Sunday, February 26, 2012

மணி சங்கர் அய்யருடன் ம. ம. க துணைத் தலைவர் சந்திப்பு.

மணி சங்கர் அய்யருடன் ம. ம. க துணைத் தலைவர் சந்திப்பு.

சவுதி அரேபியாவின் கிழக்கு கரை நகரமான தம்மாமில் 23.02.12 அன்று நடைபெற்ற விருந்து வைபவத்தில் ம. ம. க மாநிலத் துணைத் தலைவர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கானும், த.மு.மு.க சவுதி கிழக்கு மண்டலச் செயலாளர் இஸ்மாயிலும் கலந்து கொண்டு அய்யருடன் கலந்துரையாடினர்.

அச்சந்திப்பின் போது, கடந்த 2009 பொதுத்தேர்தலில் ம. ம. க துணையுடன் நின்றிருந்தால், தான் சுலபமாக வென்றிருக்கலாம் என அய்யர் கருத்து தெரிவித்தார்.
சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில், த. மு. மு.க குறித்தும், ம. ம.க குறித்தும் காங்கிரஸ் தலைவரிடம் காணப்பட்ட புரிந்துணர்வு எதிர் வரும் 2014 பாராளுமன்றத் தேர்தலில் பிரதி பலிக்கும் எனத் தெரிகிறது.

இதற்கு முன், கடந்த 01.02.12 அன்று தம்மாம் வந்திருந்த மத்திய ம்ந்திரி இ. அஹமது அவர்கள், தம்மாம் நகரப் பொருளாளர் பிலால் அவர்களிடம் த.மு.மு.க மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ அவர்கள் குறித்து தமது எண்ணங்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத் தக்கது

2014 தேர்தலுக்கு பிரதான கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், த. மு. மு.க -- ம,ம.க வினரிடத்தில், காங்கிரஸ் தலைவர்கள் நெருங்கி வருவது தமிழக அரசியலின் போக்கை மாற்றி அமைக்கும் என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

-- நமது சிறப்பு செய்தியாளர்.

Friday, February 17, 2012

தென்சென்னை தமுமுக செய்திகள்


தென்சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை பகுதி, 140வது வட்டம் சார்பாக அப்பகுதியில் வசிககும் நூருல்லாஹ் என்ற சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக சிக்கன் பொக்கடா வியாபாரம் செய்வதற்கு தேவையான அடுப்பு, கடாய், தட்டு போன்ற தளவாட பொருட்கள் அவருக்கு வழங்கப்பட்டது. சைதைப் பகுதி தலைவர் பாவா, பகுதி தமுமுக செயலாளர் ஜாபர் சாதிக், பகுதி மமக செயலாளர் அப்துல் கையூம், பகுதி பொருளாளர் அப்துல் கப்பார், வட்டத் தலைவர் சகுபர் சாதிக், வட்ட மமக செயலாளர் ராஜா முஹம்மது மற்றும் வட்ட பொருளாளர் அப்துல் காதர் ஆகியோர் உடனிருந்நதனர்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப. அப்துல் ஸமது வெளியிடும் அறிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு உறுப்பினர்களாக பின்வருவோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

துணைத் தலைவர் குணங்குடி ஆர். எம. ஹனிபா

துணைப் பொதுச் செயலாளர் கோவை ஈ. உமர்

செயலாளர்கள்

முனைவர் ஜே. ஹாஜா கனி

பி.எஸ். ஹமீது

மவ்லவி சம்சுதீன் நாஸர் உமரி

தர்மபுரி சாதிக் பாஷா

கோவை சைய்யது

காஞ்சி மீரான் முகைதீன்

Thursday, February 16, 2012

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம. தமீமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை மனிதநேய மக்கள்

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம. தமீமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகளாக பின்வருவோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

துணைத் தலைவர் பொறியளார் என். ஷபியுல்லாஹ் கான்

துணைப் பொதுச் செயலாளர் எஸ். எஸ் ஹாரூன் ரஷீத்

அமைப்பு செயலாளர்க்ள்

எஸ் சலீமுல்லாஹ் கான்

சத்தியமங்கலம் சையத் அஹ்மது பாரூக்

மதுரை முகைதீன் உலவி

மதுக்கூர் ராவத்தர் ஷா

தலைமை நிலையச் செயலாளர்

வழக்குறைஞர் பி.எம். ஆர். சம்கதீன்

Sunday, February 5, 2012















தமுமுக சார்பக நகராட்சி கமிஷ்னரிடம் கோரிக்கை

இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு!

சவுதி அரேபிய வரலாற்றில் முதன்முறையாக, ரியாதிலுள்ள இந்திய தூதரகம், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவதற்காக நிகழ்ச்சி ஒன்றை 02.02.12 ஏற்பாடு செய்திருந்தது.

தூதரக அதிகாரிகள் சந்திப்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ரியாத் மத்திய மண்டல நிர்வாகிகள் ஹுஸைன் கனி, நூர், ஆஷிக் உள்ளிட்டோரும், தம்மாமிலிருந்து பிலால், அஜ்மல் மற்றும் அப்துல் காதர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அந்நிகழ்ச்சியில், த மு மு க கிழக்கு மற்றும் மத்திய மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு தாங்கள் அரேபிய மண்ணில் செய்து வரும் சமூக நலப்பணிகள் குறித்து எடுத்துக் கூறியதுடன், அதில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கு இந்திய தூதரக அதிகாரிகள் மட்டத்தில் தேவைப்படும் ஆலோசனை மற்றும் உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

தமிழக தொழிலாளர்கள் தங்களது பிரச்சனைகளை சுலபமாக எடுத்துரைப்பதற்கு வசதியாக, தமிழ் பேசும் ஊழியர்களை தூதரகம் நியமிக்க வேண்டும் என்றும், தொழிலாளர் ஒப்பந்த நகலை தூதரகம் பெற்று, அவை மீறப்படும் பட்சத்தில் சவுதி அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக, தொழிலாளர் பிரச்சனைகளான, ஹுரூப் (வேலைக்கு அமர்த்தியவரிடமிருந்து வெளியேறி விடுதல்) தொழிலாளர் ஒப்பந்தத்தை மீறுதல், குடியேற்ற/ குடிவிலக நடைமுறைகள் போன்ற முக்கியமான விடயங்கள் குறித்த கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

மேலும், சிறை அல்லது தடுப்புக்காவலில் உள்ள இந்தியர்களின் விடுதலை குறித்தும், அவர்களுக்கித் தேவையான சட்ட ஆலோசனைகளை அளிப்பது குறித்தும், தூதரகத்தில் இந்திய தொழிலாளர்கள் நலன் மற்றும் அவர்களின் வாக்குரிமை குறித்தும் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.

அத்துடன், கிழக்கு பிராந்தியத்தில், மிக அதிக அளவில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இந்திய தொழிலாளர்கள், தங்களது பிரச்சனைகளுக்காக ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாக 800 கி.மீ பயணப்பட்டு வருவதை தவிர்க்க கிழக்கு பிராந்தியமான தம்மாமில் ஏன் ஒரு, துணை தூதரகத்தை அமைக்கக்கூடாது என்ற ஆலோசனையும் த மு மு க நிர்வாகிகளால் முன் வைக்கப்பட்டது.

த மு மு க நிர்வாகிகளின் கருத்துக்களை கவனமுடன் செவிமடுத்த தூதரக அதிகாரிகள், கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், அத்துடன் த மு மு க நிர்வாகிகளும் தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக தூதரக அதிகாரிகளுடன் ஒத்துழைத்து அவர்களின் பணியை சுலபமாக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இறுதியாக இந்திய தூதரின் செயலாளர் திரு. மனோகர் ராம் த மு மு க நிர்வாகிகளுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்காக நன்றி கூறினார்.

- அப்துல் காதர்

Thursday, February 2, 2012

நீதி எங்கே?

1995 ஆம் ஆண்டு நாகூரில் நடைப்பெற்ற பார்சல் வெடிகுண்டு வழக்கில் தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கில் சேர்க்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் மவ்லவி js ரிபாயி அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை சமுதாய உறவுகளுடன் வன்மையாக கண்டிக்கிறோம், இந்நிகழ்வு தமிழக நீதித்துறையில் காவிகளின் கயவர்கள் இருப்பதை தெள்ளத்தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.
ஆயிரம் காவிகள் நீதித்துறையில் இருந்தாலும் இன்ஷா அல்லாஹ் இறுதி வெற்றி நமக்கே.