Thursday, May 30, 2013

சென்னை-இராமேஸ்வரம் விரைவு இரயில் நேரத்தை மாற்றக் கோரி தெற்கு இரயில்வேக்கு எம்.எல்.ஏ. கடிதம்

சென்னை-இராமேஸ்வரம் விரைவு இரயில் நேரத்தை மாற்றக் கோரி தெற்கு இரயில்வேக்கு எம்.எல்.ஏ. கடிதம்

சென்னை தெற்கு இரயில்வே, தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் மற்றும் தலைமை ரயில் இயக்க மேலாளர் அவர்களிடம் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

சென்னை-இராமேஸ்வரம் விரைவு ரயில் (எண்: 16713) தினமும் மாலை 5 மணியளவில் புறப்பட்டு மாவட்டத் தலைநகரான இராமநாதபுரத்திற்கு இரவு 2:55 மணிக்கும், இராமேஸ்வரத்திற்கு அதிகாலை 4:45 மணிக்கும் வந்தடைகிறது. அதேபோல் சென்னை-இராமேஸ்வரம் விரைவு ரயில் (எண்:16701) சென்னையிலிருந்து இரவு 9:40 மணிக்கு புறப்பட்டு இராமநாதபுரத்திற்கு காலை 9:56 மணிக்கும், இராமேஸ்வரத்திற்கு முற்பகல் 11:40 மணிக்கும் வந்தடைகிறது. இந்த இரு இரயில் வருகை நேரமும் பயணிகளுக்கு மிகுந்த சிரமப்பத்தை ஏற்படுத்துகிறது, முதல் விரைவி இரயிலில் இராமநாதபுரத்திற்கு வருகை தரும் பயணிகள் இரவு 2:55 மணியிலிருந்து காலை 5 மணிவரை பேரூந்துக்காக இரயில் நிலையத்திலேயே காத்துக்கொண்டிருக்கவேண்டியுள்ளது. அதேபோல் இரண்டாவது இரயிலில் இராமநாதபுரத்திற்கு வருகை தருபவர்கள் சுமார் 12 மணியளவில் இரயில் நிலையத்தை விட்டு வெளியேறுவதால் பயணிகளின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே இரயில்வே துறை இரண்டு விரைவு இரயில்களில் ஏதாவது ஒரு இரயில் காலை 7 மணியளவில் இராமநாதபுரத்தை வந்தடையும்படி நேரத்தை மாற்றியமைக்க கேட்டுக்கொள்கிறேன்

Tuesday, May 28, 2013

இராமநாதபுரம சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இராமநாதபுரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இராமநாதபுரம் முகவை ஊரணியில் உள்ள ஆகாய தாமரை, செடிகளை உடனே அகற்றி கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், நகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ உத்தரவு:

E-mailPrintPDF
இராமநாதபுரம் மே 28: மாவட்ட தலைநகரான இராமநாதபுரம் நகரில் பழமையான பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் முகவை வரும் முகவை ஊரணியில் உள்ள ஆகாய தாமரைகள்,செடி கொடிகளை உடனே அகற்றி கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என இராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உத்திரவிட்டார்.
இராமநாதபுரம் அரண்மனையின் பின்புறமுள்ள பழமையான முகவை ஊரணி உள்ளது. இந்த ஊரணி நகரின் குடிநீர் தேவையையும்,நிலத்தடி நீர் மட்டத்தையும் பாதுகாத்து வருகிறது. இந்நிலையில் அண்மைக் காலமாக இந்த ஊரணியில் ஆகாய தாமரைகளும், செடி கொடிகளும் முழுமையாக வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் இராமநாதபுரம் நகரின் குடிநீர் தேவை மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் எம்.எல்.ஏ விடம் நேரில் முறையிட்டனர். அப்போது அருகே உள்ள ஊராட்சி பகுதிகளிருந்து கழிவு நீரும் இந்த ஊரணி பகுதிக்குள் வாய்க்கால் மூலம் விடப்படுவதாகவும் முறையிட்டனர்.இதனை தொடர்ந்து இந்த ஊரணிப் பகுதியை இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் (பொ) மதைவானனுடன் சென்று எம்.எல்.ஏ பார்வையிட்டார். அப்போது ஊரணியை ஆக்கிரமித்துள்ள அனைத்து ஆகாய தாமரைகளையும் கழிவு நீர் கலப்பதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்திரவிட்டார். அதற்கு பதிலளித்த நகராட்சி ஆணையாளர் இராமநாதபுரம் நகரின் பிரதான ஊரணியை பாதுகாக்கவும் செடி கொடிகளை அகற்றவும் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

த.மு.மு.க.மாவட்ட செயலார் பி.அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், இராமநாதபுரம் ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பாகர் அலி, பசீர் அகமது, அகமது இப்ராஹிம், பரக்கத்துல்லா, பிஸ்மி (எ)நசுருதீன், ஜஹாங்கீர் அலி, அப்துல் ரஹ்மான் மற்றும் த.மு.மு.க., ம.ம.க. வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
LAST UPDATED ( MONDAY, 27 MAY 2013 19:49 ) 

இராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ.ஜவாஹிருல்லா திடீர் ஆய்வு:

E-mailPrintPDF
இராமநாதபுரம் மே 26. இராமநாதபுரம சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக அவர் பஸ் நிலைய நுழைவாயில் பகுதியில் உள்ள சாலை ஓர கடைகளை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார். அங்கு வந்த பயணிகளிடம் கழிப்பறையை பயன்படுத்த எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்பதை கேட்டறிந்தார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலித்த கட்டணக் கழிப்பறை ஊழியரை எச்சரித்து கூடுதலாக வசூல் செய்த கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி வாங்கி கொடுத்தார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறையும் பார்வையிட்டு அதில் உள்ள குறைபாடுகளை உடனே சீர் செய்ய வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.
அப்போது பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக அதிகாரிகளும்,ஊழியர்களும் பஸ் நிலையத்திற்குள் அதிவேகமாக வந்து செல்லும் கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் களாலும் பஸ் நிறுத்தும் ரேக்குகளில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களாலும் தினசரி விபத்துக்கள், இடையூறுகள் ஏற்படுவதாக எம்.எல்.ஏ விடம் முறையிட்டனர்.
பின்னர் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்திற்கு சென்று முறையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தவிர்த்துக் கொள்ளும்படி உத்திரவிட்டார். பஸ் நிலைய பின்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரையும் குப்பைகளையும் உடனே அகற்றி சுகாதாரம் பேணும்படி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். அப்போது நகராட்சி ஆணையாளர் (பொ) மதிவாணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
த.மு.மு.க.மாவட்ட செயலாளர் பி.அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், இராமநாதபுரம் ஒன்றிய, நகர் நிர்வாகிகள் பாகர் அலி, பசீர் அகமது, இப்ராஹிம், பரக்கத்துல்லா பிஸ்மி (எ) நசுருதீன், ஜஹாங்கீர் அலி அப்துல் ரஹ்மான் மற்றும் த.மு.மு.க.,ம .ம.க.வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
LAST UPDATED ( MONDAY, 27 MAY 2013 19:52 )

 


இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு. நோயாளிகள்,அதிகாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

E-mailPrintPDF
இராமநாதபுரம் மே 26: இராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இராமநாதபுரத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், பார்வையாளர்களையும் அங்கு பணி புரியும் அதிகாரிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
முன்னதாக மருத்துவமனைக்கு சென்ற எம்.எல்.ஏ வை இணை இயக்குனர் மரு.மீனாட்சி சுந்தரம், நிலைய மருத்துவ அதிகாரி மரு.சகாய ஸ்டீபன் ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு, நவீன எக்ஸ்ரே பிரிவு, மற்றும் சி.டி.ஸ்கேன் பிரிவு, நரம்பியல் பிரிவு ஆகியவற்றையும் பார்வையிட்டார். அங்குள்ள கழிப்பறையில் காணப்படும் குறைகள் மற்றும் கழிவு நீர் தேங்குவது குறித்த குறைபாடுகள், தேவைகள் சீர் செய்யப்பட வேண்டியது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்படி உத்திரவிட்டார்.
பின்னர் மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இணை இயக்குனர் மரு.மீனாட்சி சுந்தரம், நிலைய கண்காணிப்பாளர் மரு.சகாய ஸ்டீபன் ராஜ் ஆகியோருடன் எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார். அப்போது இணை இயக்குனர், இம்மருத்துவமனையை தரம் உயர்த்தும் வகையில் விரைவில் உள்நோயாளிகள் பிரிவில் பொதுவான படுக்கைகள் 100ம் மனநோய் பிரிவில் கூடுதலாக 50ம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
த.மு.மு.க.மாவட்ட செயலாளர் பி.அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், இராமநாதபுரம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பாகர் அலி, பசீர் அகமது, அகமது இப்ராஹிம், பரக்கத்துல்லா, பிஸ்மி (எ) நசுருதீன், ஜஹாங்கீர் அலி, அப்துல் ரஹ்மான் மற்றும் த.மு.மு.க. ம.ம.க.வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இராமநாதபுரம் அரண்மனை,கேணிக்கரை பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைப்பது குறித்து எம்.எல்.எ.ஆய்வு.

E-mailPrintPDF
இராமநாதபுரம் மே 27: இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட அரண்மனை மற்றும் கேணிக்கரை பகுதிகளில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைப்பது குறித்து இராமநாதபுரம் தொகுதி MLA, எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆய்வு மேற்கொண்டார்.
இராமநாதபுரம் நகரில் பிரதான பஸ் நிறுத்தமான அரண்மனை பகுதியில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் குறிப்பாக முதியவர்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் வெயில் மழை காலங்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ அரண்மனை பகுதிக்கு சென்று பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர் இராமநாதபுரம் நகரின் மற்றொரு பிரதான பஸ் நிறுத்தமான கேணிக்கரை பகுதிக்கும் சென்று பயணிகள் நிழற்குடை அமையவுள்ள இடத்தை தேர்வு செய்து பார்வையிட்டார். அப்போது இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் (பொ) மதிவாணனிடம் சிறு வர்த்தகர்களுக்கு பாதிப்பின்றியும் பயணிகளுக்கு பயனுள்ள வகையிலும் அரண்மனை மற்றும் கேணிக்கரை பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை உடனே துவங்கி நிறைவேற்றும்படி எம்.எல்.ஏ உத்திரவிட்டார்.
த.மு.மு.க.மாவட்ட செயலாளர் பி.அன்வர் அலி,மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், இராமநாதபுரம் ஒன்றிய,நகர நிர்வாகிகள் பாக்கர் அலி, பசீர் அகமது, அகமது இப்ராஹிம், பரக்கத்துல்லா, பிஸ்மி (எ) நசுருதீன், ஜஹாங்கீர் அலி, அப்துல் ரஹ்மான் மற்றும் த.மு.மு.க., ம.ம.க.வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
LAST UPDATED ( MONDAY, 27 MAY 2013 20:41

Friday, May 3, 2013

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காக்கி சட்டை வழங்கப்பட்டது





மே தினத்தை முன்னிட்டு   மனிதநேய மக்கள் கட்சியின் தொழிற்சங்கம் சார்பாக, கீழக்கரை அருகில் உள்ள ஹூசைன் ஹாஜியார் நகரில் (500 பிளாட்) ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காக்கி சட்டை வழங்கப்பட்டது. இதில் த.மு.மு.க. வின் மூத்த தலைவரும் இராமநதபுரம் சட்டமன்ற உறுப்பினருமமான ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.