Sunday, May 31, 2009

பரமக்குடி தமுமுகவின் ஆம்புலன்ஸ் சேவை

பரமக்குடி, மே 28: பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கடந்த இரண்டு மாதங்களாக இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இங்கு போதுமான வசதிகள் இல்லாததால் உடனே மதுரை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது. இதற்காக இந்த மருத்துவமனை ஆரம்பிக்கும்போது கொடுத்த ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுவும் பயன்படுத்தும் தேதி காலவதியாகி ஒதுக்கப்பட்டு விட்டது. இதற்காக முதுகுளத்தூர் அரசு மருத்துமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் பயன்படுத்தி வந்தனர்.

இந்த ஆம்புலன்ஸ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பழுதாகி மதுரை பணிமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை வரவில்லை.

இந்நிலையில் பரமக்குடி விபத்து மீட்புச் சங்கம், தமுமுக போன்ற தொண்டு நிறுவனங்கள் விபத்து நடந்த இடங்களுக்குச் சென்று காயமுற்றவர்களை இலவசமாக உடனே ஏற்றி வந்து மருத்துவமனைகளில் சேர்க்கின்றனர்.

மேல்சிகிச்சைக்கு மதுரை கொண்டு செல்வதற்கு டீசலுக்காக ரூ. 1000 வாங்குகின்றனர்.

மக்களின் அவசிய தேவைகளை செய்ய வேண்டிய அரசு இதுபோன்ற முக்கிய தேவையான உயிர்காக்கும் அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tuesday, May 26, 2009

துபையில் ரத்த தான முகாம்



துபை முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கடந்த 22.05.2009 அன்று மாபெரும் ரத்த தான முகாம் துபை அல்லிவாசல் மருத்துவமனையில் நடை பெற்றது. துபை முமுக நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். முஸ்லிமல்லாத சகோதரர்களும் இம் முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இம்முகாமில் முமுக துபை மண்டலத் தலைவர் அப்துல் ஹாதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். துபை மண்டல மருத்துவரணி செயலாளர் திருப்பந்துருத்தி அப்துல் ரவூப் மக்களை ஒருங்கிணைத்தார். மதுக்கூர் சேக் பரீத், கொள்ளுமேடு ஜாகிர் உசேன், மேலப் பாளையம் அப்துல் கரீம் ஆகிய சகோ தரர்கள் வாகன வசதிகளை சிறப்பான முறையில் செய்திருந்தார்கள்.

Saturday, May 23, 2009

சலிமுல்லாகான் கீழக்கரையில் பெற்ற வாக்கு

ராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான சலிமுல்லாகான் கீழக்கரையில் பெற்ற மொத்த வாக்குகளின் விபரங்கள்:2014.

மொத்த வாக்குகளின் விபரங்கள். 9612

சலிமுல்லாகான் 2nd இடம் - 2014

Sunday, May 17, 2009

ஃபினிக்ஸ் பறவையை போல் உயிர்த்தெழுவோம்

நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (அல்-குர்ஆன்)

நமது தாய்க்கழகமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், நம் முஸ்லிம் சமுதாயத்திற்காக பற்பல இன்னைகளையும், கரடுமுரடான பாதைகள் பலவற்றையும் கடந்து வந்து, கடந்த 14 ஆண்டுகளாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஒவ்வொரு துறையிலும் வெற்றி நடை போடுவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.

கல்வி விழிப்புணர்வு, பொதுநலசேவைகள், குருதிக்கொடைகள், உரிமைமீட்புப் போராட்டக்களங்கள் என்று நம் சமுதாய முன்னேற்றத்திற்காக நமது கழகம் ஆற்றிய அளப்பறிய தியாகங்களை தற்போது நினைவு கூறுமளவிற்கு எவரும் எளிதில் மறந்து விடக்கூடிய விஷயமன்று. தனது வெற்றிப்பயணங்களின் மற்றொரு மைல்கல்லான முஸ்லிம்களின் தன்னிகரற்ற சக்தியை அரசியல் களத்தில் நிலைநாட்டுவதற்காக, நமது சமுதாயத்தின் நீண்ட நாளைய உள்ளக்குமுறலை அரசியல் களத்திலும் மனிதநேய மக்கள் கட்சியாக பிரதிபளித்தது.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பொருளாதார சிக்கலுக்கிடையில், தமிழக அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில், முஸ்லிம்களின் கடந்த காலங்களைப் போல் திராவிடக்கட்சிகளிடம் ஒருசீட்டுக்காக மண்டியிட்டு மடிபிச்சைக் கேட்கும் அளவிற்கு இழிநிலையில் இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் அல்லாஹ்வின் துணையோடு, நம் சமுதாய அடலேறுகளின் அயராது உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு தனி அரசியில் களம் கண்டோம் - அல்ஹம்துலில்லாஹ்.

காரணம் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு இன்னல் என்றால் அது என் பிணத்தின் மீதுதான் நிகலும் என்ற புளித்துப்போன வீரவசனங்களை இச்சமுதாயம் இனியும் கேட்கத் தயாரில்லை என்பதை உணர்த்துவதற்காகவும்,

சட்டம் இயற்றும் அவைகளில் இடமில்லை என்றாலும் என் சவலைப்பிள்ளைகளுக்கு என் நெஞ்சத்தில் என்றும் இடமுண்டு என்ற பழைய பஞ்சாங்க பசப்பு வார்த்தைகளால் இனி முஸ்லிம்களை கோமாளிகளாக ஆக்கிட முடியாது என்பது நிரூபிப்பதற்காகவும்,

நமது சமுதாயத்தின் தன்மானம் காப்பதற்காக, திமுக, அதிமுக என்ற பணம் மற்றும் படை பலங்கள் பல கொண்ட கூட்டணிகளை எதிர்த்து 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் நாம் கால் பதித்தோம்.


ஜனநாயத்தை பணநாயகம் ஆட்சி புரியும் நம் தாய்த்திருநாட்டில், 2 மாதங்களில் ஒரு அரசியில் கட்சியை துவங்கி 3வது மாதத்தில் நாடளுமன்றம் செல்வது என்பது எட்டாக்கனி என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில், அராஜகமும் அடக்குமுறைகளும் அரங்கேறிய 2009 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிட்ட நான்கில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லையே என்ற எண்ணம் நம் சகோதரர்கள் பலருக்கு சோர்வை அளித்திருக்கலாம். அத்தகைய நல்ல உள்ளங்களுக்கு வல்ல அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்.

அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே முழுமையாக அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:112)

நிச்சயமாக எவர்கள் ''எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 46:13)

அன்புச் சகோதரா! ''மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும''; என்ற தாரக மந்திரத்தை இலட்சியமாக உணர்த்தும் மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். நமது இலட்சியம், நமது கொள்கை, நமது இறுதி இலக்கு அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெற்று ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் என்ற உயரிய சுவர்க்கத்தை அடைவதுதானே தவிர வேறில்லை. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் கால் பதிப்பதென்பது மக்களுக்கு சேவை செய்யவும், பின்தங்கியுள்ள நம் முஸ்லிம் சமுதாயத்ததை முன்னேற்றப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கான ஒரு முயற்சியே அல்லாமல் வேறில்லை.

அன்புச் சகோதரா! என்று நாம் மனிதநேய மக்கள் கட்சி என்ற தனி அரசியல் களம் கண்டோமோ அன்றே தமிழக முஸ்லிம்கள் திராவிடக்கட்சிகளுக்கு அடிமைகளல்ல என்று நிரூபித்ததில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

பணபலத்திற்கும், படைபலத்திற்கு இந்த சமுதாயம் அடங்கிவிடாது, மாறாக ஃபினிக்ஸ் பறவையை போல மரணத்திலிருந்து எதிர்நீச்சல் போடும் ஆற்றல் நமக்குண்டு என்பதை தமிழக அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்தலில் வெற்றி கண்டிருக்கிறோம்.

பதவி வெறிகொண்ட இத்திராவிடக் கட்சிகள் நம்பிரச்சாரத்தைக் கண்டு தோல்வி பயத்தால் நம்மை பேரம் பேசுமளவிற்கு, நம் சகோதரர்கள் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்துமளவிற்கு நம்மை கண்டு அஞ்சியதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

நாம் ஒரு கூட்டணியின் வெற்றிக்காக களம் இறங்கினால் 100 சதவிகித வெற்றிக்காக அவர்களக்காக உழைக்கவும் தெரியும், அதே நேரத்தில் அவர்கள் நம்மை கிள்ளுக் கீரையாக நினைத்தால் அவர்களையே எதிர்த்து களம் காணவும் முடியும் என்பதை உணர்த்தியதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

இதையெல்லாம் விட மேலாக, நம் சமுதாயம் மேலோங்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுக்காக மட்டுமே, தூய எண்ணத்தோடு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பாடுபட்டதற்கு, அயறாது உழைத்ததற்கு நாளை மறுமையிலே வல்ல அல்லாஹ்விடம் நற்கூலி பெறவிருப்பதை எண்ணித்தான் மிகவும் அகமகிழ்கிறோம்.

அன்புச் சகோதரா! இவ்வுலகில் வெற்றி தோல்லி என்பதெல்லாம் இறைவிசுவாசங்கொண்ட முஸ்லிம்களாகிய நமக்கு ஒரு பொருட்டல்ல. நாம் ஒரு விஷயத்தில் தோல்வியடைந்தால் நாம் தவறான நிலையில் இருக்கிறோம் என்பது பொருளல்ல. இதுதான் இஸ்லாம் நமக்குணர்த்தும் உன்னதமான பாடம்.

அல்லாஹ்வின் முழுபாதுகாப்பிலும், வஹியின் தொடர்பிலும் இருந்த அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உஹத் போர்க்களத்தில் தோல்வியடைந்தார்கள், அவர்கள் பற்கள் உடைக்கப்பட்டு அவர்களின் திருமுகம் கோரையாக்கப்பட்டது. இன்னும், இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக 13 ஆண்டுகள் மக்காவில் உழைத்த அண்ணலார் அவர்கள், இஸ்லாமிய அரசையோ, முஸ்லிம்களை பாதுக்ககாக்கும் கட்டமைப்பையோ உருவாக்க முடியவில்லை, இறுதியில் மக்காவை விட்டே அடித்து விரட்டப்பட்டார்கள்.

வெளிப்படையாக தோல்விபோன்று காட்சியளித்த அந்த சம்பவங்களை வைத்துக் கொண்டு இஸ்லாம் தவறான சிந்தாந்தம், முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை நிலை நாட்டுவதில் தோல்வியடைந்தார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா?(நவ்வூதுபில்லாஹ்). அவைகளெல்லாம் தோல்விகளல்ல. மாறாக பின்னர் வரவிருந்த பல வெற்றிகளை சுவைக்கும் அளவிற்கு முஸ்லிம்களை புடம் போட்ட தங்கங்களாக மாற்றிய அல்லாஹ்வின் சோதனைகள் அல்லவா அவைகள். இவ்வாறே முஸ்லிம்களாக நாம் பலவகையிலும் சோதிக்கப்படுவோம் என்று வல்ல இறைவன் தன் திருமறையில் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறான்.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நன்மாராயங் கூறுவீராக!. பொறுமை உடையோராகிய அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 2: 155-157)

முஃமின்களே! உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறைவனிடம் பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்-குர்ஆன் 3: 186)


மக்களே! தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்பார்கள், நாம் மேற்குறிப்பிட்டது போன்று நாம் அடைந்திருக்கும் பல வெற்றிகளை வருகின்ற சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு படிக்கற்களாக மாற்றுவோம் - இன்ஷா அல்லாஹ். நம் சக முஸ்லிம் சகோதரர்களின் நிந்தனைகளை அலட்சியம் செய்வோம். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம் சமுதாயமாக இருக்கட்டும். இனி தமிழக அரசியல் அரங்கின் நம் அடுத்த இலக்கு சட்டம் இயற்றும் அவையான தமிழ சட்டமன்றத்தை வெற்றி கொல்வதே. அதற்காக இன்றே உனது பணிகள் தொடரட்டும், வாழ்த்துகிறது மனிதநேய மக்கள் கட்சி.

Saturday, May 16, 2009

மநாதபுரத்தில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்:

மநாதபுரத்தில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்:




சென்னை `ஐஸ்அவுஸ்' தாக்குதலை கண்டித்து
ராமநாதபுரத்தில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்: கல்வீச்சில் போலீசார் காயம்
தி.மு.க. கொடியை எரிக்க முயன்றதால் பரபரப்பு


ராமநாதபுரம், மே.16-

ராமநாதபுரத்தில் நடந்த த.மு.மு.க. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., கொடியை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டகாரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீசார் காயம் அடைந்தனர்.

ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது மத்திய சென்னை தொகுதியில் உள்ள ஐஸ் அவுஸ் வாக்குச்சாவடி பகுதியில் தி.மு.க.வினருக்கும் மனித நேய மக்கள் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மனிதநேய மக்கள்கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு மனித நேய மக்கள் கட்சி மற்றும் த.மு.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் தலைமையில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் சமூக ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம், இந்திய தவ்ஹித் ஜமாத் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு தி.மு.க.வை கண்டித்து கோஷமிட்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் 2 பேர் திடீரென தி.மு.க. கொடியை தீயிட்டு எரிக்க முயன்றனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். இதையடுத்து ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கல்வீச்சு

அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்க தொடங்கினர். இதில் பரமக்குடி சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியனுக்கு மண்டை உடைந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் காயம் அடைந்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர். அப்போது மாவட்ட செயலாளரும் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான சலிமுல்லாகான் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை அமைதிப்படுத்தினார்.

Wednesday, May 13, 2009

மறுஓட்டுப் பதிவு நடத்த வேண்டும் ம.ம.க கோரிக்கை










மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருவல்லிக்கேணியில் திமுக பகுதி செயலாளரும் மற்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காமராஜ், திமுகச் சேர்ந்த சேரன் ஆகியோர் தலைமையில் திமுக குண்டர்கள் 200க்கு மேற்பட்டோர் திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி வாக்குச்சாவடி எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட்ட பத்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக தகவல் வந்ததையடுத்து ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் அங்கு சென்றுள்ளார்.


அப்போது திமுக குண்டர்கள் வீச்சரிவாள், கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மனிதநேய மக்கள் கட்சியின் பிரமுகர்கள் பயணம் செய்த கார்களை (Safari Car (Ash Colour) No.PY01 AA 1977 & Bolero Car (White Colour) No. TN 21 AX 9001) துவம்சம் செய்துவிட்டு, கார்களில் இருந்த திரு. ஜாகிர் உசேன், ஹசன், மீரான் மொய்தீன், காஜா, பாரூக், சலாவுதீன், ஹைதர் அலி, வசீம், ஜாகிர் உசேன் மற்றும் மூஸா உள்ளிட்ட நபர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது எமது கட்சி வேட்பாளரைக் கண்டவுடன் அவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் மேற்கண்ட ஆயுதங்களுடன் அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். உடனே கட்சிப் பிரமுகர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற ஹைதர் அலி அவர்கள், மத்திய சென்னை தேர்தல் அதிகாரியிடம் மேற்கண்ட அசம்பாவிதங்கள் குறித்து எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளார். மேலும் காவல்துறையிடமும் அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் ஆளுங்கட்சியினர் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.





இதனிடையே கலவரச் சூழலை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட திமுக குண்டர்கள், மேற்கண்ட 10 வாக்குச் சாவடிகளிலும் எண்ணற்ற கள்ள ஓட்டுக்களை போட்டுள்ளனர். மேலும் கொடிய ஆயுதங்களுடன் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி பொதுமக்களை உள்ளே விடாமல் தடுத்து தொடர்ச்சியாக கள்ள ஓட்டுக்களைப் போட்டுள்ளார்கள். இதனால் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குள் செல்ல பயந்து தங்களுடைய வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த முடியவில்லை.


இந்த அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த ஐஸ்'ஹவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட காவல்துறையினர் மனிதநேய மக்கள் கட்சியினருக்கு எதிரான வன்முறையை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தேர்தல் அதிகாரிகளும் அலுவலர்களும் திமுகவினருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்.


இச்சூழ்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் வன்முறைகள் நடந்தேறிய வாக்குச் சாவடிகள் எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட பத்து வாக்குச் சாவடிகளில் மத்திய காவல் படை உதவியுடன் மறு தேர்தல் நடத்துமாறும், அதுவரை மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்குமாறும், மேலும் திமுக குண்டர்களுக்கு ஆதரவாகவும், மனிதநேய மக்கள் கட்சிக்கு எதிராகவும் செயல்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட திமுக குண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறும் மாநில தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.



தமுமுக மற்றும் மமக தலைமை நிர்வாகிகள் ஓட்டளித்த காட்சிகள்


வாக்குச் சாவடிகளை சோதனை செய்யும் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்









மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளரும் தமுமுகவின் பொதுச் செயலாளருமான செ. ஹைதர் அலி முத்தால்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் ஓட்டளித்தார்.



இராமநாதபுரம் ம.ம.க வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் இராமநாதபுரம் எம்.எஸ்.கே உயர்நிலைப் பள்ளியில் வாக்களித்த காட்சி

Tuesday, May 12, 2009

கீழக்கரையில் இறுதிநாள் பிரச்சார நேற்று ராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகானை ஆதரித்து






11/05/2009 கீழக்கரையில் நேற்று ராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் ஆதரித்து பிரசாரம் சைதனர் . மனித நேயத்துடன் செயல்படும் இந்த அமைப்பு மனிதநேய மக்கள் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த தொண்டுகள் தொடர தொகுதியில் போட்டியிடும் சலிமுல்லாகானுக்கு ரயில் என்ஜின் சின்னத்தில் வாக்களியுங்கள்

எந்தவித எதிர்பார்ப்புமின்றி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை : ம .நே. ம. க., வேட்பாளர் சலிமுல்லாகான் பேட்டி

எந்தவித எதிர்பார்ப்புமின்றி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை : ம .நே. ம. க., வேட்பாளர் சலிமுல்லாகான் பேட்டி

எந்த எதிர்பார்ப்புமின்றி மனிதநேய மக்கள் கட்சி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருவதாக அதன் ராமநாதபுரம்வேட்பாளர் சலிமுல்லாகான் தெரிவித்தார்."தினமலர்' நிருபருக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் எங்கள் கட்சியினரை அன்புடன் வரவேற்று, தங்களது ஓட்டு மனித நேய மக்கள் கட்சிக்கே என கூறியுள்ளனர். எங்கள் கட்சி தொண்டர்கள் தன்னலம் பாராமலும், பசியறியாமலும் ஆற்றிய பணிகளால் இன்று தொகுதி முழுவதும் மக்கள் மனித நேய மக்கள் கட்சி பற்றி பேசி வருவதை காணமுடிகிறது.எனது வெற்றி உறுதி என்பதால் மற்ற கட்சியினரிடம் எங்களை பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.என் மேல் தவறான குற்றச்சாட்டுகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு முகவரியில்லாமல் வினியோகிக்கின்றனர். குற்றச்சாட்டு கூறுபவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் பொது மேடையில் விவாதிக்க தயாரா? எனது பொது வாழ்க்கையில் நான் யாருக்கும் எப்போதும் கெடுதல் செய்யவில்லை . என் மீது கூறப்பட்ட குற்றசாட்டை நிருபித்தால், நான் வெற்றி பெற்றால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார்.மனித நேய மக்கள் கட்சி கடந்த 14 ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது. 2008 முதல் நடப்பு வரையில் மட்டும் 18 பேர்களுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் ஆம்புலன்ஸ் சர்வீஸ் இலவசமாக செய்துள்ளோம். மாவட்டம் முழுவதும் 10 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவைக்காக நிறுத்தி வைத்துள்ளோம். கண்சிகிச்சை முகாம்கள், பொது மருத்துவ முகாம்கள், சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் போன்ற 20க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தி போலியோ விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியுள்ளோம்.ராமநாதபுரம், மண்டபம், பரமக்குடி, போகலூர், கிளியூர், புதுமடம், வேதாளை, பனைக்குளம் போன்ற பகுதிகளில் 564 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.37 லட்சம் கல்வி உதவிகள் வழங்கியுள்ளோம். நோன்பு பெருநாளுக்கு புத்தாடை, உணவு பொருட்கள் என ரூ.7 லட்சம் மதிப்பில் தானம் செய்யப்பட்டுள்ளது.இதுவரை ராமநாதபுரம், மண்டபம், வேதாளை ஆகிய பகுதிகளில் கல்வி, மருத்துவம், சிறுதொழில் துவங்க நகை ஈடாக பெற்று வட்டியில்லாமல் கடன் வழங்கியுள்ளோம்.நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால், அனைவருக்கும் கல்வி கிடைக்க கல்வி நிதிஉதவி வழங்க முயற்சிப்பேன். மீனவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் வட்டியில்லா கடன் வழங்கும் வங்கியை துவங்குவேன்.கடல் அட்டை மீதான தடையை நீக்க குரல் கொடுப்பேன். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். 6 சட்டசபை தொகுதிகளிலும் தொழிற்சாலை துவங்க நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில் சாலை வசதிகள், ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கீழக்கரை, சாயல்குடி, தூத்துக்குடி செல்லும் வகையில் ரயில் போக்குவரத்து கொண்டு வர முயற்சி செய்வேன்.கடல்சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கடல்சார் பல்கலை., கொண்டு வர முயற்சிப்பேன். எங்கள் கட்சி கடந்த 14 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்புமின்றி மக்களுக்காகவே சேவை செய்து வருகிறது. தற்போது முதன்முறையாக அரசியல் ரீதியாக மக்களை சந்திப்பதால், மக்கள் எங்களை முழுமனதோடு ஏற்று கொண்டுள்ளனர்.எங்களுடன் புதிய தமிழகம் கட்சியினரும் சேர்ந்து பணியாற்றுவது எங்களுக்கு வலு.அபிராமம், வீரசோழன், பார்த்திபனூர், பரமக்குடி, எமனேஸ்வரம், பெரியபட்டினம், கமுதி, வேதாளை, மண்டபம், ராமேஸ்வரம், தொண்டி, மணமேல்குடி, மேலபுதுக்குடி, காஞ்சிரங்குடி, நரிப்பையூர், சிக்கல் வாலிநோக்கம் உள்ளிட்ட அனைத்து ஜமாத்துகளிலும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதுடன், எங்களின் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளனர். மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு சலிமுல்லாகான் கூறினார்.

Monday, May 11, 2009

கீழக்கரையில் நடைபெற்றது மனித நேய மக்கள் கட்சியின் தெரு முனை பிரசாரம்




10/5/2009 கீழக்கரையில் நடைபெற்றது மனித நேய மக்கள் கட்சியின் தெரு முனை பிரசாரம்

Saturday, May 9, 2009

கீழக்கரை s,m பாக்கர் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் ஆதரித்து பிரசாரம் சைதனர்





இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் ஆதரித்து பிரசாரம் சைதனர்

Friday, May 8, 2009

07/05/2009 இன்று கீழக்கரையில் நடைபெற்றது மனித நேய மக்கள் கட்சியின்

07/05/2009 இன்று கீழக்கரையில் நடைபெற்றது மனித நேய மக்கள் கட்சியின் . இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்களை ஆதரித்து

சம்சுதீன் சைட் ,P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக், ழக் கரை முஸ்லிம் பஜாரில் நடந்த தெரு முனை பிரச்சாரப் கீழக்கரை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் ஆதரித்து பிரசாரம் சைதனர்

னித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகான் ராமேஸ்வரம் உச்சிப்புளி பகுதியில் பிரசாரத்தில் பேசும்போது, "மீனவர்களின் முக்கிய பிரச்னைகளை தீர்க்க முழு முயற்சி எடுப்பேன். மீனவர்களை தாக்கிய இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்து தனி கோர்ட்டில் விசாரணை நடத்த வலியுறுத்துவேன். கடல் அட்டை மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுப்பேன். ராமேஸ்வரத்தில் குடிநீர், கழிவு நீர் கால்வாய், சாலை வசதி போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க முயற்சி எடுப்பேன்' என்றார்.

Wednesday, May 6, 2009

கீழக்கரைல விடு விடு வாக்கு சேகரிப்பு






ராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகானை ஆதரித்து, கீழக்கரை பொறுப்பாளர் , நிர்வாகிகள் இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் விடு விடு வாக்கு சேகரிப்பு,

கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பின் மூலம் மனித நேய தொண்டுகளை மனிதகுலத்துக்கு சிறப்பாக செய்து வந்தோம். ஜனவரியில் நடந்த கோர விபத்தின்போதும், சுனாமி கொந்தளிப்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் சேவை செய்தோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு எங்கள் அமைப்பினர் ரத்ததானம் வழங்கினர்.

அவசர காலத்திற்கு ரத்தம் தேவைப்படும் போதெல்லாம் முதலில் எங்களை நாடுவதும், முந்திச்சென்று ரத்ததானம் செய்வதும் தமிழ்நாடு முஸ்லீம் முன் னேற்ற கழகமாகும். மனித நேயத்துடன் 1 லட்சத்துக்கும் மேலான ஏழை-எளியவர்களுக்கு மக்கள் தொண்டாற்ற உள்ளோம். மனித நேயத்துடன் செயல்படும் இந்த அமைப்பு மனிதநேய மக்கள் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த தொண்டுகள் தொடர தொகுதியில் போட்டியிடும் சலிமுல்லாகானுக்கு ரயில் என்ஜின் சின்னத்தில் வாக்களியுங்கள்.



Monday, May 4, 2009

தமுமுக தலைவர் கீழக் கரை பிரச்சாரம்

இராமநாதபுரத்தில் தமுமுக தலைவர் பிரச்சாரம்

ராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகானை ஆதரித்து த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா கீழக் கரை முஸ்லிம் பஜாரில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்," குஜராத் கலவரத்துக்கு எதிர்ப்பு கூட தெரிவிக்காதவர் கருணாநிதி. தி.மு.க., தருவதாக இருந்த ஒரு சீட்டுக்கு ஆசை பட்டிருந்தால் தி.மு.க., வுக்கு நாங்கள் அடிமையாகிருப்போம். சென்னையில் தி.மு.க., வேட்பாளர்கள் ஜெயிப்பதே முஸ்லிம்கள் ஓட்டுகளால் தான்.அ.தி.மு.க., மக்களை ஏமாற்றும் கட்சி'என்றார்.





மாவட்ட செயலாளர்,மாவட்ட தலைவர்,மாவட்ட பொருளாளர்,திருப்புல்லாணி ஒன்றிய அளவில் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் கீழக்கரை பொறுப்பாளர் , நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் ஆதரித்து பிரசாரம் சைதனர்

ம.ம.கவின் எழுச்சி பிரச்சாரப் பாடல்கள் வெளியீடு

ம.ம.கவின் எழுச்சி பிரச்சாரப் பாடல்கள் வெளியீடு

கோவையில் பொள்ளாச்சி ம.ம.கவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டமும், ம.ம.கவின் அரசியல் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ம.ம.க வேட்பாளரை அறிமுகப் படுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டார்.

Saturday, May 2, 2009

சாதிப்பார் சலிமுல்லாஹ் கான்

சாதிப்பார் சலிமுல்லாஹ் கான்

இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி முஸ்லிகள் அதிகமாக வாழக் கூடிய தொகுதிகளில் ஒன்று. மொத்த வாக்காளர் களில் 20 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழக்கூடிய இத்தொகுதிகயில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியிலும் ஹஸன் அலி எனும் முஸ்லிம் ஒருவரே சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் சலிமுல்லாஹ் கான் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சலிமுல்லாஹ் கான் தொகுதியில் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். கல்வி உதவிகள், ஆம்புலன்ஸ் சேவை, இரத்ததானம் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவைகளுக்கு பின்புலமாக இருந்து முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களிடமும் நன்கு அறிமுகமானவர். சலிமுல்லாஹ்கான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே இராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க, ம.ம.க தொண்டர்கள் உற்சாகத்துடன் பிரச்சார களத்தில் இறங்கி விட்டனர். ராமநாதபுரம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர் அணிகளைப் பொறுத்தவரை தொகுதியில் 30 சதவிகிதம் இருக்கும் முக்குலத்தோர் களின் வாக்குகளை நம்பி திமுக சார்பில் நடிகர் ரித்திஷ், அதிமுக சார்பில் சத்திய மூர்த்தியும், பாஜக சார்பில் திருநாவுக்கர சரும் களமிறங்கி உள்ளனர். இதனால் முக்குலதோர்களின் வாக்கு சிதற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தே.தி.மு.க சார்பில் சிங்கை ஜின்னா என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த முறை கடலாடியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்டு தோல்வி யடைந்தவர். மற்றபடி சமுதாய மக்களிடமோ தொகுதியிலோ பெரிய அளவு அறிமுகம் இல்லாதவர்..


திமுக வேட்பாளர் ரித்திஷ் பணபலம் உடையவராக இருந்தாலும் சீட்டு கிடைக்காத விரக்தியிலும், ரித்திஷின் வளர்ச்சியிலும் பொறாமை கொண்ட திமுகவினரே ''உள்குத்து'' வேலைகளில் இறங்கிவிட்டதால் ரித்திஷ் கடும் மன வெறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. பசும்பொன்னில் நடைபெற்ற கோஷ்டி மோதல் வழக்கில் தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருவதாலும் அவரது இமேஜும் சரிந்துள்ளது. பிரச்சாரமும் தொய்ந்துள்ளது.


அதிமுக சார்பில் சத்திய மூர்த்தி ஒரு பக்கம் பிரச்சார வேகத்தை கூட்டினாலும் ஊழல் கறை படிந்தவர் என்பதால் முக்குலத்து மக்களிடம் கூட அதிருப்தி நிலவுகிறது. மேலும், பா.ஜ.க சார்பில் களமிறங்கியுள்ள திருநாவுக்கரசரும் முக்குலத்தோரையே நம்பி இறங்கியுள்ள தால் முக்குலத்தோர் வாக்கு வங்கி பங்கு போடப்படுவது தவிர்க்க முடியாது என்றே கருதப் படுகிறது.


மேலும் பாஜகவின் திருநாவுக்கரசருக்கு அறந்தாங்கி தொகுதியில் மட்டுமே சிறிதளவு செல்வாக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2006 சட்டமன்ற தேர்த­ல் அறந்தாங்கியில் பாஜக பெற்ற வாக்கு 14,713. மொத்தமாக அதே சமயம் ஒட்டு மொத்தமாக இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி களில் பாஜக பெற்ற மொத்த ஓட்டுகளே 27,659 தான். இந்த திருநாவுக்கரசர்தான் வெற்றி பெற்று விடுவார் என்று சில முஸ்லிம் லட்டர் பேடுகள் பூச்சாண்டி காட்டி முஸ்லிம்களை திமுகவுக்கு ஆதரவாகவும், மமகவுக்கு எதிராகவும் தூண்டி வருகின்றன. பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்துள்ள சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமாருக்கு இராமநாதபுரம் நாடார் மக்களிடையே பெரிய செல்வாக்கு ஏதும் இல்லை. அதனால் துரோகிகளின் பிரச்சாரத்தை நம்பாமல் முஸ்லிம் சமுதாயம் ஒட்டு மொத்த வாக்கையும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கே நிச்சயம் அளிக்கும்.


மேலும் முக்குலத்தோர், த­த், முஸ்லிம் என்ற வரிசையில் தொகுதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் த­த் மக்கள் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல தலித் அமைப்புகள், புதிய தமிழகம் ஆகியவை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாஹ் கானுக்கு ஆதரவு கேட்டு களத்தில் இறங்கியுள்ளனர். கூடவே மீனவ அமைப்புகளும், கிறித்தவ அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் தேர்தல் களத்தில் முன்னணியில் நிற்கிறது.


தற்போது அதிமுகவின் சத்திய மூர்த்திக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சலிமுல்லாஹ்கானுக்கும் இடையே தான் பலத்த போட்டி நடந்து வருகிறது. எனினும் தன்மானத்தை மீட்டெடுக்க வேண்டும். துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மனிதநேய மக்கள் கட்சியினர் சலிப்பில்லா மல் ஆற்றும் களப்பணியால் வெகுமக்கள் ஆதரவோடு சலிமுல்லாஹ் கான் வெற்றிக் கொடி ஏற்றுவது நிச்சயம்.

Friday, May 1, 2009

கீழக்கரையில் பேரா.டாக்டர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் வாக்கு சேகரிப்பு

30/4/2009 இன்று கீழக்கரையில் நடைபெற்றது மனித நேய மக்கள் கட்சியின் . இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்களை ஆதரித்து தற்போது மயிலாடுதுறையில் ம.ம.க வேட்பாளராக களமிறங்கி இருக்கும் தமுமுக தலைவர் பேரா.டாக்டர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் வாக்கு சேகரிப்பு தொகுதியின் அனைத்து மக்களின் ஆதரவும், உற்சாக வரவேற்பும் கிடைத்துள்ளது P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக்,மாவட்ட செயலாளர்,மாவட்ட தலைவர்,மாவட்ட பொருளாளர்,திருப்புல்லாணி ஒன்றிய அளவில் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் கீழக்கரை பொறுப்பாளர் , நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் ஆதரித்து பிரசாரம் சைதனர்

இராமநாதபுரத்தில் தமிமுன் அன்சாரி பிரச்சாரம்

இராமநாதபுரத்தில் தமிமுன் அன்சாரி பிரச்சாரம்