Sunday, December 6, 2015

சென்னை வில்லிவாக்கம் நிவாரணப் பணிகளை பார்வையிட்ட பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ் அவர்கள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் இராமநாபுர சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ் அவர்கள்





சென்னை வில்லிவாக்கம் சிட்கோநகர் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு, நிலைமைகளை களத்தில் முழுநேரமாக இருந்து கவனித்து செயலாற்றி வரும் தமுமுக மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தாஹா நவீன், பகுதி நிர்வாகிகள் மற்றும் இபுறாகிம், சிந்தா, தீன், ஜலீல், சாதிக் மற்றும் கீழை ஹசன்  உட்பட்டவர்களிடம் விரிவாக கேட்டு மனச்சோர்வின்றி பணியாற்ற ஆலோசனைகளை வழங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
மதிய உணவு, பிரட், தண்ணீர், பிஸ்கட்டு பாக்கட்டுகளை வழங்கினார்ர்கள்

நியூஸ்
கீழை ஹசன 

Monday, November 30, 2015

கீழக்கரை தமுமுகவின் டிசம்பர் 6 அழைப்பு


கீழக்கரை வாழ் இஸ்லாமிய சொந்தங்களே மதசார்பற்ற தேசத்தின் சகோதர உறவுகளே எதிர்வரும் டிசம்பர் 6 இந்தியாவின் மானம் உலக அரங்கில் அசிங்கப்பட்ட நாள் ஆம் 300 ஆண்டுகால இந்தியாவின் வரலாற்று சின்னமான பாபர் மசூதி காவி பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நாள் ஒவ்வரு வருடமும் டிசம்பர் 6ல் மீண்டும் அதே இடத்தில் அல்லாஹ்வின் பள்ளி கட்டப்படும்வரை எதிர்கால நமது சந்ததிகள் மறக்காமல் இருப்பதற்காக தமுமுக தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருவது உங்களுக்கு தெரியும் 2015 டிசம்பர் 6 அன்று ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு காலை 10 மணிக்கு நடைபெற உள்ள போராட்டத்திற்கு கீழக்கரை நகரில் வாழும் அணைத்து இஸ்லாமிய சொந்தங்களும் திரண்டு வருமாறு அன்போடு அழைக்கிறது கீழக்கரை நகர் தமுமுக அன்று காலை 9.30 மணி அளவில் முஸ்லிம் பஜார் லெப்பை டீ கடையில் இருந்து வாகனங்கள் புறப்படும்

இப்படிக்கு 
கீழக்கரை தமுமுக நகர் செயலாளர்
முஹமது சிராஜுதீன் 

Friday, November 20, 2015

டிசம்பர் -6 தமுமுக தலைமையில் போராட்டம் நடைபெறும் மாவட்டங்கள்



கீழக்கரை தமுமுகவிண் இரங்கல் அறிக்கை

கீழக்கரை யூசுப்சுலைஹா மருத்துவமனை டைரக்டர் டாக்டர் செய்யது அப்துல் காதர் அவர்கள் மரணம் அடைந்தார்கள் என்ற செய்தி அறிந்து நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்தோம் இருப்பினும் பிறக்கும் அணைத்து உயிர்களும் ஒருநாள் இறந்தே தீரவேண்டும் என்பது இறைகட்டளை 2013ம் ஆண்டு கீழக்கரை தமுமுக சார்பாக சாலைபாதுகாப்பு வாரம் நடத்தினோம் அதில் ஒரு குறும்படம் எடுத்தோம் அப்படத்தில் டாக்டர் அவர்கள் இயற்கையாக மிகவும் இயல்பாக நடித்துகொடுத்தார்கள் அது இன்றுகூட எங்களுக்கு பசுமையாக நினைவில் நிற்கிறது டாக்டர் அவர்களின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய எல்லாம் வால் அல்லாஹ்விடம் நானும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கீழக்கரை நகர் நிர்வாகிகளும் மனிதநேய மக்கள் கட்சியின் கீழக்கரை நிர்வாகிகளும் துவா செய்வதுடன் டாக்டர் அவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அமைதியையும் பொறுமையையும் கொடுப்பானாக என்று கூறி எங்கள் வேதனையை பகிர்ந்து கொள்கிறோம்.
 அன்புடன்

 எஸ்.முஹமது சிராஜுதீன் 
 தமுமுக நகர் செயலாளர்
 கீழக்கரை


Thursday, October 15, 2015

‪‎மனிதநேய மக்கள் கட்சியின்‬ ‪மாநில_நிர்வாகிகள் நியமனம்‬ ! !


#மனிதநேய_மக்கள்_கட்சியின் ‪#‎தலைவர்‬ பேராசிரியர்‪#‎எம்_எச்_ஜவாஹிருல்லா‬ எம்.எல்.ஏ. அவர்கள் வெளியிடும் அறிக்கை:
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் கடந்த அக்டேபார் 13 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
பின்வருவோர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.
 பொறியாளர் என். ஷபியுல்லாஹ் கான் (திருச்சி மாவட்டம்)
எஸ்.எம். ஜெய்னுல்ஆபிதீன் (இராமநாதபுரம் மாவட்டம்)
கோவை எம்.ஏ.செய்யது (கோவை மாவட்டம்)
பி. ஜோசப் நொலஸ்கோ (தூத்துக்குடி மாவட்டம்)
கே. முஹம்மது கவுஸ் (மதுரை மாவட்டம்)
அ. அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ. (வேலூர் மாவட்டம்)வழக்குறைஞர் ஆர். சரவணபாண்டியன் (தஞ்சாவூர் மாவட்டம்)
‪#‎எம்_யாக்கூப்‬(காஞ்சிபுரம் மாவட்டம்)
மாயவரம் ஜெ.அமீன் (நாகப்பட்டிணம் மாவட்டம்)
வழக்குறைஞர் தஞ்சை பாதுஷா (தஞ்சாவூர் மாவட்டம்)

‪#‎தலைமை_நிலையச்_செயலாளர்‬:
எம். ஹுசைன் கனி (இராமநாதபுரம் மாவட்டம்)

கடந்த அக்டோபர் 6 அன்று நடைபெற்ற தலைமை பொதுக்குழுவில்
ப. அப்துல் ஸமது பொதுச் செயலாளராகவும், ஒ.யூ.ரஹ்மத்துல்லாஹ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைமை நிர்வாகிகளில் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றவர்; ஒருவர் பொறியாளர்; இருவர் வழக்குறைஞர்கள்;
இருவர் பட்டதாரிகள் ஆவர்.
இவண் : எம்.எச்.ஜவாஹிருல்லா 
தலைவர், 
மனிதநேய மக்கள் கட்சி

Sunday, October 4, 2015

கீழக்கரை நகர் சார்பாக மாணவர்களுக்கான மார்க்க நல்லெழுக்க பயற்சி வகுப்பு நடைபெற்றது





 04:10:2015 அன்று தமுமுக இராமநாதபுரம்(கிழக்கு)மாவட்டம் கீழக்கரை நகர் சார்பாக மாணவர்களுக்கான மார்க்க நல்லெழுக்க பயற்சி வகுப்பு நடைபெற்றது...கிராத்;ஹனிப் ரஷாதி(தமுமுக மாவட்ட உலமா அணி) வகுப்படுத்து சிறப்புரை;போரசிரியர்;ஹாஜா கனி(மாநில செயலாளர்,தமுமுக) மற்றும் அப்துல் ரஹ்மான்(இஸ்லாமிய அழைப்பாளர்),பாம்பன் தாஹிர் சைபுதீன்(இஸ்லாமிய அழைப்பாளர்) உரையாற்றினார்கள்...இதில் தமுமுக தென்கிழக்கு மண்டலம் தேர்தல் அதிகாரி வாணி சித்திக்,மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா, மமக  மாவட்ட செயலாளர்  அன்வர் அலி,மாவட்ட மாணவரணி புர்கான் மற்றும் தமுமுக மாவட்ட,அணி,ஓன்றிய,கீழக்கரை நகர் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்......

Sunday, September 27, 2015

கீழக்கரை தமுமுக மாணவர் அணி சார்பாக தர்பியா முகாம் நடைபெற உள்ளது

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 04.10.2015 காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை காஞ்சிரங்குடி தோட்டத்தில் கீழக்கரை தமுமுக மாணவர் அணி சார்பாக தர்பியா முகாம் நடைபெற உள்ளது இம்முகாமில் நமது மதிப்பிற்குரிய பேராசிரியர் MH ஜவஹிருல்லாஹ் MLA   அவர்கள் மற்றும்  பேரா ஹாஜாகனி அவர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர் கீழக்கரையை சேர்ந்த கல்லூரி  மற்றும்  பள்ளி மாணவர்கள் பொதுமக்கள்  கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது.  

தமுமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது. மேலும் தொடருபுகு கீழக்கரை நகர் செயலாளர் முஹமது  சிராஜூதீன் 9443170984

இப்படிக்கு 
கீழக்கரை நகர் தமுமுக

Sunday, September 20, 2015

பிஎஸ் அப்துர் ரஹ்மான் பெயரில் சென்னையில் சாலைக்கு பெயரிட வேண்டும் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. கோரிக்கை

பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. கோரிக்கை மறைந்த பிஎஸ் அப்துர் ரஹ்மான் பெயரில் சென்னையில் சாலைக்கு பெயரிட வேண்டும்
சட்டமன்றத்தில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழுக்காக உழைத்த, தமிழர்களின் நலனுக்காக பாடுபட்ட பத்திரிகையாளர், மறைந்த மாலை முரசு பத்திரிகையின் நிறுவனர், மரியாதைக்குரிய இராமசந்திரன் ஆதித்தனார். அவர்களுக்கு சென்னையில் அவர் தங்கிய தெருவிற்கு அவரது பெயரை சூட்டியதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த முதல்வர் பாரத ரத்னா திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த ஒரு திரைப்படத்தின் பாடலில் "மேரா நாம் அப்துல் ரஹ்மான்" என்று ஒரு பாடலை பாடுவார். அவருடைய நண்பர்தான் அந்த திரு. அப்துல் ரஹ்மான். கீழக்கரையைச் சேர்ந்தவர், தொழில் அதிபர், மிகப் பெரிய வள்ளலாக விளங்கியவர்.
இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்கு செல்லக்கூடிய கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏறத்தாழ 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சாலையைப் போடுவதற்காக ஒரு திட்டத்தை வகுத்தபோது அவர் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து சுமார் 75 இலட்சம் வட்டியில்லாமல் வழங்கினார். அதைப்போல் இராமநாதபுரத்தில் இருக்கக்கூடிய சேதுபதி சீதக்காதி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு அவர்தான் நிதியுதவி செய்திருந்தார். அதுபோன்று நீச்சல் குளம் அமைப்பதற்கும் அவர்தான் வழி வகுத்து நிதியளித்தார். இராமநாதபுரம் கீழக்கரையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அமைப்பதற்கும் மற்றும் ஏராளமான அரசு அலுவலகங்கள் அமைப்பதற்கும் அவர் காரணமாக இருந்திருக்கிறார். எனவே, அவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியிலே வசித்த பகுதியில் ஒரு சாலைக்கு திரு.பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, September 12, 2015

சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டனர்.இராமநாதபுரம் தமுமுக மார்கஸில் நடைப்பெற்றது.


2.09.15 கீழக்கரை தமுமுக சகோதரர்கள் முயற்சியால் ஏர்வாடி தர்ஹாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு நபர்கள் சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி இராமநாதபுரம் தமுமுக மார்கஸில் நடைப்பெற்றது.
மேற்பட்ட நான்கு நபர்களுக்கு தமுமுக உலமாக்கள் அணி மாவட்ட செயலாளர் மௌலவி ஹனிப் ரஷாதி திரு கலிமாவை கூறி இஸ்லாமி அடிபடைகளை பற்றி அவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம், கீழக்கரை தமுமுக சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Sunday, August 30, 2015

கீழக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான குப்பை கழிவுகல் கொட்டப்பட்டு உள்ளது.


#கீழக்கரையில்_மக்கள்_குடியிருப்பு 
#பகுதியில்_மக்கள்_சந்திப்பு ! !

29-08-2015 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான குப்பை கழிவுகல் கொட்டப்பட்டு உள்ளது.

குப்பை கொட்டப்பட்ட பகுதியில் உள்ள சுவர் விழும் அபாய நிலையிலும், மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலையிலும் உள்ள இடம் சம்மந்தமாக அதை சரி செய்யும் பணிக்காக பகுதியில்  பொது மக்களிடம் #மமக சட்டமன்ற குழு #தலைவர்பேராசிரியர் #Dr_MH_ஜவாஹிருல்லா.,MLA., அவர்கள் மக்களை சந்தித்து குரைகலை கேட்ட  போது.

ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு





கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட ஹைரத்துல் ஜலாலிய தொடக்க பள்ளியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு. இந்த நிகழ்சியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களும் கிழக்குத்தெரு ஜமா அத்தார்கள் மற்றும் 
தமுமுக - மமக நிர்வாகிகள் மற்றும் ஊர்  பொது மக்கள்  கலந்து சிறப்பித்தார்கள். 

Saturday, August 22, 2015

17வது வார்டு தெற்குதெரு பகுதிக்கு தொழிலதிபர் பெயர் சூட்ட நினைக்கும் நகராட்சி தலைவரின் செயலை நகர் தமுமுக வன்மையாக கண்டிக்கிறது

17வது வார்டு தெற்குதெரு பகுதிக்கு தொழிலதிபர் பெயர் சூட்ட நினைக்கும் நகராட்சி தலைவரின் செயலை நகர் தமுமுக வன்மையாக கண்டிக்கிறது




கீழக்கரை தெருக்களுக்கு பெயர் மாற்ற நினைக்கும் நகராட்சி தலைவரின் செயலை நகர் தமுமுக வன்மையாக கண்டிக்கிறது இது சம்பந்தமாக ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது கீழக்கரை மக்கள் மத்தியில் கெட்டுபோய் கிடக்கும் தனது பெயரை மாற்றவும் செல்வந்தர்களின் பெயரை சூட்டி அதன் மூலமும் ஆதாயம் அடைய துடிக்கும் கொள்ளைகும்பளிடம் இருந்து கீழக்கரை நகராட்சியையும் கீழக்கரை மக்களையும் ஆண்டவன் துணையுடன் மீட்காமல் விடமாட்டோம் கீழக்கரை தமுமுக கொடுத்த புகார் மனு தனியாக இணைக்கப்பட்டுள்ளது

இப்படிக்கு 
முஹமது சிராஜ்தீன் 
நகர் செயலாளர் 

Saturday, August 15, 2015

69வது சுதந்திர தின விழா‬ ‪‎கொடியேற்றும் நிகழ்ச்சி‬ ! !

 மேலப்பாளையம் த்தில்‬ பேரியக்கத்தின்_தலைவர்‬‪#‎ஜே_எஸ்_ரிஃபாயி_ரஷாதி‬ 

திருவாரூர் நகர அலுவலகத்தில் தமுமுக மாநில பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

த.மு.மு.க தலைமை அலுவலகத்தில். 69 வது சுதந்திர தின நிகழ்ச்சி. தேசிய கொடியை மாநில  துணை தலைவர்  RM ஹனீபா அவர்கள் ஏற்றினார் 


இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாநில தேர்தல் அதிகாரி வாணி முகம்மது சித்திக் 


இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட ஆற்றாங்கரை கிளை சார்பாக மாநில தேர்தல் அதிகாரி வாணி முகம்மது சித்திக்  மற்றும் மமக மாவட்ட செயலாளர் அன்வர் அலி, 


தமுமுக முன்னால் மாநில செயளாலர்‪  ASM_ஜுனைது

சென்னை 69வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி‬ ! !

சென்னை  R.K நகர் பகுதி இரத்ததானம் முகாம்


                                          சென்னை   இராயபுரம் கண் சிகிச்சை முகாம்

சென்னை இராயபுரம் 39
சென்னை இராயபுரம்


சென்னை இராயபுரம் 48 வது வட்டம்

Wednesday, August 5, 2015

கீழக்கரை த.மு .மு .க நகர் செயலாளர் சிராஜ்தீன் தயார் அவர்கள் வாபாத்தாகி விட்டார்கள்

கீழக்கரை த.மு .மு .க நகர் செயலாளர் சிராஜ்தீன் கக்கா அவர்களின் தயார் அவர்கள் இன்று (05/08/2015) இரவு வாபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா அலைஹி ராஜுவூன்
அன்னாரின் மக்பிரத்துக்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொ‌ள்கிறேன்.

Tuesday, August 4, 2015

மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் கைது

மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் கைது 

மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி நடைபெற்ற கடை அடைப்பு போராட்டத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் , திருமாவளவன் , ராமகிருஷ்ணன் , முத்தரசன் மற்றும் ஏராளமான அனைத்து கட்சி செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கைது . காவல்துறையின் சட்டவிரோத முன்னெச்சரிக்கை கைதில் ம ம க, ம தி மு க , வி சி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மொத்தத்தில் போராட்டம் முழு வெற்றியடைந்துள்ளது. இறைவனுக்கே எல்லாப் புகழும்...

Sunday, July 19, 2015

தமுமுக கீழக்கரை கிளை பெருநாள் தர்மம் கொடுக்கபட்டது.



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கீழக்கரை கிளை சார்பாக இந்த வருடம் ஈதுல் ஃபித்ர்(பெருநாள் தர்மம்) 
சுமார் 250 குடும்பங்களுக்கு 1 1/2 அரிசி , 50 ரூபாய் கொடுக்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்! 
தமுமுக கீழக்கரை கிளை நிர்வாகிகள் ஈதுல் ஃபித்ர்(பெருநாள் தர்மம்) வெள்ளி அன்று கொடுக்கபட்டது. 

Monday, July 13, 2015

மமக துபாய் ஒருங்கிணைப்பாளராக சகோ பரமக்குடி AS இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஐக்கிய அரபு அமீரகம் மனிதநேய மக்கள் கட்சியின் துபாய்  மண்டல ஒருங்கிணைப்பாளராக சகோ பரமக்குடி AS  இப்ராஹிம்  அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.  
அவர்கள் பணிகள் சிறக்க பிராத்திப்போம்...


Tuesday, July 7, 2015

தமுமுகவின் சமுதாயப் பணிகள் 2014-2015


முஸப்பர் நிதி
முஸப்பர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டி தமுமுக நிவாரண நிதி திரட்டியது. திரட்டப்பட்ட நிவாரண நிதியிலிருந்து அம்மக்களுக்கு முஸப்பர் நகரிலிருந்து 39 கிமீ து£ரத்தில் (கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு அருகில்) பள்ளிவாசலுடன் கூடிய குடியிருப்பு வீடுகளை கட்டிக் கொடுப்பதற்காக முஸப்பர் நகரிலிருந்து மீரட் செல்லும் முக்கிய சாலை ஓரம் பதேபூர் கேடி என்ற ஊரில் 27225 சதுர அடி மனை வாங்கப்பட்டு தமுமுக மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி முன்னிலையில் தமுமுக டிரஸ்ட் சார்பாக தலைவர் ஜே.எஸ். ரிபாயி பத்திரப்பதிவை செய்தார். இதனை தொடர்ந்து வீடுகளை கட்டும் ஆரம்ப பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் லட்சக்கணக்கான காஷ்மீரிகள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நிதி திரட்டியது. திரட்டப்பட்ட நிதி ரூ.50 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை காஷ்மீர் அரசிடம் தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ மற்றும் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி ஆகியோர் நேரில் ஒப்படைத்தனர்.
டிசம்பர் 6, 2014:
பாப்ரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கருஞ்சட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. முன்னதாக மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு லட்சக்கணக்கான அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
மார்க்க நிகழ்ச்சிகள்
தமுமுக, தனது மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மூலம் தமிழகம் முழுவதும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர், தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய மாநாடுகளை நடத்தி வருகிறது. மேலும், சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவில் இஸ்லாமிய பிரச்சார நூலுகம் துவங்கப்பட்டது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களுக்கான பயானும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்களுக்கான பயானும் நடைபெற்று வருகிறது.
ஆம்புலன்ஸ்கள்
அனைத்து சமுதாய ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் பயன்பெறும் பொருட்டு தமுமுக, ஆம்புலன்சுகளை அர்ப்பணித்து இயக்கி வருகிறது. தமுமுக ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 121ஐ எட்டியுள்ளது.
பாலஸ்தீனம், பர்மா, இலங்கை முஸ்லிம்களுக்காக
பாலஸ்தீனத்தில் கடந்த ரமலானில் வான்வழி தாக்குதல் நடத்தி 2000 பாலஸ்தீனர்களைப் படுகொலை செய்த இனவெறி இஸ்ரேலைக் கண்டித்து தமுமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதேபோல் மியான்மர் (பர்மா), இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தமுமுக ஆண்டுதோறும் கோடை காலங்களில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல்களையும், ஏழை எளிய மாணவர்களுக்காக கல்வி உதவிகளையும், ரமலானில் பல்லாயிரக்கணக்கான ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்களையும், ஹஜ் பெருநாட்களின் போது குர்பானி கறியை வழங்கியும் ஏழை மக்களின் நலனில் பங்கெடுத்து வருகிறது.
கோரிக்கை
சமுதாயத்திற்காகப் பாடுபட்டு வரும் தமுமுக, கழகத்தின் அலுவலக செலவினங்களை செய்வதற்குக் கூட பொருளாதாரம் இன்றி சிரமப்பட்டு வருகிறது.
எனவே புனித ரமலானில் இறைவனின் அருளைப் பெற விரும்பும் தாங்கள், தமுமுக பணிகள் சிறக்க உங்களுடைய நன்கொடைகளை தாராளமான அள்ளித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
உங்களுடைய நன்கொடைகளை M.O./D.D./Cheque மூலம் அனுப்பலாம்.
உங்கள் நன்கொடைகளை
TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM A/C NO.034811011900510என்ற பெயரிட்டு
“TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM,
NO.7, VADA MARAICOIR STREET,
CHENNAI - 600 001
என்ற முகவரிக்கு அனுப்பிடுவீர்.--
ஜகாத் நிதிகள்
உங்களுடைய 'ஜகாத்' தொகைகளை என்ற TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM TRUST A/C NO.034811011900313 என்ற பெயரில் அனுப்பவும். ஜகாத் நிதிகள் அதற்குரிய வகைகளுக்கு மட்டுமே செலவிடப்படும்.
வெளிநாட்டில் வசிக்கும் தமிழக சகோதரர்கள் தங்கள் நன்கொடைகளை NRI Cheque மூலம் மட்டும் அனுப்பவும். வருமான வரிச் சலுகை (80G) பெற விரும்புவோர் TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM TRUST என்ற பெயரில் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி
TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM TRUST
NO.7, VADA MARAICOIR STREET,
CHENNAI - 600 001
TAMILNADU - INDIA.
Email: tmmkhq@gmail.com
Website: www.tmmk.in
Ph: 044-25247824, 95000 24398

Sunday, June 21, 2015

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரை நகராட்சி அலுவலகம் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை ஆணையாளரிடம் கேட்டறிந்தார்கள் ! !

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரை நகராட்சி அலுவலகம் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை ஆணையாளரிடம் கேட்டறிந்தார்கள் ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை நகராட்சியில் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் விதமாக 

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான
பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு.

அதுசமயம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வீதிகள் தோறும் வீடுகளில் அன்றாடம் குப்பைகளை சேகரிப்பதற்காக 21 தள்ளு வண்டிகள் புதிதாக வாங்குவதற்கு ஆவண செய்து தர வேண்டி சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதுபோல் கீழக்கரை நகராட்சிப்பகுதிகளில் வாடகை கட்டிடங்களில் இயங்கிவரும் அங்கன்வாடி கட்டிடங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதிமூலம் புதிய சொந்த கட்டிடங்கள் கட்டித்தருவதற்கும் கோரிக்கை தரப்பட்டது.

மேலும் கீழக்கரை பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான குடிதண்ணீர் அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடின்றி கிடைத்திட அதற்கான திட்டங்களை மன்றத்தின் மூலமாக ஆவண செய்து வழங்கும்படி அறிவுறுத்தினார்கள்.

இந்த நிகழ்வுகளின்போது கீழக்கரை நகராட்சி ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள், 21 வது வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

உடன் மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட செயலாளர் சகோ.B.அன்வர் அலி, மற்றும் நிர்வாகிகள் யாசர் அரபாத், நூருல் அஃப்பான், மற்றும் கீழக்கரை நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tuesday, June 16, 2015

கீழக்கரை நகராட்சி ஆணையாளரும் முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA வளர்ச்சி பணிகளை பற்றி கலந்து முக்கிய முடிவுகள்



15.06.2015 அன்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களும் கீழக்கரை நகராட்சி ஆணையாளரும் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கீழக்கரை நகர் நிர்வாகிகள் சந்தித்து கீழக்கரை வளர்ச்சி பணிகளை பற்றி கலந்து முக்கிய முடிவுகள் எடுகபடுள்ளன அபோது  உடன் தமுமுக மாவட்ட  துணை செயலாளர் ரைஸ்  இப்ராஹிம் அவர்களும்  கலந்து கொண்டனர்

Friday, June 12, 2015

முஸாபர் நகரில் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்காக த.மு.மு.க சார்பில் கட்டப்பட்டுவரும் வீடு

முஸாபர் நகரில் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்காக த.மு.மு.க சார்பில் கட்டப்பட்டுவரும் வீடு


  













முஸாபர் நகரில் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்காக த.மு.மு.க சார்பில் கட்டப்பட்டுவரும் வீடுகளை மூத்த தலைவர் அண்ணன் செ.ஹைதர் அலி தலைமையிலான குழு பார்வையிட்டார்கள்...