . வேதாளை மீனவர் காலணி சிறப்பு பழுதுநீக்கி சாலை செப்பனிடுதல்
12 . பெரியார் நினைவுத்தூண் முதல் கேணிக்கரை வரையிலும் சிறப்பு பழுதுநீக்கி சாலை செப்பனிடுதல்
ஆகிய பணிகளும் இது தவிர குறிப்பாக கோப்பேரிமடம் முதல் ஆற்றாங்கரை வரையில் 5 கிலோ மீட்டர் சாலை ரூ.4 கோடியே 20 லட்சத்திலும், உச்சிப்புளி அருகே தேசிய நெடுஞ்சாலை முதல் கடுக்காய்வலசை வரை யிலான 1.7 கிலோ மீட்டர் சாலை ரூ.80 லட்சத்திலும், திருப்புல்லாணி முதல் குத்துக்கல் வலசை வரையிலான 2.4 கிலோ மீட்டர் சாலை ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பிலும் போடப்பட உள்ளது.
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் பரிந்துரையின் பெயரில் மேற்கண்ட பணிகளுக்காக ரூ.17.5 கோடி நிதி புதிய சாலைகள் அமைக்கவும், சாலைகள் மேம்பாட்டுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த சாலைப்பணிகள் தவிர மற்ற பணி நிறைவு பெறாத சாலைப்பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு 2015 மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது