Thursday, September 30, 2010

கட்டப் பஞ்சாயத்து - இந்தியாவின் முன்னணி சட்ட நிபுணர்கள் கருத்து

உலகமெங்கும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மஸ்ஜித் வழக்கில் இன்று மாலை 5 மணி அளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

அந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்றும், அந்த இடத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை கோயிலுக்கும், இன்னொரு பகுதியை பள்ளிவாசலுக்கும், மற்றொரு பகுதியை நிர்மோகி அகோரா விற்கும் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விசுவ ஹிந்து பரிசத் வரவேற்றுள்ளது.

இத்தீர்ப்பு பலருக்கும் திகிலூட்டுவதாக பிரபல சட்ட நிபுணர் ராஜீவ் தவான் என்.டி.டி.வி தொலைக்காட்சி பேட்டிக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு என்றும் வர்ணித்துள்ளார். இதையே மற்றுமொரு சட்ட நிபுணரான பி.பி. ராவும் வழிமொழிந்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் இது குறித்து யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்று கூறியுள்ளது.

சுதீர் குமார் அகர்வால் மற்றும் தர்ம் வீர் சர்மா ஆகிய நீதிபதிகள் ஒரு மாதிரியாகவும் சிபகத்துல்லா கான் வேறு மாதிரியாகவும் தீர்ப்பினை கொடுத்துள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர்கள் தீர்ப்பு குறித்து டெல்லியில் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய சூழலில் இத்தீர்ப்பை ஏற்றாலும், விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முஸ்லிம்கள் தரப்பில் கூறப்படுகின்றது.


news by:www.tmmk.in

அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறோம். - தமுமுக தலைமையகம்

அலஹாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது. தேவைப் பட்டால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறோம். - தமுமுக தலைமையகம்

Wednesday, September 29, 2010

உணர்ச்சிவசப்படாமல் அமைதி காக்க வேண்டும்-தமுமுக

சென்னை: அயோத்தி தீர்ப்பு எவ்வாறாக இருந்தாலும் அமைதி காத்து, சட்டம்- ஒழுங்கை பேணிக் காக்குமாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் [^] கோரிக்கை விடுத்துள்ளது.

அதன் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1949ம் ஆண்டு முதல் நடந்து வரும் பாபர் மசூதி வழக்கில் செப்டம்பர் 24ம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க தேதி குறிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பை வெளியிடக் கூடாது என ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்று தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் [^] இடைக்கால தடை விதித்தது.

இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய இருதரப்பும் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து உச்ச நீதிமன்றம் இடைக் காலத் தடையை நீக்கி உத்தர விட்டுள்ளதை தமிழ்நாடு [^] முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனமார வரவேற்கிறது.

அலகாபாத் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட்டமாக கருதாமல், அவரவர் தனியாக இறைவனுக்கு நன்றி செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அதே சமயம் தீர்ப்பு பாதகமாக வந்தால் அதை சட்டரீதியாக அணுகுவதற்கு முஸ்லிம் அமைப்புகள் தயாராக உள்ளன என்பதை நினைவில் கொண்டு உணர்ச்சிவசப்படாமல் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பொது அமைதி, சட்டம்- ஒழுங்கு ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

news by:thatstamil.com

Tuesday, September 28, 2010

பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான தீர்ப்பு வியாழக்கிழமைமதியம் வெளிவருகிறது

பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான தீர்ப்பு வியாழக்கிழமைமதியம் வெளிவருகிறது 60 ஆண்டுகாலமாக நிலுவையில் இருக்கும் அயோத்தி சர்ச்சை தீர்ப்பு தொடர்பான தடை கோரிய மனு உச்ச நீதி மன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 24 ம் தேதி அலகாபாத்உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்க இருந்தது. ஆனால் இந்த நேரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என காரணம் காட்டி ரமேஷ் சந்த் திரிபாதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தடை உத்தரவு வழங்கினர். இந்த தடை ஒருவார காலம் அமலில் இருக்கும் என கடந்த 23 ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு நீதிபதிகள் , வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், மத்திய அரசு அட்டர்னி ஜெனரலுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். இதனால்பாபர்மச்ஜித் நிலம் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு விசாரணையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் எச். கப்பாடியா தலைமையிலான நீதிபதிகள் அப்தாப் ஆலம், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரை கொண்டஅமர்வு விசாரிக்கும் என நீதிமன்றம் அறிவித்தது. இதன்படி தடை தொடர்பான மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து சம்பந்தப்பட்டவழக்கறிஞ்ர்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர். மனுதாரர் வழக்கறிசர் நாட்டில் யாரும் அயோத்தி தீர்ப்பு வெளிவர விருப்பம் காட்டவில்லை.,சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படும். செட்டில்மென்ட் ஆகும் வகைக்கு உச்சநீதிமன்றம் காலஅவகாசம் கொடுக்க வேண்டும். என வாதிட்டார். காமன்வெல்த்போட்டி , ஒபாமா வருகை குறித்தும் அங்கு எடுத்து கூறப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் தனது வாதத்தில் காலம் தாழ்த்தாத எந்த ஒரு நல்ல முடிவு ஏற்பட்டாலும் நாங்கள் வரவேற்கிறோம் என்றார். இதனையடுத்து இன்று மதியம் 2 மணிக்கு உத்தரவு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்படி மதியம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். அலகாபாத்உயர்நீதிமன்றம் என்று வேண்டுமானாலும் தீர்ப்பளிக்கலாம் என்றனர். அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமைமதியம் பாபரி மஸ்ஜித்நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என தலைநகர தகவல்கள் தெரிவிக்கின்றன.







தீர்ப்பை தள்ளி வைக்க எதிர்ப்பு : சன்னி மத்திய வக்ப் வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவில், "60 ஆண்டு காலமாக நடக்கும் சர்ச்சையில், கோர்ட்டிற்கு வெளியே பிரச்னையை தீர்த்து கொள்வது என்பது முடியாத காரியம். 19 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நடந்து வரும் விசாரணையில், வழக்கு போட்டுள்ள திரிபாதி பங்கேற்கவில்லை. மேலும், இறுதி தீர்ப்புக்காக 90 நாட்கள் நடந்த இறுதி விசாரணையிலும் திரிபாதியோ அவரது சார்பில் வக்கீலோ பங்கேற்கவில்லை. எனவே இதை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம்' என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு மனுதாரரும் 89 வயதான முகமது ஹசிம் தாக்கல் செய்த மனுவில், "திரிபாதியின் மனுவை டிஸ்மிஸ் செய்து, அலகாபாத் ஐகோர்ட் உடனடியாக தீர்ப்பு வழங்கும் வகையில், இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் என' கேட்டுக் கொண்டுள்ளார். மற்றொரு முக்கிய மனுதாரரான நிர்மோகி அகாரா, தன் மனுவில், "தீர்ப்பு வழங்குவதை மூன்று மாதத்திற்கு தள்ளிவைத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு சுப்ரீம் கோர்ட் வழி வகுக்க வேண்டும்' என கோரியுள்ளார்.

முக்கிய மனுதாரரான, அகில பாரத இந்து மகாசபா தாக்கல் செய்த மனுவில், "இப்போதுள்ள சூழ்நிலையில் சுமுகமான தீர்வு என்பது இயலாத காரியம். கோர்ட் தீர்ப்பு மூலம் தான் முடிவு காண வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்பில் இருந்தும் பதில் மனு தாக்கல் செய்துள்ள அனைவரும் ஒரு கருத்தை உறுதிப்பட தெரிவித்துள்ளனர். வழக்கை விசாரிக்கும் அலகாபாத் ஐகோர்ட்டின் மூன்று உறுப்பினர் பெஞ்சில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவர், அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, தீர்ப்பு அதற்கு முன்பாக வெளிவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Monday, September 27, 2010

இராமநாதபுரம் ஆம்புலன்ஸ் டிரைவர் விபத்தில் உயிரிழந்தார்

இன்று தினம் இரவு 25.09.2010 இராமநாதபுரம் ஆம்புலன்ஸ் டிரைவர் ராம்குமார் பரமக்குடி அருகே விபத்தில் உயிரிழந்தார். அன்னாரின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Friday, September 24, 2010

நியூயார்க் தாக்குதலுக்கு அமெரிக்கா தான் காரணம்-ஈரான் அதிபர் அகமதிநிஜாத்

ஐ.நா. சபை: நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதிநிஜாத். அவரது பேச்சைக் கண்டித்து அமெரிக்க குழுவினர் ஐ.நா.விலிருந்து வெளிநடப்பு செய்தனர்.ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அவர், 2001ம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர்.ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியதே அமெரிக்கா தான் என்று தான் உலகின் பெரும்பாலான மக்கள் நினைக்கி்ன்றனர். உலகளவில் சரிந்து வரும் தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும், சரிந்து விட்ட தனது பொருளாதாரத்தை சரி செய்யவும், வளைகுடாவில் தனது ஆதிக்கத்தை மீ்ண்டும் நிலைநாட்டி, இஸ்ரேலுக்கும் யூத சக்திகளுக்கும் உதவவும் அந்தத் தாக்குதலை திட்டமிட்டு அமெரிக்கா தான் நடத்தியது.அமெரிக்க அரசில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த பிரிவினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று தான் பெரும்பாலான அமெரிக்க மக்களும், உலகின் பெரும்பாலான மக்களும், உலக அரசியல் தலைவர்களும் நினைக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.அல்லது அந்தத் தாக்குதலை உண்மையிலேயே தீவிரவாதிகள் தான் நடத்தினர். ஆனால், அந்தத் தாக்குதலை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா என்றும் சொல்லலாம்.இந்த நியூயார்க் தாக்குதலை முன் வைத்துத் தான், தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஆப்கானிஸ்தான் மீதும் இராக் மீதும் அமெரிக்கா போர் தொடுத்தது.தான் மட்டும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, நாங்கள் (ஈரான்) அணு ஆயுதம் தயாரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்களையும் அமெரிக்கா வம்புக்கு இழுத்து வருகிறது என்றார்.அகமதிநிஜாத் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே அமெரிக்க ஐ.நா. குழுவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளின் தூதர்களும் குழுவினரும் வெளிநடப்பு செய்தனர்.தொடர்ந்து பேசிய அகமதிநிஜாத், இதனால் நியூயார்க் தாக்குதல் குறித்து ஐ.நா. முழுமையான விசாரணை நடத்தி உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.அணு ஆராய்ச்சி விஷயத்தில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால், அது நேர்மையாகவும் மரியாதையுடனும் நடக்க வேண்டும்.அடுத்த நாட்டுக்கு மரியாதை தராமல் செயல்பட்டால் பதிலுக்கு மரியாதை கிடைக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும். அதே போல ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து நமது வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நினைத்தால் அதன் மீது கொஞ்ச நஞ்சம் உள்ள நம்பிக்கையும் போய்விடும்.சர்வதேச அணு ஆராய்ச்சி மையத்தின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டே ஈரானிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மற்றபடி யாருடைய நெருக்குதலுக்கும் ஈரான் பணிந்ததில்லை, இனியும் பணியாது என்றார்.

sorce by:thatstamil.com

பாபரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

வரலாற்று சிறப்புமிகு பாபரி பள்ளிவாசல் வழக்கில் நாளை அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தலைநகர் டெல்லியில் வரும் 3ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இந்த சூழலில் பாபரி பள்ளிவாசல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடும். இதனால் காமன்வெல்த் போட்டிகள் பாதிக்கப்படும் என சொல்லி ரமேஷ் சந்த் திரிபாதி என்ற ஒய்வுப் பெற்ற அரசு அதிகாரி இந்த வழக்கை தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி அல்தமாஸ் கபீர் தலைமையிலான உச்சநீதிமன்ற பிரிவு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று மனுதாரர் வேறு பிரிவுக்கு இந்த வழக்கை மாற்ற உச்சநீதிமன்ற பதிவாளரை அணுகலாம் என்று தீர்ப்பு கூறினர்.
இதனை தொடர்ந்து இன்று மனுதாரரின் வழக்கு நீதிபதி ரவீந்தரன் தலைமையிலான உச்சநீதிமன்றப் பிரிவின் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை வரும் 28ம் தேதி நடைபெறும் என்றும் உத்தரவிட்டனர். 28ம் தேதி விசாரணைக்கு பிறகே பாபரி பள்ளிவாசல் வழக்கின் தீர்ப்பு காமன்வெல்த் விளையாட்டுகள் தொடங்குவதற்கு முன்பு வழங்கப்படுமா அல்லது அது முடிவடைந்த பிறகு (அக்டோபர் 14) வழங்குப்படுமா என்பது தெரியும்.
இந்த வழக்கை விசாரிக்கும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவின் மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சர்மா செப்டம்பர் 30ம் தேதி ஒய்வு பெறுகிறார். எனவே தீர்ப்பு செப்டம்பர் 30க்கு முன்பு வழங்கலாம் என்று 28ம் தேதி விசாரணையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் தான் உடனடி தீர்ப்பு கிடைக்கும். இல்லையெனில் லக்னோ பிரிவிற்கு மற்றொரு நீதிபதி நியமிக்கப்பட்டு மறு விசாரணை நடைபெற்று அதற்கு பிறகு தீர்ப்பு எப்போது கிடைக்கும் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

Wednesday, September 22, 2010

முதுகுளத்தூர் த.மு.மு.க., சார்பில் மருத் துவ உதவிகள்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் த.மு.மு.க., சார்பில் மருத் துவ உதவிகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் ஜபருல்லாகான் தலைமையிலும், துணை செயலாளர் அஜீஸ்கனி முன்னிலையிலும் நடந் தது. வள்ளக் குளத்தை சேர்ந்த பதுர் ஜான் என்பவருக்கு மருத்துவ நிதி 5000ரூபாய் வழங்கப்பட்டது. ம.ம.க., ஒன்றிய செயலாளர் வாவாராவுத்தர், நகர மாணவரணி செயலாளர் அம்ஜத் கான் உட் பட பலர் பங்கேற்றனர்.

news by dinamalar

Tuesday, September 21, 2010

முஸ்லிம் பெண்களிடத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்



பெண் என்பவள் இஸ்லாத்தின் பார்வையில் மிக கண்ணியமானவளாக கருதப்படுகின்றாள். எந்தவொரு மதமும் கொள்கையும் பெண்ணுக்கு வழங்கிடாத கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியிருக்கின்றது.
ஆனால், இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில முஸ்லிம் பெண்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்கள் என்பது தான் கவலைக்குரியவிடயமாகும்.
முஸ்லிம் பெண்கள் தமது தனித்துவமான ஒழுக்கங்கள், பண்புகள், கலாசாரம் என்பவற்றை இழந்து வீழ்ச்சி நிலைய நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலைக்கு காரணங்கள் பல இருந்தேபாதும் அவற்றில் சிலதை இங்கு நோக்கலாம்.

✤ ✤ முதலாவதாக, தொடர்புசாதனங்கள் முஸ்லிம் பெண்களின் ஒழுக்க, கலாசார, பண்பாட்டு விடயங்களில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன.
தொலைக் காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் சினிமாக்களும், தொடர்நாடகங்களும் வானொலிகளில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற பாடல்களும் இதில் முதன்மை பெறுகின்றன.
★ ஒரு காலத்தில் முஸ்லிம் பெண்கள் திரையரங்குகளுக்கு செல்வது மிக அரிதாகேவ காணப்பட்டது. ஆனால், இன்று ஹிஜாப் அணிந்த நிலையில் குடும்பத்தவர்களுடன் இணைந்து திரையரங்குகளுக்கு செல்கின்ற பெண்களை காண்கின்றோம். கிராமப்புற வீடுகளில் திரையரங்குகளின் இடத்தை தொலைக்காட்சி வகித்து
வருகின்றது.
★ மிகுந்த ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்ந்துகொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்கள் இன்று வெட்க உணர்வற்று, பண்பாடற்று, ஒன்றாக அமர்ந்து சினிமாக்கைளயும் ஆபாச பாடல்கைளயும், நாடகங்களையும் பார்த்து ரசிப்பதை பரவலாக காண முடிகின்றது.
★ வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என எந்த ஊடகத்தை எடுத்தாலும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் முஸ்லிம் பெண்களே முன்னணியில் திகழ்கின்றனர். வானொலியை செவிவிமடுத்தால் ஹலோ என ஒரு முஸ்லிம் பெண்தான் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பாள். தொலைக்காட்சியிலும் இதே
நிலைதான்.
★ இஸ்லாமிய நூல்கைளயும், சஞ்சிகைகளையும் வாசிக்கும் பழக்கம் மிகவேகமாக குறைந்து வருகின்றது. பாடசாளைகளில் உள்ள நூலகங்களில் நிறைந்து காணப்படும் இஸ்லாமிய நூல்கைள விடவும் காதல் கதைகைளக் கொண்ட நாவல்களும் கவிதைத் தொகுதிகளும்தான் அதிகமாக வாசிக்கப்படுகின்றன.
★ முன்தினம் பார்த்த சினிமாக்களினதும் நாடகங்களினதும் விமர்சனம் அடுத்தநாள் பாடசாலை வகுப்புகளில் நடைபற்று வருகின்றது. சில பெண்கள் பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக சினிமா நடிக, நடிகைகளின் புகைப்படங்கைள வைத்துக்கொண்டு அதை ரசிப்பதிலேய கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர் வேடிக்கைத்தனமாக வகுப்பைறகளில் சிகையலங்காரம், முக அலங்காரம் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.

✤ ✤ எமது முஸ்லிம் பெண்களின் ஒழுக்கவீழ்ச்சிக்கு இரண்டாவது காரணமாக அமைவது ஆடைகளாகும். இன்று ஒரு ஆணுக்கு நிம்மதியாக பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
★ அந்நிய பெண்கள் எவ்வாறு இருந்த போதிலும் அவர்கைள ஒத்தவர்களாக எமது முஸ்லிம் பெண்களும் மாறிவிட்டனர். சாதாரணமாக டீ-சேர்ட், காற்சட்டை, போன்றவற்றை அணிகின்றனர்.
★ இன்னும் சிலர் தாம் அணிகின்ற ஹபாயாவையும் கூட நாகரிகம் என்றபெயரில் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மிக இறுக்கமாக அணிந்துவருவதோடு அதன் நோக்கத்தை அறியாதவர்களாகவும் செயற்படுகின்றனர்.


✤ ✤ முஸ்லிம் பெண்களின் கலாசார சீரழிவிற்கு இன்னொரு காரணமாக மேலதிக வகுப்புக்கைளயும் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. நகர்ப்புறங்களுக்குச் செல்லும் சில முஸ்லிம் மாணவிகள் பஸ்களிலும் பஸ்நிலையங்களிலும் வகுப்புக்களிலும் வரம்புமீறி நடந்துகொள்கின்றனர். அத்துடன் இரவு வேளைகளிலும் இத்தகைய வகுப்புகளுக்கு தனியாக சென்றுவருகின்றனர். இது பாரிய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதை அனைவரும் அறிவர்.

எனேவ, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான்கொண்டுள்ள முஸ்லிம் பெண்கள் தமது ஈமானை மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளவேண்டியிருக்கின்றது. றஸூல் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களை இன்னுமொரு முறை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருகின்றது. இது பெண்களுக்கு மட்டுமேயான விடயமல்ல அவர்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற பெற்றோர்கள், பாதுகாவலர்களும் இவ் விடயத்தில் பொறுப்புடன்
நடந்து கொள்ள வேண்டும்.
‘நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்’
என்ற ஹதீஸ் எல்லோருக்கும் பொருத்தமானது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பொறுப்புதாரிகள். ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு பொறுப்பாளர்கள்.
எனவே, ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்த
வேண்டும்.
‘நீங்கள் உங்கைளயும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்’
என்று அல்குர்ஆன் கூறுவைத நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நரக நெருப்பின் விறகுகளாக நாம் மாறிவிடாதிருக்க அல்லாஹ் எமக்கு அருள்பாலிக்க வேண்டும். இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற மக்களாக நாம் மாறுவதற்கு அல்லாஹ்வின் உதவியை வேண்டி நிற்போம்.

நன்றி : மீள்பார்வை
சஸான் ஏ. ஸலாம்

Monday, September 20, 2010

மதுக்கூரில் காவி வெறியர்களின் அட்டகாசம்

இன்று விநாயகர் ஊர்வலம் மதுக்கூர் சிவக்கொல்லையில் 3 :30 மணிக்கு தொடங்கி 6 :30 மணிக்கு முடிந்தது.வழியெங்கும் வெறிக் கூச்சலுடண் வந்த கூட்டத்தினர் மதுக்கூரை கடக்கும் போது 6 கடைகளையும் 10 க்கும் மேற்பட்ட வீடுகளையும் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளார்கள் இதனால் நிலைமை பதட்டமானது மிகமிக குறைவான எண்ணிக்கையில் இருந்த காவல்துறையினரால் நிலைமையை கட்டுப் படுத்த முடியவில்லை இதன் பதிலடியாக ஊர்வலத்தில் ஒரு சிலர் கல்வீசியிருக்கிரார்கள் .எப்போதும் 50 க்கும் குறைவான எண்ணிக்கைகள் செல்லக்கூடிய ஊர்வலத்தில் 100 மேற்பட்டோர் கலந்துக் கொண்டார்கள்,முத்துப்பேட்டையில் தங்களது எண்ணத்தைசெயலாற்ற முடியாதவர்கள் மதுக்கூரில் நிறைவேற்றி உள்ளார்கள்.இந்நிலையில் தமுமுக ,மமக மற்றும் PFI நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது ஊர்வலத்தில் முதலில் வன்முறை துவக்கியவர்களை கைது செய்யவில்லை ,நேற்று மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர் தமுமுக நிர்வாகிகளை சந்தித்து தங்களுக்கு ஒத்துழைப்பு தர கேட்டுக்கொண்டார் ,அதன் அடிப்படையில் அமைதிஏற்படுத்திக் கொண்டிருந்த தமுமுக மமக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது, உடனடியாக மமக மாவட்டச் செயலாளர் கலந்தர் அவர்கள் மமக மாநில துணைச் செயலாளர் தமிம் அன்சாரி அவர்களை தொடர்புக் கொண்டு விபரங்களைக் கூறினார் ,உடனடியாக தமிம் அன்சாரி அவர்கள் தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை தொடர்புக் கொண்டு கைது செய்யப்பட்ட தமுமுக மமக மற்றும் இதர அப்பாவிகளையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.மதுக்கூரில் இதர சட்டநடவடிக்கைகளை மேற்க்கொள்ள சகோதரரர் ராவத்தர்ஷா தலைமையில் ஒருக் குழுவினர் தீவிரமாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள், தொடர்ந்து தமுமுக தலைமை மதுக்கூர் நிலைமையை கவனத்துடன் அணுகிக் கொண்டிருக்கிறார்கள்.

Saturday, September 18, 2010

காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!



‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர். பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.
காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பதை அலசி ஆராயும் முன், காஷ்மீர் மாநிலம் கடந்த இருபது ஆண்டுகளில் எப்படி ஒரு திறந்தவெளி இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரில் 3,00,000 இந்திய இராணுவச் சிப்பாய்களும், தேசியத் துப்பாக்கி படைப் பிரிவைச் சேர்ந்த 70,000 சிப்பாய்களும், மத்திய போலீசு படையைச் சேர்ந்த 1,30,000 சிப்பாய்களும் – ஆக மொத்தம் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலப் போலீசுப் படை இந்த எண்ணிக்கையில் சேராது.
காஷ்மீரில் ‘அமைதி’யை ஏற்படுத்த இத்தனை இலட்சம் துருப்புகள் தேவை என்றால், எத்தனை ஆயிரம் தீவிரவாதிகள் அம்மாநிலத்தில் இருக்கக்கூடும் என உங்கள் மனம் கணக்குப் போடலாம். அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள், அங்கே வெறும் 660 தீவிரவாதிகள்தான் இருப்பதாக சமீபத்தில் இந்திய இராணுவம் அறிக்கை அளித்துள்ளது.
‘‘தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தை முசுலீம் தீவிரவாத அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரியவில்லை; இளைஞர்களும் தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடுகிறார்கள்; போராடுபவர்கள் கைகளில் துப்பாக்கிகள் கிடையாது; மாறாக, தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்; இப்போராட்டத்தை போலீசைக் கொண்டே கட்டுப்படுத்திவிட முடியும்; இராணுவம் தேவையில்லை” எனச் சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர். உண்மை இப்படியிருக்க, அம்மாநிலத் தலைநகர் சீறிநகரை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன?
ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் இறக்கிவிடப்பட்டிருக்கும்பொழுது, காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது. அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?
****
தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு, எப்படிபட்ட அநீதியை காஷ்மீர் மக்களுக்கு இழைத்து வருகிறது தெரியுமா?1990-ஆம் ஆண்டு தொடங்கி 2007-ஆம் ஆண்டு முடியவுள்ள 17 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் ‘காணாமல்’ போய்விட்டனர். அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது.
அம்மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில் “தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை” என்று நிரூபித்தாக வேண்டும்.
காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைச் சந்தித்து வரும்பொழுது, மைய அரசோ கடந்த பதினேழு ஆண்டுகளில் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிரான வெறும் 458 வழக்குகளைத்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. இதே காலத்தில் இந்திய இராணுவத்தின் மனித உரிமைப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1,321 வழக்குகளில் 54 வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
காஷ்மீர் மக்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான், இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும், இப்போராட்டங்களின்பொழுது நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இப்படி காஷ்மீர் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் இந்திய அரசையும் அதனின் இராணுவத்தையும் வெளியேறக் கோரி அம்மக்கள் போராடுவது தேச விரோதச் செயல் என்றால், கொலையும், கொள்ளையும், பாலியல் வன்புணர்ச்சியும்தான் தேச நலனின் பொருளாகிவிடுகிறது.
இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் இந்து தேசிய வெறிதான் இப்பிரச்சினையின் மூல காரணமாக இருக்கிறது என்பதும்.
இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தாமல் மறுத்தது; இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்தது; காங்கிரசு கும்பல் தனது சுயநலனுக்காக அம்மாநிலத்தில் நடத்திய ஆட்சி கவிழ்ப்புகள், தேர்தல் மோசடிகள் – இவைதான் 1980-களின் இறுதியில் காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய போராட்டம் வெடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தன.
வரலாற்றை அவ்வளவு பின்னோக்கிப் பார்க்கத் தேவையில்லை. இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய்விட்டதாகச் சொல்லப்பட்ட பின்னும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஷ்மீரில் அடுத்தடுத்து இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதற்குக் காரணம் பாகிஸ்தானா, இல்லை இந்திய தேசியவாதிகளா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அம்மாநிலத்தை ஆண்டு வந்தபொழுது, அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கிப் போவதற்காக 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கப் போவதாக அக்கூட்டணி ஆட்சி அறிவித்தது. அமர்நாத் யாத்திரை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வருடாந்திர நிகழ்ச்சி நிரலாக மாறிப் போனதால், காஷ்மீர் மக்கள் பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். உடனே, ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்முவிற்கு ஆட்களைத் திரட்டிவந்து எதிர் போரட்டத்தை நடத்தியதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது ஒரு சட்டவிரோத பொருளாதார முற்றுகையைத் திணித்தது. காஷ்மீர் மக்கள் இம்முற்றுகையை முறியடிக்கும் வண்ணம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பது என்ற போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான பின்னர், நில ஒதுக்கீடு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
இப்போராட்டத்திற்குப் பின் நடந்த தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட்ட காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் தேர்தலுக்குப் பின் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. இந்தச் சந்தர்ப்பவாத ஆட்சிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் முகமாக, “காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்; அத்துமீறல்கள் குறித்த உண்மை கண்டறியும் குழு நிறுவப்படும்” என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார், முதல்வர் ஒமர் அப்துல்லா. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை என்பது ஒருபுறமிருக்க, காஷ்மீர் மக்களின் மீதான இராணுவத்தின் பிடியும், அடக்குமுறையும் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பதையும் மக்கள் கண்டனர்.
ஷோபியான் என்ற சிறுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது; கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஜஹித் ஃபாரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைச் சுடுவது போல எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; கடந்த ஏப்ரல் மாதம் தேசியத் துப்பாக்கிப் படைப் பிரிவினர், மூன்று தொழிலாளர்களை எல்லைப் பகுதிக்குக் கடத்திக்கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை எல்லை தாண்டி வரமுயன்ற தீவிரவாதிகளாக ஜோடனை செய்த சம்பவம் – இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரும், துணை இராணுவப் படைகளும், காஷ்மீர் போலீசாரும் நடத்திய பல பச்சைப் படுகொலைகள்தான் இப்போராட்டத்தின் தூண்டுகோலாக அமைந்தன.
‘‘துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட பிறகு, மக்களின் விடுதலை உணர்வும் செத்துவிடும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் பாலிவுட் திரைப்படங்களிலும், பப் கலாச்சாரத்திலும் மூழ்கிப்போய் விடுவார்கள் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், எங்களின் விடுதலை வேட்கை கொஞ்சம்கூடக் குறையாமல் இருப்பதைத்தான் இப்போராட்டம் காட்டுகிறது” என காஷ்மீர் மக்களின் மனோநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பள்ளத்தாக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஷாத் சலீம்.காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலை உணர்வுதான் இப்போராட்டத்தின் அடிப்படையாக உள்ளது என்ற உண்மையை மூடிமறைக்க, இப்போராட்டம் பற்றிப் பலவித கட்டுக்கதைகளையும் அவதூறுகளையும் மைய அரசும் அதனை நத்திப் பிழைக்கும் தேசியப் பத்திரிகைகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு பரப்பி வருகின்றன. “விரக்தியடைந்த இளைஞர்களின் போராட்டம்” என ஒருபுறம் நையாண்டி செய்துவரும் அக்கும்பல், இன்னொருபுறமோ, “லஷ்கர்-இ-தொய்பாவிடம் 200 ரூபாய்யை வாங்கிக்கொண்டு நடத்தப்படும் கூலிப் போராட்டம்” என அவதூறு செய்து வருகிறது.
சோபுர் நகரில் கடந்த ஜுன் 29 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டான். “அவன் அப்பாவி கிடையாது; கூலிக்காக வேலை செய்யும் போக்கிரி” என அச்சிறுவனைப் பற்றிக் கூறியிருக்கிறார், உள்துறை அமைச்சகச் செயலர். இப்படி வக்கிரமும், காலனியாதிக்க ஆணவமும் நிறைந்த இந்திய அரசை வெளியேறக் கோருவது எந்த விதத்தில் தவறாகிவிடும்?
பதாமாலூ என்ற ஊரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள், துப்பாக்கியை நீட்டியபடியே அவனை நோக்கிப் பாய்ந்து வந்து, “உன்னைக் கொன்று விடுவோம்” என மிரட்டியுள்ளனர். அரண்டு போய் வீட்டுக்குள் ஓடிப்போன அந்தச் சிறுவன் பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகிப் போனான். ஐந்து வயதுச் சிறுவனைக் கொன்றுவிடுவோம் என மிரட்டும் இந்திய இராணுவம் காஷ்மீரில் யாரைக் காப்பாற்ற நிற்கிறது?
இந்தக் கேள்வியை காஷ்மீருக்கு வெளியேயுள்ள பெரும்பாலான “இந்தியர்கள்” எழுப்ப மறுக்கிறார்கள். “அவர்கள் காஷ்மீர் பற்றி பொய் சொல்கிறார்கள்; தங்களின் சொந்தப் பொய்யைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்” என இத்தகைய இந்தியர்களைப் பற்றிக் கூறுகிறார், டெல்லியில் வாழும் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் 800-க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன மக்கள் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தி வரும் இண்டிஃபதா போராட்டத்தைத்தான் இது நமக்கு நினைவூட்டுகிறது. சமூகம் தழுவிய ஆதரவோடு நடைபெற்று வரும் இப்போராட்டங்களை, இராணுவ அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஒடுக்கிவிட முடியும் என ஆளுங்கட்சி காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.-வும் ஒரேவிதமாக எண்ணுகின்றன.
ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தங்களைத் தற்காத்துக் கொள்ள இராணுவம்-துணை இராணுவப் படைகள் மீது கற்களை வீசியெறியும் இளைஞர்கள், மரண தண்டனைகூட விதிக்கப்படும் சாத்தியமுள்ள, “அரசின் மீது போர் தொடுத்த” குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இந்த அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தையும் தியாக உணர்வையும் 200 ரூபாய் கூலிப் பணத்தால் ஊட்டிவிட முடியுமா? விடுதலை உணர்வால் உந்தித் தள்ளப்படும் அந்த இளைஞர்கள் தமது மனங்களிலிருந்து பயம் என்பதையே அகற்றி விட்டார்கள் என்கிறார், ஹுரியத் மாநாட்டு கூட்டணியைச் சேர்ந்த தலைவரான சையத் ஷா கீலானி.
காஷ்மீரில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால்கூட, “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; இராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதோடு, காஷ்மீர் போலீசு துறையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குழுவைக் கலைப்பது; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது” ஆகிய குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற மைய அரசு முன்வர வேண்டும்.
ஆனால், மைய அரசோ, இந்த குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற மறுக்கிறது. இதற்குப் பதிலாக, பொருளாதார சலுகை என்ற பெயரில் அஞ்சையும் பத்தையும் தூக்கியெறிந்து, இப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என இந்திய ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கின்றனர். விடுதலை உணர்வை பணத்தால் விலை பேசும் இந்திய அரசின் முட்டாள்தனமான ஆணவம் காஷ்மீரில் பலமுறை தோல்வி கண்டிருக்கிறது.
‘‘காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை. இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்.
இந்து தேசியவெறி கொண்ட ஓட்டுக்கட்சிகள், அவர்களை நத்திப் பிழைக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற துரோகிகள், போலி மோதல் கொலைகள் மூலம் பணத்தையும் பதவியையும் அள்ளிக் கொள்ளத் துடிக்கும் காக்கிச் சட்டை கிரிமினல்கள் – ஆகியோர்தான் காஷ்மீர் இந்திய அரசின் காலனியாக நீடிப்பதால் இலாபமடையப்போகும் பிரிவினர். போலி தேசியப் பெருமையில் மூழ்கிப் போயுள்ள பிற இந்தியர்களுக்கு ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கும், பாகிஸ்தான் அதனைத் தூண்டிவிடுவதற்கும், இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதற்கும் ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.
http://www.vinavu.com/2010/09/15/kashmir-army/

Friday, September 17, 2010

தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் அமெரிக்க யூதர்கள்


தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் அமெரிக்க யூதர்கள்

அமெரிக்காவிலுள்ளயூதர்கள் தீவிரவாதத்தை ஏற்றுமதிச் செய்கின்றனர் என சி.ஐ.ஏ/வின் ஆவணங் கள் உறுதிப் படுத்துகின்றன.கடந்த மாதம் விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் ரகசியமாக உளவறிந்து வெளியிட்ட ஆவ ணங்களில் இது தெரிய வந்துள்ளது.ரெட்ஸெல் என்ற சி.ஐ.ஏயின் பிரிவு கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி தயாரித்த அறிக்கையில் உள்நாட்டு யூத தீவிரவாதப் பிரிவுகளின் செயல்பாடுகளை அமெரிக்க அரசு கண்டும் காணா ததுபோல் இருப்பதாக குற்றம் சாற்றுகிறது.அமெரிக்க உலகத்திற்கு வெளிப் படுத்துவதுபோல் அமெரிக்கா விலிருந்து ஏற்றுமதிச் செய்யப் படும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதமோ, மேற்காசிய, ஆப்பி ரிக்க, ஆசிய வம்சாவழியைச் சார்ந் தவர்களுக்கோ தொடர்பில்லை என சி.ஐ.ஏவின் ஆய்வுகள் குறிப் பிடுகின்றன.ஆழமாக வேரூன்றியுள்ள இந்த தீவிரவாதத்திற்கு ஆதரவுத் தெரிவிப்பதும், சில நேரங் களில் தாமே அதனை செயல் படுத்துவதும் அமெரிக்க யூதப் பிரிவினர்களாவர்.இஸ்ரேலின் எதிரிகளுக் கெதி ராகத் தான் இவர்களுடைய காய் நகர்த்தல். உதாரணமாக பரூச் கோல்ட்ஸ்டைன் என்ற அமெரிக்க யூதன் ஈடுபட்ட ஒரு சம்பவத்தை சி.ஐ.ஏவின் ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.நியூயார்க்கைச் சார்ந்த கோல்ட் ஸ்டைன் கடந்த 1994ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு குடியேறி கட்ச் என்ற பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார். ஹெப்ரானில் மஸ்ஜிதுல் தொழுது கொண்டிருந்த 29 ஃபலஸ்தீனர்களை கொன்றது இவனுடைய தலைமையிலான பயங்கரவாத குழுவாகும்.அமெரிக்காவைச் சார்ந்த யூத சாமியாரான மெய்ர் கஹானா என்பவர்தான் கட்ச் என்ற யூத பயங்கரவாத இயக்கத்தை தோற்று வித்தவன்.எஃப்.பி.ஐ, சட்ட- ஒழுங்கை சீர்குலைக்கும் இயக்கங்களின் பட்டியலில் உட்படுத்தியுள்ள யூத டிஃபன்ஸ் லீக்கின் (ஜெ.டி.எல்) ஸ்தாபகரும் கஹானாவாகும்.1968 முதல் அமெரிக்காவில் ஜெ.டி.எல்லின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஏழுபேர். 22 பேருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது.கலிஃபோர்னியாவில் அமெரிக்க-&அரபு பிரிவினை எதிர்ப்பு குழுவின் மாகாண இயக்குநரை கடத்திச் சென்றது ஜெ.டி.எல் ஆகும்.2001 செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்று இரண்டு தினங்கள் கழித்து கலிஃபோர்னியாவில் ஒரு மஸ்ஜிதை குண்டுவைத்து தகர்க்க திட்டமிட்ட இரண்டு ஜெ.டி.எல் உறுப்பினர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் தீவிரவாத எதிர்ப்பு படையினர் கைதுச்செய்ததாக எஃப்.பி.ஐயின் குறிப்பில் காணப்படுகிறது.ஃபலஸ்தீன் பகுதிகளில் தாக்குதல் செயல்பாடுகளுக்கு அமெரிக்க யூதர்களின் ஆதரவு தற்பொழுது பலமடங்கு அதிகரித்துள்ளது.மேற்குகரையிலும், ஜெருசலத்தி லும் சட்டத்திற்கு புறம்பான நிர் மாணங்களுக்காக 40 அமெரிக்க அமைப்புகள் 20 கோடி டாலர் வரியில்லாத நன்கொடையாக சேகரித்து அளித்ததாக நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை கடந்த ஜூலையில் செய்தி வெளி யிட்டிருந்தது இங்கு குறிப்பிடத் தக்கது.

Tuesday, September 14, 2010

வேலூர் மத்திய சிறையில் கைதிகளுடன் பெருநாள் கொண்டாடிய தமுமுகவினர்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுடன் ஈகைப் பெருநாளைக் கொண்டாடினர்.ஆண்டுதோறும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெருநாட்களின் போது வேலூரில் உள்ள மத்திய சிறையில் இருக்கும் கைதிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வரிசையில் ஈகைப் பெருநாளான நேற்று (செப்டம்பர் 10) வேலூர் மாவட்ட தமுமுக சார்பில் மத்திய சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் பெருநாள் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வேலூர் மாவட்ட தமுமுக செயலாளர் ஏஜாஸ் அஹ்மது, மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் மவ்லவி ஷம்சுதீன் நாஸர் உமரி தலைமையில் சுமார் 50 தமுமுக நிர்வாகிகள் ஈகைத் திருநாள் அன்று வேலூர் மத்திய சிறைக்குச் சென்றனர். அங்குள்ள 50 முஸ்லிம் கைதிகளுடன் சிறையில் உள்ள பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் பங்குக் கொண்டனர். மவ்லவி ஷம்சுதீன் நாஸர் உமரி பெருநாள் பேரூரை நிகழ்த்தினார்.சிறையில் உள்ள 60 முஸ்லிம் ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கும் 15 குழந்தைகளுக்கும் தமுமுக சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன.பிறகு வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் சேகர் முன்னிலையில் சிறையில் உள்ள 1400 ஆண் கைதிகளுக்கும் 300 பெண் கைதிகளுக்கும் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டதுரமலான் மாதம் முழுவதும் வேலூர் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கும் சஹர் மற்றும் இப்தாருக்கான சமையல் பொருட்களை தமுமுக சார்பாக வழங்கப்பட்டு வந்தது.இல்லத்தாருடன் கழிக்க வேண்டிய நேரத்தில் சிறைவாசிகளுடன் கொண்டாடிய தமுமுகவினரை சிறை அலுவலர்கள் பாராட்டினர். இந்த நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறைத் துறை தலைவர் திரிபாதி மற்றும் கண்காணிப்பாளர் சேகர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு தமுமுக வேலூர் மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் ஏஜாஸ் அஹ்மது தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்
வேலூர் மத்திய சிறை உட்பட சென்னை, மதுரை, கோவை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் சேலம் மத்திய சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்குரமலானில் சஹர் மற்றும் இப்தார் உணவுக்கான பொருட்கள் துணிமணிகள் தமுமுக சார்பாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும்.

கீழக்கரை தமுமுக சார்பாக சிறு தொழில் புரிய தையல் மெசின் வழங்கப்பட்டன

கீழக்கரை தமுமுக சார்பாக சிறு தொழில் புரிய தையல் மெசின் வழங்கப்பட்டன. இன் நிகழ்ச்சிக்கு . ம.ம.க.,ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான், த.மு.மு.க., மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா ஆகியோர் தலைமை வகித்தனர். கீழக்கரை நகர் தலைவர் முஜீப் நகர் செயலாளர் முஸ்தகீன் நகர் பொருளாளர் ஜெய்னுல்ஆப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Thursday, September 9, 2010

தமுமுக சார்பாக நோம்பு பெருநாள் தருமம் வழங்கப்பட்டன


8/9/2010 அன்று கீழக்கரை தமுமுக சார்பாக நோம்பு பெருநாள் தருமம் என்னும் சாகாது சுமார் 300 சேலை சமையல் பொருகள் சைட்டை ஆகியவை சுமார் 100000rs மதிப்பில் உள்ள பொருகள் வழங்கப்பட்டன. இன் நிகழ்ச்சிக்கு . ம.ம.க.,ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான், த.மு.மு.க., மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா ஆகியோர் தலைமை வகித்தனர். கீழக்கரை நகர் தலைவர் முஜீப் நகர் செயலாளர் முஸ்தகீன் நகர் பொருளாளர் ஜெய்னுல்ஆப்தீன்,மற்றும் உஸ்மான் சாட் சீனி ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

Tuesday, September 7, 2010

5/9/2010 கீழக்கரை த மு மு க மாணவர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி





5/9/2010 கீழக்கரை த மு மு க மாணவர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டவர்கள். கீழக்கரை நகர் தமுமுக நிர்வாகிகள் கலந்து கொண்டவர்கள்

Monday, September 6, 2010

துபை மண்டல முமுகவின் மாதாந்திர செயற்க்குழு

முஸ்லீம் முன்னேற்றக் கழகம் துபை மண்டலத்தின் மாதாந்திர செயற்க்குழு 05-08-2010 அன்று வியாழன் இரவு 10:30 மணிக்கு மண்டலத்தின் தலைவர் சகோ.மதுக்கூர் அப்துல் காதர் தலைமையில் நடைப்பெற்றது. தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் சகோ.சிவகாசி முஸ்தஃபா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி செய்ய வேண்டும் என்று உரை நிகள்த்தினார்கள்.மேலும் தலைமைக் கழக செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்கள். இச்செயர்க் குழுவில் வரக்கூடிய ரமளான் மாதத்தில் முமுகவின் மார்க்கப் பணி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Saturday, September 4, 2010

அபுதாபி சிட்டியில் புதிய கிளை

27-08-2010 அன்று அபுதாபி முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது தமிழ்நாடு
முஸ்லீம் முன்னேற்ற கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின்
மாநில துணை பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரி ஆகியோர் மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி உரையாற்றினார்கள்
நிகழ்ச்சியின் இறுதியில் புதிய நிர்வாகம் மாநில துணை பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரி தலைமையில் தேர்ந்து
எடுக்கப் பட்டது.

தலைவர் : தோப்புதுரை. ரசூல் முகம்மது
செயலாளர் : சிதம்பரம் புதகேணி.சுஜாவுதீன்
பொருளாளா ; : ராம்நாட். இஸ்மாயில்
துணைத்தலைவர் : இருமேனி. மௌலவி. இஸ்மாயில்ஷா
துணைச்செயலாளர் : ராஜபாளயம். சேக் முகம்மது
கீழை. அஹமது அப்துல் காதர்

மக்கள் உரிமை பொறுப்பாளர் : மதுரை.முகைதீன்

மக்கள் தொடர்பாளர் : கீழை. ஹசன் அஹமது ரிஃபாய்
செயல் குழு உறுப்பினர்கள் : செஞ்சி. செய்யது இஃப்திகார்தேரிளந்தூர். லு.ளு
அப்துல்லாஹ்
காயல் பட்டிணம் . முகைதீன்
காயல் பட்டிணம் . லெப்பை தம்பி
கீழை. சாதிக் (வு.மு)
தேரிளந்தூர். ஃபஜர் முகம்மது

எழுச்சியுடன் நடைபெற்ற தமுமுக-வின் அமீரக பொதுக்குழு













ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், அல்அய்ன், ராசல் கைமா, உம்மல்குவைன், புஜைரா என அனைத்து மண்டலங்களிலும் செயல்பட்டுவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமீரக பொதுக்குழுக் கூட்டம் துபாய் ஈவான் ஹோட்டலில் 03.09.2010, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. தாயகத்திலிருந்து வருகைப் புரிந்துள்ள மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்களும், தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா அவர்கள் பொதுக் குழுவில் கலந்துக் கொண்ட அனைத்து மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி மற்றும் இயக்கம் வளர்க்கும் கலை குறித்த பயிற்சியளித்தனர். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. துபை மண்டல தமுமுவினர் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டம் இஃப்தார் நிகழ்ச்சியோடு சிறப்புடன் நிறைவடைந்தது.


Thursday, September 2, 2010

சவுதி அரேபியா அல்ஹஸா-வில் தமுமுக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக, சவுதி அரேபியா அல்ஹஸா மாநகர கிளையின் சார்பாக , நோன்பு துறக்கும் (இஃப்தார்) நிகழ்ச்சி, ஷோபா , ஹொலைலா ஆகிய இடங்களை தொடர்ந்து, செனையா பகுதியிலும். தமுமுக அல்ஹஸா மாநகர தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் நடைப்பெற்றது.
“ரமலானின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றிய சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமுமுக துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி தனது உரையில், “ வெளிநாடுகளில் பணியாற்றி விட்டு விடுமுறையில் தாயகம் செல்லவிருக்கும் ஒவ்வொருவரும், சில மாதங்களுக்கு முன்பாகவே அதற்கான திட்டமிடலிலும், ஏற்பாடுகளிலும் எப்படி உற்சாகத்துடன் ஈடுபடுகிறார்களோ அதுப்போன்ற குர்ஆன் அருளப்பட்ட இந்த கண்ணியத்திற்குரிய மாதத்தினை வரவேற்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.
ஒவ்வொரு இறைத்தூதர்களுக்கும் வழங்கப்பட்ட அற்புதங்கள் எல்லாம் அவர்களுக்கு பிறகு நீடித்திருக்கவில்லை, ஆனால் நபிகள் நாயகம் முஹம்மது ரசூல் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதமான இந்த குர்ஆன் மட்டும் தான் இறைவனால் பாதுகாக்கப்படுகிறது. மனித வாழ்வின் தத்துவங்களை கூறும் இந்த குர்ஆனின் கருத்துக்களை ஒவ்வொருவரும் அவர் தம் வாழ்விலும் கொண்டு வர வேண்டும்.
இந்த ரமலான் மாதத்தில் எப்படி கட்டுப்பாடுடனும், இறையச்சமிக்கவர்களாகவும் இருக்கிறோமோ, அதுப்போன்றே ரமலான் அல்லாத காலங்களிலும் அவற்றினை தன் வாழ்வியல் நெறியாக கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவு செய்தார்.
நோன்பு துறப்பதற்கான உணவு ஏற்பாடுகளை அஹமது சுகர்னோ தலைமையில் அப்துல் ரஹ்மான், அமானுல்லாஹ், தொண்டரணி முஹம்மது ரஃபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்: ஹம்துன் அப்பாஸ்

Wednesday, September 1, 2010

மதானி கைது செய்த போலீஸ் அதிகாரி செப் 13ல் ஆஜராக கொல்லம் கோர்ட் உத்தரவு

கொல்லம்: மதானியை கைது செய்த பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் ஓம்காரய்யா வரும் 13-ம் தேதி நேரில் ஆஜாராக வேண்டும் என்று கொல்லம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் ஓம்காரய்யா தலைமையிலான போலீசார் மதானியை கைது செய்து பெங்களூர் கொண்டு சென்றனர். இதனிடையே மதானியின் சகோதரர் அப்துல் சலாம் கொல்லம் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் மதானி கைது விவகாரத்தில் பெங்களூர் போலீசார் சட்டத்தை மீறியுள்ளதாகவும், கிரிமினல் சட்டப்படி ஒருவரை கைது செய்யும்போது 30 கி.மீ.-க்கு மேல் ஒருவரை கொண்டு செல்ல வேண்டுமேன்றால் அருகில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனுமதி பெற வேண்டும். ஆனால் பெங்களூர் போலீசார் இதனை மீறி மதானியை பெங்களூர் கொண்டு சென்றுள்ளனர். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த கொல்லம் நீதிமன்றம் பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் ஓம்காரய்யா வரும் 13-ம் தேதி நேரில் ஆஜாராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

news by thatstamil.com