Wednesday, January 29, 2014

இராமநாதபுரத்தில் நடைபெற்று கொண்டு இருக்கும் புத்தக கண்காட்சி நிகழ்ச்சிய பார்வை இட தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.H.ஐவாஹிருல்லாஹ் MLA







இன்று   மாலை 6.30Pm மணியளவில் இராமநாதபுரத்தில் நடைபெற்று கொண்டு இருக்கும் புத்தக கண்காட்சி நிகழ்ச்சிய பார்வை இட   தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.H.ஐவாஹிருல்லாஹ் MLA அவர்கள் புத்தக கண்காட்சி கலந்து கொண்டார். உடன் தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி மற்றும் நிர்வாகிகள்  உறுப்பினர்கள் இருத்தார்கள்....

Tuesday, January 28, 2014

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மனித நேய மக்கள் கட்சி கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது...





28:01:2014 மாலை 7.00Pm மணியளவில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மனித நேய மக்கள் கட்சி கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது...இதில் சிறப்புரை சகோ மைதின் உலவி அவர்கள் ஆற்றினர்.,.கலந்து கொன்டவார்கள் தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி,மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் யாசர்,மாணவரனி மாவட்ட செயலாளர் புர்கான் மற்றும் ஆற்றாங்கரை.,அழகன்குளம்,பனைக்குளம்,புதுவலசை,ஆத்தியுத்து,சித்தார்கோட்டை,தேவிபட்டினம் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பொது மக்கள் பெறும் திரளாக கலந்து கொண்டார்கள்

கிழக்கரை பள்ளிக்கு கட்டிடம் மேல்பனிகஹெ 15,0000 லெட்சம் நிதி உதவிய பெரா.MH.ஜவாகிருல்லாஹ் அவருகளுக்கு நன்றி தெரிவிகப்பட்டது


Monday, January 27, 2014

குடியரசு தினத்தன்று தேசிய கொடியேற்றும் தேவிபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர்

இந்திய குடியரசு தினத்தன்று தேசிய கொடியேற்றும் தேவிபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மனித நேய மக்கள் கட்சியின் பேச்சாளர் ஜாஹிர் உசேன்

Sunday, January 26, 2014

சொன்னதை செய்த ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏவுக்கு கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் சார்பில் நன்றி!


கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்  நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மஹ்தூமியா பள்ளியில் மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு  நீண்ட கால காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு  வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏவிடம் இக்கோரிக்கை வைக்கப்பட்டு அவர் பள்ளியை பார்வையிட்டு இதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்திருந்தார் .அதோடு  உடனடியாக ரூ15 லட்சத்தை கட்டுமான பணிக்கு இப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தருவதாக அறிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிந்து தற்போது உடனடியாக இதற்கான நிதி   ஒதுக்கப்பட்டு முறையாக   இப்பணிக்கு கீழக்கரை நகராட்சி மூலம் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜா முஹைதீன் கூறியதாவது,
சொன்னாதோடு நிற்காமல் உடனடியாக செயல்பட்டு மஹ்தூமியா பள்ளி கட்டுமான பணிக்கு ரூ 15 லட்சம் நிதி ஒதுக்கிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏவுக்கு பழைய குத்பா பள்ளி ஜமாத் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்

news by- keelakaraitimes.com

Thursday, January 23, 2014

பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டு விழா சிறப்பு விருந்தினாக மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா


இரத்ததான முகாம்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் புதுமடம் சர்பாக 65வது குடியரசு தினா முன்னிட்டு தமுமுக உச்சிபுளி அரசு மருத்துவமணை இணைத்து நடந்தும் இரத்ததான முகாம்...(இறைவன் நாடினால்)

அப்சல் குருவை கள்ளத்தனமாக தூக்கிலிட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் உள்பட 15 நபர்களுக்கு வழங்கப்பட்ட மரணத் தண்டனையை ரத்து செய்து நேற்று (ஜனவரி 21) உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம், நீதியரசர்கள் ரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்திசிங் ஆகிய மூவர் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை பரிசீலிக்க குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநர் காலதாமதம் செய்தால் மரணத் தண்டனை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி மனநோயாளியாக இருப்பவர்களுக்கும் தனிமை சிறையில் அடைக்கப்பட்டவர் களுக்கும் மரணத் தண்டனை அளிக்கப்படக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளாதால் உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் பாராட்டிற்குரியதாகவும் அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 2013ல் நீதியரசர்கள் சிங்கிவி மற்றும் முக்கோபாத்யாயா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேவேந்தர் சிங் புல்லார் வழக்கில் கருணை மனுவை பரிசீலிப்பதற்கு தாமதம் ஏற்பட்டது என்பதினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டயை ரத்து செய்ய முடியாது என்றும் இதே போல் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவர்களின் மேல்முறையீடு மனுவைப் பரிசீலிக்க இயலாது என்றும் தீர்ப்பளித்தார்கள். இந்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் தான் நேற்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. அப்ஸல் குரு விவகாரத்தில் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் கள்ளத்தனமாக அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை மறைமுகமாகச் சாடும் வகையில் தலைமை நீதியரசர் சதாசிவம் அளித்த தீர்ப்பு அமைந்துள்ளது. மரணத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பு கைதியின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கவும் தான் விரும்பும் உணவை சாப்பிடுவதற்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ள கைதிக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த தீர்ப்பின் அடிப்படையில் அப்ஸல் குருவின் குடும்பத்தினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவசர கதியில் அப்சல் குரு தூக்கிலிடப்படுவதற்கு காரணமாக இருந்த உள்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படுவதுடன் சட்டவிரோதமாக அப்சல் குருவிற்கு மரண தண்டனையை நிறைவேற்றிய அமைச்சர் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறோம். பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய மூன்று தமிழர்கள் மரண தண்டனை அளிக்கப்பட்டு அவர்கள் கருணை மனு 11 ஆண்டுகள் கழித்து நிராகரிக்கப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள நேர்மையான தீர்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

 ஒப்பம் (எம்.எச்.ஜவாஹிருல்லா)

Sunday, January 19, 2014

புதுமடம் சர்பாக முஸபா நகர் பதிகாபட்ட மக்காளுக்காக வசூலித்த 51,065 ருபாய்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகம் வந்து புதுமடம் சர்பாக முஸபா நகர் பதிகாபட்ட மக்காளுக்காக வசூலித்த 51,065 ருபாய்...மாவட்ட செயலாளர் அன்வர் அலி அவர்களிடம் புதுமடம் கிளை தலைவர் சீனி வழங்கினர்...உடன் இராமநாதபுரம்
நகர்,புதுமடம் நிர்வாகிகள் இருத்தார்கள்...

Saturday, January 18, 2014

தமுமுக துபாய் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் துபாய் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று 17:1:2014 வெள்ளக்கிழமை அஷர் தொழுகைக்குப்பின் நடைபெற்றது,அதிரை அப்துல் ஹமீத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமீரக தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹாதி அவர்களும், அமீரக தமுமுக அலுவலக செயலாளர் இஸ்மத் யூனுன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு நிர்வாகிகள் தேர்தலை நடத்தினார்கள்,
 தமுமுக துபாய் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தலைவர்-- பரமக்குடி A.S.இப்ராஹிம்
 செயலாளர்- அதிரை S.M.A.அப்துல் ஹமீத்
 பொருளாளர்-- அய்யம்பேட்டை முஹம்மத் பாரூக்
 ஒருங்கிணைப்பாளர்-- மதுக்கூர் ஹாஜா 
துணைத்தலைவர்கள்- அதிரை அப்துல் காதர், குணங்குடி முஹைதீன் 
துணைச்செயலாளர்கள்     - மதுக்கூர் சிராஜ்,
                                                மதுக்கூர் ஷேக் ஜலால்,
                                                புதுபட்டினம் ரியாஷ்கான்
                                                கீழை ஜைனுல் ஆபிதீன்,                
                                                 தோப்புதுரை ஜின்னா, 
                                                மேலப்பாளையம் அப்துல் ஹக்கீம்,
                                                கடையநல்லூர் பாஷா,                  
                                                அடியக்கமங்கலம் ஷேக் தாவூத்
 தாவா குழு செயலாளர்- சென்னை பிலால் 
மருத்துவ அணிசெயலாளர்- லெப்பைகுடிகாடுசஹிதுல்லஹ்
 மக்கள் தொடர்பாளர்- கும்பகோணம் சலீம் 
மக்கள் மேம்பாட்டு அணி செயலாளர்- திருப்பூர் கலீலுர் ரஹ்மான்
 மக்கள் உரிமை பொறுப்பாளர்- முத்துப்பேட்டை நிஜாம்
 ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், எல்லாப் புகழும் இறைவனுக்கே சகோதரர்களின் பணிகள் சிறக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவும் என்றும் சமுதாய பணியில் தமுமுக துபாய் மண்டலம் 

Friday, January 17, 2014

லோக்சபா தேர்தல்.. கட்சிகளின் செல்வாக்கும் 40 தொகுதிகளின் கள நிலவரமும்: நக்கீரன் சர்வே

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கருத்து கணிப்புகளும் வரிசைகட்டி வெளியாகி கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் தேர்தல் களத்தில் அதிமுகவும், திமுகவும் சம பலத்துடன் மோதுவதாக நக்கீரன் வாரம் இருமுறை கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்கீரன் வாரம் இருமுறை இதழ் ஒவ்வொரு எம்.பி. தொகுதியிலும் 6 ஆயிரம் பேரிடம் கருத்து கணிப்பு நடத்தியது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்து கணிப்பு முடிவுகளையும் கடந்த 6 மாத கால அரசியல் நிலவரங்கள் அடிப்படையில் "நக்கீரனின் மெகா சர்வே" விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


மனித நேய மக்கள் கட்சி.. மனித நேய மக்கள் கட்சிக்கு மத்திய சென்னை, நாகப் பட்டினம், வேலூர், திருச்சி, நாமக்கல், தென்காசி, மயிலாடுதுறை, திருப்பெரும் புதூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோவை, பெரம்பலூர், ராமநாதபுரம், விருதுநகர், வடசென்னை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் செல்வாக்கு உள்ளதாம்..

Tuesday, January 14, 2014

மக்தூமிய நடுநிலை பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 15 லட்சம் நிதி ஒதிக்கி உள்ளார்

கீழக்கரையில் மிகவும் பின்தங்கிய மக்களின் குழந்தைகள் பயிலும் மக்தூமிய நடுநிலை பள்ளிக்கு பல MLA கீழக்கரையை சார்ந்தவர்கள் பொருப்பில் இருந்தும் கண்டு கொள்ளமல் இருந்த நிலையில் கீழக்கரை தமுமுக நிர்வாகிகளின் முயற்சி மற்றும் பழைய குத்பா பள்ளி தலைவர் மற்றும் நிர்வாகிகளின் முயற்சியாளும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நமது சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 15 லட்சம் நிதி ஒதிக்கி உள்ளார் என்ற செய்தி மகிழ்ச்சி அழிக்கிறது. அவர்கள் பணி சிறப்பாக அமைய இறைவனிடம் பிராத்திக்கின்றேன். நன்றி...

கடந்த ஆண்டு இஸ்லாமிய உயர்நிலை பள்ளிக்கு 5 லட்சம் வழங்கியதும் குறிப்பிடதக்க செய்தி..

Saturday, January 11, 2014

நீங்கள் பதிவிடும் செய்தியை அனைவரும் கவனிக்கிறார்கள் என்ற எச்சரிக்கையுடன் பதிவு செய்யுங்கள் .

இந்தியா போன்ற பல் சமூக மக்கள் வாழும் நாட்டில் எந்த சமூகமும் தனித்து அரசியல் களம் கண்டு வெற்றி ஈட்ட முடியுமா ? அவ்வாறு யாராவது நினைத்தால் அது நிச்சயம் அது பகல் கனவாகவே இருக்க முடியும். விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்காக களமாடிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் , ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட சமூக நீதிக்காவலர் வி பி சிங் அவர்களும் தனித்த வெற்றியை பெற முடியவில்லை.

 நாங்கள்தான் விடுதலை வாங்கி கொடுத்தோம் என நீட்டி முழக்கிய காங்கிரஸ் கட்சிக்கு கூட முதல் தேர்தலில் பெரும்பான்மையை சென்னை மாகாணத்தில் பெற முடியவில்லை என்பதும் அன்றைய காங்கிரஸ் முதல்வர் ராஜாஜியின் தூக்கத்தை கெடுத்த இடது சாரிகள் குறித்தும் வரலாற்று ஏடுகள் பதிவு செய்துள்ளன.அவ்வளவு ஏன் நாடு முழுவதும் மக்களை பிளவு படுத்தி நச்சு சிந்தனையை பரப்பி வலுவான கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ள ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் வாரிசான பாஜக கூட தனித்து வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. 

சிறுபான்மையினரின் வலுவான வாக்கு வங்கிகளை தன்னகத்தே கொண்டு இருந்த , திமுக திருனாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கொல்லைப்புற வழியாக பெற்று அதிகாரத்தை சுவைத்த கட்சி கூட தாங்கள் தனித்து சாதிப்போம் என கூறவேயில்லை .ஒன்று சேர்ந்தே சாதிக்க முடியும். இதுவே உண்மை நிலை. இந்த யதார்த்த நிலையைபுரிந்து கொள்ளாமல் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக ம ம க போன்ற ஒடுக்கப்பட்ட அழுத்தப்பட்ட மக்களுக்காக போராடும் கட்சிக்கு அட்வைஸ் செய்கிறோம் பேர்வழி என சில புண்ணிய வான்கள் புறப்பட்டு இருக்கிறார்கள். அந்த நல்லவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நீங்கள் பதிவிடும் செய்தியை அனைவரும் கவனிக்கிறார்கள் என்ற எச்சரிக்கையுடன் பதிவு செய்யுங்கள் .

உங்கள் பதிவுகள் உங்கள் அரசியல் அறியாமையை வெளிப்படுத்தும் விதமாக இருந்து விடக்கூடாது. சிந்தித்து பதிவு செய்யுங்கள்.

சில பேர் போடும் நிலை தகவல்கள் சிறு பிள்ளை தனமாக இருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக நம்மில் சிலர் போடும் பதிவுகள் மத வாத சக்திகளுக்கு ஆதரவாக மாறி வோட்டுக்கள் எதிர் முகாமுக்கு போய்விடும் நிலையை ஏற்படுத்தி விடகூடாது.
மதவாத சக்திகளை முறியடிப்போம்.




Friday, January 10, 2014

மனிதநேய மக்கள் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் திமுக விற்கு ஆதரவு




இன்று நடைபெற்ற செயற்குழுவில் மனிதநேய மக்கள் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் திமுக விற்கு ஆதரவு என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிப்பு.

புதியதலைமுறைடிவியில் ஹாஜாகனி 07.01.2014

Wednesday, January 8, 2014

துபை தமுமுக வின் வாராந்திர (10-01-2014)சிறப்பு நிகழ்ச்சி

துபாய் தமுமுக சார்பாக  ஜனவரி 10 வெள்ளியன்று மஹ்ரிப் தொழுகைக்குப்பின் சோனாப்பூர் பலுதியா கேம்பில் இஸ்லாமியர்களின் இலக்கு என்ற தலைப்பிலும்,

இரவு 8:30 மணியளவில் தமுமுக துபாய் தேரா மர்கசில் காவிகளும் கலவரங்களும் என்ற தலைப்பிலும்  சகோதரர் குணங்குடி முஹைதீன் உரையாற்ற உள்ளார். 

கீழ‌க்க‌ரையில் நாளை( 09 வியாழன் ஜன2014) மின் த‌டை! மின் இலாகா அறிவிப்பு

கீழக்கரை உப மின்நிலையத்தில் ஜன 09 வியாழன் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை நகர், மாயாகுளம், முகமதுசதக் கல்லூரிகள், புல்லந்தை, ஏர்வாடி, உத்தரகோசமங்கை, தேரிருவேலி, பாலையேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9முதல் மாலை 5மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று ராமநாதபுரம் உதவி செயற் பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்


News by:keelakaraitimes.blogspot.com

ஜெ.அப்துல்ரஹிம் - இந்திய தேசிய லீக் கட்சி த.மு.மு.க தலைவர் சந்திப்பு


த.மு.மு.க வின் தலைவர் ஜானப் ஜே.எஸ்.ரிஃபாயி , 
பொதுச்செயளாலர் ஜனாப் . தமிம்அன்சாரி , பொருளாலர் ஜனாப்.ஒ.யூ.ரஹமதுல்லாஹ் வரவேற்றனர் .....
07-01-2014 செவ்வாய்கிழமை இந்திய தேசிய லீக் கட்சியின்
குழு ! வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் “பி.ஜே.பி -மோடிக்கு எதிராக”
முஸ்லீம் அமைப்புகள் மற்றும் முஸ்லீம் அரசியல் கட்சிகள் ஒருங்கினைத்து பாராளுமன்ற தேர்தலில் ஓர் அணியாக இஸ்லாமிய
அமைப்புகள் போட்டியிட வலியுறுத்தி இந்திய தேசிய லீக் கட்சி இன்று
முதல் களமாடி வருகின்றது அதன் தொடர்ச்சியாக ...

த.மு.மு.க வின் தலைவர் ஜானப் ஜே.எஸ்.ரிஃபாயி ,
பொதுச்செயளாலர் ஜனாப் . தமிம்அன்சாரி , பொருளாலர் ஜனாப்.ஒ.யூ.ரஹமதுல்லாஹ் ..
அகியோர் வாசலில் வந்து எங்கள் குழுவை வரவேற்றனர் .
பிறகு எங்களின் கோரிகையை கேட்டு கொண்டு இந்திய அரசியலில்
இன்றைய சுழ்நிலையையும் , தமிழ்நாட்டில் இப்போது முஸ்லீம்களுக்கு என்ன நடக்கின்றது என்பன போன்ற சமுக விஷயங்களையும்
தலைவருடன் சேர்ந்து பொதுச்செயளாலர் கலந்துரையாடினார் .

த.மு.மு.க வின் தலைவர் ஜானப் ஜே.எஸ்.ரிஃபாயி ,
பொதுச்செயளாலர் ஜனாப் . தமிம்அன்சாரி , பொருளாலர் ஒ.எம்.எஸ்
அகியோர் நிச்சயம் நிர்வாக குழுவில் இதுபற்றி பேசி முடிவு
எடுபோம் என்றனர் . இன்ஷாஅல்லாஹ்
அல்லாஹ் போதுமானவன் த.மு.மு.கவின் தலைமை நிர்வாகிகளின்
அன்பான உபசரிப்பு நிச்சயம் சமுதாயத்தின் ஓற்றுமைக்கு
முதல்நிலையடைவார்கள் என்பது எந்த சந்தேகமும் இல்லை !
அல்லாஹ் வெற்றியை கொடுப்பானாக ஆமின் ...


ஜெ.அப்துல்ரஹிம்

இந்திய தேசிய லீக் கட்சி

Monday, January 6, 2014

முஸாபர் நகர் மக்களுக்காக வாரி வாரி வழங்கிட தயாராவீர்! வீதி வீதியாகச் செல்வோம்... வீடு வீடாக ஏறி இறங்குவோம்... கண்ணீரில் மிதக்கும் நம் மக்களுக்கு, கைக்குட்டைகளாய் மாறி அவர்களின் கண்ணீரைத் துடைப்போம்!


பேரன்புக்குரிய சமுதாய உறவுகளே... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இக்கடிதம் தங்களை பூரண சுகத்தோடும், கொள்கை சிந்தனையோடும் சந்திக்கட்டுமாக மிக அவசரமான சூழலில் இக்கடிதம் வழியாக உங்களை சந்திக்கிறோம். 


கண்ணீரும் & கவலையுமாக முஸாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் வாடி வதங்கும் நம் சொந்தங்களின் துயர் துடைக்க போர்க்கால அடிப்படையில் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

காவிகள் ஏற்படுத்திய அந்த கலவரத்தில் மாண்டோரின் எண்ணிக்கை இன்றுவரை உயர்ந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கொடும் பாவிகள், ‘ஊரைத் துறந்து; உற்றாரை இழந்து; உறவுகளைப் பிரிந்து; அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களையும் கூட தேடி வந்து தாக்கும் கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அகதி முகாம்களில் அபலைப் பெண்களாக அழுது கொண்டிருக்கும் அவர்களைக் கூட கடத்திச் சென்று கற்பழிக்கிறார்களாம். என்ன ஒரு கொடுமை?

அங்கு ஒரு அரசு செயல்படுகிறதா? என்ற ஐயம் ஏற்படும் அளவிற்கு, உ.பி. மாநில அரசு நிர்வாகம் நிலைமையைக் கையாளத் தெரியாமல், மேலும் மேலும் அம்மக்களுக்கு துன்பங்களைத் தந்துகொண்டே இருக்கிறது. மதச்சார்பின்மை வேடம் பூண்டிருந்த குள்ளநரி முலாயம்சிங்கும், அவர் மகனும் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவும் மக்கள் முன்னால் அம்பலப்பட்டு போயுள்ளனர். ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல்’ என்ற அவர்களது கேடுகெட்ட அணுகுமுறையால் உ.பி. மாநில முஸ்லிம்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். இது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை.

உ.பி.யின் மேற்குப் பகுதியில் ஒருகாலத்தில் ஜாட் இன மக்களும், முஸ்லிம்களும் அண்ணன் தம்பிகளாய் வாழ்ந்தனர். முன்னாள் பிரதமர் சரண்சிங் தலைமையில் விவசாயத் தொழிலாளர்களாய் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். இன்றும் அப்பகுதியில் செல்வாக்கோடு ‘லோக் தள்’ என்ற பெயரில் அரசியல் நடத்திவரும் அவரது மகனும் மத்திய அமைச்சருமான அஜீத் சிங்கும் அதேபோன்று நல்லெண்ணம் கொண்டவர்கள் தான்.

ஆனால் சமீபகாலமாக பாஜக விஷமிகள் அப்பகுதியில் செய்துவந்த நச்சுப்பிரச்சாரங்களால் இப்போதும் நாசம் ஏற்பட்டிருக்கிறது. கொலைகளையும், கலவரங்களையும் தயக்கமின்றி செய்திடும் அந்த பயங்கரவாதிகளுக்கு இப்போது மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்ற பொறுப்பில்லாமல்; வெட்கமில்லாமல் இக்கலவரத்தை முன்னின்று நடத்திய தன் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக ‘பாராட்டு விழா’ நடத்தியிருக்கிறது. ஒருவேளை இவர்கள் மத்தியில் ஆட்சியைப் பிடித்தால், இந்த நாடு என்னவாகும் என்பதை நினைத்தாலே குலை நடுங்குகிறது.

உறவுகளே... வடஇந்தியா கடும் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. வீடு வாசல்களில் வாழும் மக்களே சிரமப்படும் போது, அகதி முகாம்களில் வாழும் முஸாபர் நகர் மக்களின் நிலையோ பரிதாபமாக இருக்கிறது. நிவாரணமாய் கிடைத்த ஒரு போர்வையை எத்தனைப் பேர் போர்த்திக் கொள்ள முடியும்? வாய்ப்பூட்டி அழுவதைத் தவிர அவர்களுக்கு இப்போது வேறென்ன தெரியும்?

இக்கொடுமை காரணமாக அவர்களின் அருமை செல்வங்களான பச்சிளம் குழந்தைகள் வரிசையாக உயிரிழந்து வரும் செய்தி, நம் நெஞ்சங்களை தீப்பிடிக்க செய்கிறது. ஷார்பூர், புதானா, மலர்பூர் மற்றும் சங்கதி முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கதி, இனி வேறு குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது என இறைவனிடம் பிரார்த்திப்போம்.

வடஇந்தியாவில் மார்ச் இறுதி வரை குளிர்காலம் நீடிக்கும் என்று நினைக்கும்போது நம் கண்கள் குளமாகின்றன. உறவுகளே... அங்கே அகதி முகாம்களில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் ஊருக்குத் திரும்ப முடியாத சூழலை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் திட்டமிட்டே செய்து வருகிறார்கள். அவர்களின் சொத்துக்களுக்கு அவர்கள் இனி உரிமை கொண்டாடக்கூடாது என்றும், அரசு தரும் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணத்தைப் பெற்றுக் கொண்டு அதற்கு சம்மதம் என உறுதிப்பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகிறார்களாம். பாவம் ‘அவர்கள்’. கரும்பு வயல்களில் இனிக்க, இனிக்க வாழ்ந்தவர்கள். சர்க்கரை கிண்ணம் போல் வைத்திருந்த தங்கள் வயல்கள், திட்டமிட்டு பறிக்கப்படுவதை எதிர்க்கக்கூட வழியின்றி அழுகின்றார்கள். அதைவிடக் கொடுமை என்னவெனில், அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களை, வன இலாகாவுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி, ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் அவர்கள் மீதே பொய் வழக்குகளையும் போடுகிறார்களாம். இதற்குப் பெயர்தான் ‘வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவதோ’.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த அமைச்சர் ஷிவ்பால் யாதவ் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, தங்கள் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்ற நோக்கில், உண்மைக்கு மாறான ஒரு அறிக்கையைக் கொடுத்திருக்கிறது. அதில், கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவும், ஆனால் முஸ்லிம்கள் தங்கள் ஊர்களுக்கும் & வீடுகளுக்கும் திரும்ப மறுப்பதாகவும் ஒரு அபாண்டத்தைக் கூறியுள்ளார்கள். கலவரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவும் இதுவரை எதையும் உருப்படியாக செய்யவில்லை.

இதையெல்லாம் அறியும்பொழுது நமது கண்கள் உறக்கத்தை வெறுக்கின்றன. நமது மனமோ உதைக்கப்பட்ட பந்துபோல குதிக்கிறது. உறவுகளே... இப்படி முஸாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அகதி முகாம்களில் படும் துன்பங்களை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. உணவுக்கும் & நல்ல குடிநீருக்கும் வழியில்லை. தரமான கூடாரத்திற்கும் & சுகாதாரமான கழிப்பிடத்திற்கும் வசதியில்லை. மாற்று ஆடைகளுக்கும் & போர்வைகளுக்கும் வழியில்லை. எப்போது வீடு திரும்புவோம் என்பதற்கும் உத்தரவாதமில்லை. வழக்காடுவதற்கு நிதி இல்லை. தட்டிக்கேட்க நாதி இல்லை. இப்படி எத்தனையோ ‘இல்லை’கள் அவர்களை நிலைகுலைய வைத்துள்ளன.

பல சமுதாய அமைப்புகள் ஆரம்பத்தில் செய்த நிதியுதவிகளும் அவர்களுக்குப் போதவில்லை. பல தொண்டு நிறுவனங்களின் நிவாரணங்களும் தற்போது இல்லை.

இந்நிலையில் இந்த அவலங்களை நாடெங்கிலும் அம்பலப்படுத்துவதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) களமிறங்கி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடெங்கிலும் மறுவாழ்வு நிதியைத் திரட்டுகிறார்கள். நாடெங்கிலும் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக எதிர்ப்புணர்வைக் கடைப்பிடித்து, பொதுக்கூட்டங்களையும் நடத்துகிறார்கள். நமது துயரத்தில் பங்கேற்கும் அவர்களைப் போன்ற நல்லுள்ளங்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

உறவுகளே... சரி! நாம் என்ன செய்யப் போகின்றோம்... என்பதை நாடே எதிர்பார்த்திருக்கிறது. கலவரங்கள் நடைபெற்று மாதங்கள் சில கடந்துள்ள நிலையில்; அவர்களுக்கு தேவைகள் பல அதிகரித்துள்ள சூழலில்; அள்ளி அள்ளி கொடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

கோவை மக்களுக்கு வாரிக்கொடுத்த சொந்தங்களே... குஜராத் மக்களுக்கு வாரிக்கொடுத்த சொந்தங்களே... வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரிசா மக்களுக்கும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கும் வாரிக்கொடுத்த சொந்தங்களே... இப்போது முஸாபர் நகர் மக்களுக்காக வாரி வாரி வழங்கிட தயாராவீர்! வீதி வீதியாகச் செல்வோம்... வீடு வீடாக ஏறி இறங்குவோம்... கண்ணீரில் மிதக்கும் நம் மக்களுக்கு, கைக்குட்டைகளாய் மாறி அவர்களின் கண்ணீரைத் துடைப்போம்! எங்களுக்கு கதியில்லையே... என அம்மக்களை கதறி அழவிடாது, உங்கள் சகோதர சகோதரி நாங்கள் இருக்கிறோம் என உரத்து முழங்கி தமிழகத்திலிருந்து நிதிகளை சேகரித்து முஸாபர் முகாம்களுக்குச் செல்ல தயாராகுவோம். ஜனவரி 15 அதற்கான இறுதி தேதி என்பதை குறித்துக் கொள்ளுங்கள். அதுவரை ஓய்வின்றி நிவாரண நிதி தேடி களப்பணி ஆற்றுவோம் இன்ஷாஅல்லாஹ். கலங்கிய கண்களுடன்,

உங்கள் ஊழியன் ஜே.எஸ்.ரிபாயீ, தமுமுக தலைவர்

Saturday, January 4, 2014

சிந்திக்க வைத்த, தீனை நிலைநாட்டுவோம் இஸ்லாமிய மாநாடு





சிந்திக்க வைத்த,
தீனை நிலைநாட்டுவோம் இஸ்லாமிய மாநாடு

இறைவனின் கிருபையால் துபாய் மண்டல சோனாப்பூர் கிளையின் சார்பாக 3:1:2014 வெள்ளியன்று தீனை நிலைநாட்டுவோம் என்ற நோக்கத்துடன் இஸ்லாமிய மாநாட்டை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது,கிளை சகோதரர்களின் ஒத்துழைப்போடு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் துபாய் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனையின் அடிப்படையில் மாநாட்டு பணிகள் முடிக்கிவிடப்பட்டன,குணங்குடி முஹைதீன்,மேலப்பாளையம் அப்துல் ஹக்கீம் கடையநல்லூர் பாஷா உள்ளிட்ட சகோதரர்கள் சொனாப்பூரில் சகோதரர்கள் நிறைந்து உள்ள பல கேம்புகளுக்கு சென்று மாநாட்டில் கலந்துக் கொள்ளுமாறு தனிமனித அழைப்பு பணியில் இடுபட்டார்கள்,அதே போன்று மாநாடு நடைப்பெற்ற பலுதியா கேம்பில் கடையநல்லூர் அப்துல் அமீத் தலைமையின் கீழ் சகோதரர்கள் கடையநல்லூர் அலி,முஹம்மத்,மேலப்பாளையம் காஜா உள்ளிட்ட சகோதரர்களும் அழைப்பு பணியில் இடுப்பாட்டார்கள்,

இறைவனின் உதவியால் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் நிறைந்து வாழும் சோனாப்பூரில் பெரும்திரளான சகோதரர்கள் கிளையின் மாநாட்டில் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள்,

 இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் இப்ராஹிம் அவர்கள் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்கள்,துபாய் மண்டல தமுமுக தலைவர் சகோதரர் அதிரை அப்துல் ஹமீத் அவர்கள் தொடக்க உரைநிகழ்த்தினார்,இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அதிரை அப்துல் காதர் அவர்கள் முஸ்லிம்களின் அடையாளம் என்ற தலைப்பில் முதலில் உரைநிகல்த்தினார்கள்,அதை தொடந்து அபுதாபி முஹம்மது அபூதர் அவர்கள் இஸ்லாமும் சமுகப்பணியும் என்ற தலைப்பிலும் பேசினார்கள்,மக்ரிப் தொழுகைக்குப்பின் இஸ்லாமிய அழைப்பாளர் நாசர் அலிகான் அவர்கள் தீனை நிலைநாட்டுவோம் என்ற தலைப்பில் இறுதியாக உரைநிகழ்த்தினார்.

மாநாட்டில் பேசிய அனைத்து அழைப்பாளர்களின் உரைகளும் சிந்திக்க வைக்கக்கூடிய உரையாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது,மக்களை சிந்திக்க வைத்த இம்மாநாட்டில் அமீரக அலுவலக செயலாளர் இஸ்மத் யூனுன்,அபுதாபி மண்டல தலைவர் தாஜுதீன்,ஷார்ஜா மண்டல பொறுப்பாளர் அபுல் ஹசன்,அல்கூஸ் கிளையின் சகோதரர்கள் ஜின்னாஹ்,கொள்ளுமேடு ஜாகிர் உள்ளிட்ட சகோதரர்களும் பலுதியா கேம்பில் உள்ள இலங்கையை சார்ந்த சகோதரர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்,எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Thursday, January 2, 2014

தொண்டியில் திரண்டது சமுதாயம்!!! திணறியது காவல் துறை!!!

சமுதாய சொந்தங்களே...! ஒரு முக்கிய அறிவிப்பு:
==================================

ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று திமிரிய காவல்துறை, கட்டுக்கடங்கா கூட்டத்தை கண்டவுடன் அடங்கிப்போனது!!!

தொண்டியில் திரண்டது சமுதாயம்!!!
தி
றியது காவல் துறை!!!


விரைவில் புகைப்படங்கள்....


நமது மூத்த தலைவர் செ.ஹைதர் அலி உள்ளிட்ட நிர்வாகிகளை பொய் வழக்கில் கைது செய்ய முயலும் காவல்துறை துணை ஆய்வாளர் இந்திரா குமாரியை கண்டித்து இன்று மமக பொதுச்செயலாளர் தமிமுன் அன்
சாரி அவர்கள் தலைமையில் மிக எழுச்சியோடு தொண்டியில் நடைபெற்ற தமுமுக'வின் கண்டன ஆர்ப்பாட்டத்தின் வீடியோ இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 10:00 மணிக்கு
www.tmmk.tv
இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

சகோதரர்கள் அதிகமாக இதனை பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Wednesday, January 1, 2014

தமுமுக மூத்த தலைவர் S.ஹைதர் அலி சாகிப் மீது பொய் வழக்கு போட்ட காவல்(காவி)துறையை கண்டித்து



இன்ஷா அல்லாஹ் 2/1/14 அன்று தமுமுக மூத்த தலைவர் S.ஹைதர் அலி சாகிப் மற்றும் தமுமுக இராமநாதபுரம் மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாகிகள்
மீது பொய் வழக்கு போட்ட காவல்(காவி)துறையை கண்டித்து மாலை 3 மணி அளவில் தொண்டி பவோடி மைதானத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அண்ணன் தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இன்ஷா அல்லாஹ் அனைவரும் அனிதிரள்வோம் அநீதிக்கு எதிராக