Tuesday, April 22, 2014

நடிகர் விஜய் பற்றிய அவதூறு பேச்சு: தமுமுகவிற்கு எந்தவித தொடர்பும் இல்லை

தமுமுகவின்
பத்திரிக்கை அறிக்கை
_____________________________
நடிகர் விஜய் பற்றிய அவதூறு பேச்சு: தமுமுகவிற்கு எந்தவித தொடர்பும் இல்லை
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மவ்லவி ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
சில மணி நேரங்களுக்கு முன்பு யூடியுப் இணையதளத்தில் நடிகர் விஜய் அவர்களை பற்றி தரக்குறைவாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர் பேசி உள்ளார் என பலர் நம்மை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அதன்அடிப்படையில் யூடியுப் இணையதளத்தை ஆய்வு செய்தபோது நடிகர் விஜய் அவர்களை அவதூறாக பேசியவருக்கும் தமுமுகவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இதுபோன்ற பேச்சுகளை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது, இதுபோன்ற அவதூறான பேச்சுகளை சமூக வலை தளங்களிலோ, இணையதளத்திலோ எழுதவோ, பேசவோ கூடாது என்பதை தமுமுக தலைமை தமது தலைமை நிர்வாகிகள் முதல் கிளை உறுப்பினர்கள் வரை கண்டிப்பாக தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் அநாகரிகமான விமர்சனங்களுக்கும் நமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். அதுவேறு ஒரு இயக்கத்தின் சார்பில் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் அந்த இயக்கத்திற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்
(ஜே.எஸ். ரிபாயி)

Saturday, April 19, 2014

கீழக்கரை நகரில் உதயசுரியனுக்கு வாக்கு சேகரிக்கும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்







இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் முகமது ஜலில் அவர்களை ஆதரித்து கீழக்கரை நகரில் உதயசுரியனுக்கு வாக்கு சேகரிக்கும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்

Thursday, April 17, 2014

மல்லிப்பட்டினத்தில் மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி






கலவரம் நடைபெற்ற மல்லிப்பட்டினத்திற்கு மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி இன்று (16.04.2014) காலை சென்றார். அவரை ஜமாத் நிர்வாகிகளும், மமகவினரும் வரவேற்று சங்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பொதுச் செயலாளர் கேட்டறிந்தார். இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல், சமூக மோதலாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டதாகவும், தினத்தந்தி பத்திரிக்கை, அப்பட்டமாக பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் ஜமாத்தினர் குறைகூறினர். தற்போது 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை ஜாமீனில் எடுப்பதற்கு மமக சட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
நேற்று நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த இந்துக்களும், முஸ்லிம்களும் ‘ஒற்றுமையாக இருப்போம்’ என வாக்குறுதிகளை பரிமாறிக் கொண்டதாகவும், சேதப்படுத்தப்பட்ட தர்ஹாவை இந்துக்கள் தங்கள் செலவில் சரிசெய்து தருவதாக கூறியுள்ளதாகவும் ஜமாத்தினர் கூறினர்.
மமக பொதுச் செயலாளரை சந்திக்க அவ்வூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வருகை தந்தனர். அவர்களிடம், ‘அமைதியைப் பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும், பல சமூக மக்களும் வாழும் ஜனநாயக நாட்டில் மிகுந்த பொறுப்போடு நாம் செயல்பட வேண்டும்’ என்று பொதுச் செயலாளர் கூறினார்.
இச்சந்திப்பின்போது ஜமாத் தலைவர் முகம்மது ரபீக், செயலாளர் எச். சேக் அப்துல்லா, தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எச். அஹமது கபீர், செயலாளர் எச். ரஹ்மத்துல்லா, பொறுப்பாளர்கள் அப்துல் ஜப்பார், கே.எச்.எச். முகம்மது ஹனீபா, அப்துல் மஹ்ரூப், எம்.கே.எம். அபுதாஹிர் மற்றும் மமக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
இச்சந்திப்பு தங்களுக்கு ஆறுதலாகவும், மன நிம்மதியாகவும் இருப்பதாக ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tuesday, April 15, 2014

நக்கீரனில் நமது பொதுச்செயலாளர்

                                              இன்றைய நக்கீரனில் நமது பொதுச்செயலாளர்


நாட்டை வழி நடத்தவும், மக்களுக்கு சேவை யாற்றவும், அரசியல் களம் இன்றியமையாததாக இருக்கிறது. இன்றைய அரசியல் என்பது வணிகம், சுயநலம், சாதியம், மதவாதம் போன்ற அழுக்குகளால் சூழப்பட்டுள்ள நிலையில்; சேவை சார்ந்த அரசியலை முன்னெடுத்து, 

தத்துவங்களை மையப்படுத்தி 2009 பிப்ரவரி 7 அன்று மனித நேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.

சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்ற கொள்கைகளை முன்னிறுத்தி, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்களின் ஜனநாயக உரிமைகளை முழங்கியும், அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களை வழிநடத்தியும் எமது மனிதநேய அரசியலை செயல்படுத்தி வருகிறோம்.

கொள்கை சார்ந்த நெறிமுறைகளின் வழியாக எமது தொண்டர்களை மிகச்சிறந்த ஜனநாயகவாதிகளாக வார்த் தெடுக்கிறோம். "மக்களைத் திரட்டு -அரசியலை மாற்று'’’என முழங்குகிறோம்.

அரசியல் வழிகாட்டி முகாம்கள், பண்பு பயிற்சி முகாம்கள், பேச்சாளர் பயிற்சி முகாம்கள் நடத்தி ஒவ்வொரு தொண்டரையும் ஒரு தலைவரைப் போலவும்; ஒவ்வொரு தலைவரையும் ஒரு தொண்டரைப் போலவும் பக்குவப்படுத்தி அவர்களை களமாட அனுப்புகிறோம்.

நாங்கள் தலைவர்களை முன்னிலைப்படுத்துவதில்லை. மாறாக, தத்துவங்களை முன்னிலைப் படுத்துகின்றோம். தனிநபர் துதி பாடலைத் தவிர்த்து, கூட்டுத் தலைமையை முன்மொழிகிறோம். எமது மனிதநேய அரசியல் என்பது குரலற்ற மக்களின் குரலாகவும்; தலைமைத்துவம் இல்லாத சமூகங்களின் தலைமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதன் விளைவாகவே, வஞ்சிக்கப்படும் முஸ்லிம் சமூகத்தின் இதயத் துடிப்பாகவும், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைக் குரலாகவும், நசுக்கப்படும் தொழிலாளர்களின் போர்க் குரலாகவும், ஒடுக்கப்படும் மக்களின் இடிமுழக்கமாகவும் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கைகள் இருக்கின்றன.

முல்லைப்பெரியாறு அணை உரிமைப் போராட்டம், காவிரி பாசன விவசாயிகளின் வாழ்வுரிமைக் களம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் எழுச்சி, டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்புக்கு எதிரான கலகங்கள், கல்பாக்கம் அணு மின்நிலைய எதிர்ப்பு யுத்தம், நாகை மாவட்டத்தில் அனல் மின் நிலையங்களுக்கு எதிரான கிளர்ச்சி,

ஆற்று மணல் கொள்ளைகளுக்கு எதிரான அறப்போர் -என தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களில் தீவிரமாய் களமாடிவரும் வரலாறு எமக்கு இருக்கிறது. அதுமட்டு மல்லாமல்,

ஈழத்தமிழர் விவகாரத்தில் கட்சி தொடங்கிய நாள் முதல் ஒரேநிலைப்பாட்டில் சமரசமின்றி அம்மக்களுக்காக மனிதநேய மக்கள் கட்சி போராடி வருவதில் எங்களுக்கு மன திருப்தி உண்டு.

2009 நாடாளுமன்றத் தேர் தலின்போது, ‘இலங்கையில் ஈழத் தமிழர்களை கொத்துக் கொத்தாய் கொன்றொழித்த சர்வாதிகாரி ராஜபக்சேவை, சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும்’என முதல் குரலை மனிதநேய மக்கள் கட்சிதான் எதிரொலித்தது. ஆம்! மற்றவர்கள் தாமதமாய் சிந்திக்கும் யாவற்றையும், முன்கூட்டியே பிரகடனம் செய்வதுதான் மனிதநேய மக்கள் கட்சியின் தனித்துவ அரசியலாகும்.

புலிப்படை தலைவர் பிரபா கரன் அவர்களின் மகன் பாலச் சந்திரன், சிங்கள பேரினவாத ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட துக்க செய்தி உறுதியானபோது; உலகத் தமிழர்கள் விம்மி அழுதபோது; உலக அளவில் முதலில் களமிறங்கி, சென்னையில் இருக்கும் இலங்கை துணைத் தூத ரகத்தை முற்றுகையிட்டு; எதிர்ப்பை பற்றவைத்த துணிச்சல் பலரும் வியந்த ஒன்றாகும்.

ஃபாஸிஸம், சாதியவெறி, மதவெறி, வன்முறை, தீவிரவாதம் உள்ளிட்ட மக்கள் விரோத செயல் பாடுகளுக்கு எதிராக மக்களை தட்டியெழுப்பும் விழிப்புணர்வு அரசியலை பொறி பறக்க பரப்புரை செய்வதில் நாங்கள் எப்போதும் முன்னிலை வகிக்கிறோம். தோழமை யை உயிராக மதிப்பதும்; பகைமை யைக் கூட பக்குவமாக எதிர் கொள்வதும் நாங்கள் பின்பற்றும் பொதுவாழ்வின் இலக்கணமாகும்.

இந்தியாவின் ராஜபக்சே வாகத் திகழும் நரேந்திர மோடியை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி; இலங்கையின் நரேந்திரமோடியாகத் திகழும் ராஜபக்சேவை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி; நீதியின் நெறிபிறழாமல் எதிர்ப்பதே எம் கொள்கையாகும்.

உலகமெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் எமது சொந்தங்களாகும். அந்த வழியிலேயே இந்தியாவில் வாழும் சிறுபான்மை யினரில் பெரும்பான்மையினராக வாழும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைக் களங்களில் முதல் நிலை வீரர்களாய் அணிவகுக்கின்றோம். அதேபோல் கிறித்தவர்கள் உள்ளிட்ட இதர சிறுபான்மையினரின் நலன்களுக்காகவும் போராடுகிறோம்.

இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான கட்சி அல்ல. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட, பெரும் பான்மை சமூகங்களையும் அங்கத்தினர்களாகக் கொண்ட ஒரு ஜனநாயகப் பேரியக்கமாகும்.

மதச் சார்பின்மைக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விளக்கங்கள் உண்டு. மதம் சார்ந்த நிலைகளிலிருந்து முற்றிலு மாக விலகியிருக்கும் கொள்கைதான் மேற்கத்திய நாடுகள் பின்பற்றும் மதச் சார்பின்மையாகும். ஆனால் நாம் முன்வைக்கும் மதச்சார்பின்மை என்பதற்கான அர்த்தம்,

அனைத்து மதத்தினருக்கும் மத்தியில் பொது ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதும், அதன்வழியே சிறுபான்மையினரின் வாழ்வுரிமைகளைக் காப்பது என்பதுமாகும். அதன் ஊடாகவே எமது அரசியல் பயணம் தொடர்கிறது.

மாற்று அரசியலுக்காகக் குரல் கொடுக்கும் நாங்கள், களங்களில் சமூக நீதிக்காகவும்; சமூக நல்லிணக்கத்திற்காகவும்; சில சமயங்களில், சில சமரசங்களை செய்து கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. இந்திய ஜனநாயக சூழலில் அரசியலையும், கொள்கைகளையும் கவனமாக ஒன்றுக்கொன்று உரசிக் கொள்ளாதவாறு கையாள வேண்டியிருக்கிறது.

நாங்கள் பாதைகளை மாற்றுவதில்லை; ஆனால் குதிரைகளை மாற்றுவதுண்டு. எமது அரசியல் பயணத்தில் நாங்கள் விமர்சனங்களுடன் கூடிய, தோழமைகளைப் பேணுகிறோம். அது ஆரோக்கியமான அரசியலுக்கும், தூய்மையான நட்புக்கும் வழிகாட்டுகிறது.

திராவிட இயக்க சிந்தனைகள், தமிழ் தேசிய சிந்தனைகள், இடதுசாரி - முற் போக்கு சிந்தனைகள் ஆகியவற்றோடு எப்போதுமே நட்பு பாராட்டும் அரசியலை முன்னெடுக்கிறோம். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பன்னாட்டு பெருநிறு வனங்களின் சுரண்டல், கட்டுப்பாடற்ற கலாச்சார சீரழிவுகள்,

இயற்கை -சுற்றுச் சூழலுக்கு எதிரான பன்னாட்டு சூழ்ச்சிகள் என உலக அரசியலையும் பேசுகிறோம். வணிக அரசியல், தேர்தல் சீர்திருத்தம், சிறுபான்மையினருக்கு எதிரான சதிகள், தலித்துகள் -பழங்குடிகளுக்கு எதிரான அடக்குமுறைகள், அரச வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் என உள்நாட்டு அரசியலையும் பேசுகிறோம்.

ஊழலின் நிழலைக்கூட நெருங்கக்கூடாது என்கிற உன்னத லட்சியத்தோடு, அரசியலை மாபெரும் சேவைக்கான களமாக கருதும் எண்ணங்களோடு எமது களப்பணிகள் 5 ஆண்டுகள் நிறைவு பெற்று ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆலை முதலாளிகளும் பண்ணை ஜமீன்களும் பன்னாட்டு பண முதலைகளும் இந்திய அரசியலை ஆக்கிரமித்து வரும் சூழலில் மனசாட்சியுள்ள குடிமக்களை நம்பியே எங்களின் அரசியல் இருக்கிறது.

தூய்மையான எண்ணங்களோடும் நேர்மையான அணுகுமுறைகளோடும் உயர்வான கொள்கைகளுடனும் கண்ணியமாக அரசியல் பணியாற்ற துடிக்கும் மனிதநேய மக்கள் கட்சியை வலிமையாக்க எங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகிறோம்.

ஆற்றலும் அறிவும் நேர்மையும் கொண்ட அடித்தட்டு மக்கள் யாவரும் கட்சியின் உயர் பொறுப்புக்கு வரலாம் என்கிற சுதந்திர விதிகளைக் கொண்ட மனிதநேய மக்கள் கட்சி அரசியல் அதிகாரத்தில் வலிமை பெற வர விரும்புகிறது. ஜனநாயகத்தை அனைவருக்கும் பொதுமைப்படுத்தவும் அரசியல் அதிகாரத்தை எளியவர்களுக்கும் விரிவுபடுத்தவும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தோள்கொடுங்கள் என உரிமையோடும் உணர்வோடும் கேட்கிறோம்.

தற்போது இரண்டு சட்டமன்ற உறுப்பினர் களுடனும், நூற்றுக்கணக்கான உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடனும் ஊழலற்ற; நேர்மையான மக்கள் பணியை செய்துவரும் நாங்கள், இப்போது நாடாளுமன்றத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் முதுபெரும் தலைவர் டாக்டர் கலைஞர் தலைமையிலான தி.மு.க., முஸ்லிம்லீக், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் அங்கம் வகிக்கும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியினர், போர்வீரர்களாக களத்தில் நிற்கின்றனர்.

எமக்கு மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு இறைவன் அருளால் நாங்கள் பெறக்கூடிய வெற்றி எமது அரசியலில் திருப்புமுனைகளையும், புதிய நம்பிக்கையையும் தரும் என எதிர்பார்க்கிறோம்.

ஐயா பெரியார், பேரறிஞர் அண்ணா, கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத், பெருந்தலைவர் காமராஜ், ஐயா முத்துராமலிங்கத்தேவர், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார், தோழர் ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் பக்குவப்படுத்திய தமிழ்மண்ணில் ‘வட இந்திய அரசியல் கலாச்சாரம்’ ஃபாசிச வடிவில் வேர்விடத் துடிப்பதை எதிர்க்கிறோம்.

இன்று தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம்லீக், புதிய தமிழகம் உள்ளிட்ட சமூக நீதிக் கட்சிகளின் அணியில் மனிதநேய மக்கள் கட்சி முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது கூட்டணியை புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்யும் உத்திகளோடு புறப்பட்டிருக்கிறோம்.

எமது கொள்கை அரசியலை ஏற்று நாடே எங்கள் பின்னால் அணிவகுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், இன்று விதைகளைத் தூவுகிறோம்; நாளை வரும் தலைமுறைகள் அதை அறுவடை செய்யும் என நம்புகிறோம்.

நாங்கள்தான் அடுத்த ஆட்சியைக் கைப்பற்று வோம் என்று கூறவில்லை. ஆனால், நாங்கள் இல்லாமல் எந்த ஆட்சியும் இல்லை என்பதை அழுத்திச் சொல்கிறோம்.

எளிய மக்கள் அரசியல் அதிகாரத்தில் வலிமை பெறவேண்டிய கொள்கைப் பிடிப்புடனும், லட்சிய வேட்கையுடனும் தேர்தல் களத்தில் நிற்கும் மனிதநேய மக்கள் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை



நன்றி:-  நக்கீரன் 

மனித நேய மக்கள் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம்





3.04.2014இன்று கீழக்கரை  ஜனநாயக முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் ஹாஜி;ஐலீல் அவர்கலை ஆதரித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில்  இன்று கீழக்கரை இல் மாபெரும்  தெருமுனை பிரச்சாரம் கூடாம் இந்த கூடத்துக்கு மமக மாவட்ட செயலாளர்  ஜாகிர் ஹுசைன்  தலைமை தாங்கினார் திமுக கீழக்கரை நகர் தலைவர் பசீர் அஹ்மத் உரை நிகழ்த்தினார் மற்றும் மமக மாநில தலைமை கழக பேச்சாளர் ஆம்பூர் நிசார் அவர்கள் சிறப்பு உரை நிகழ்த்தினார் கீழக்கரை  நகர் தமுமுக மமக நிர்வாகிகள் மற்றும்  பொறுப்பாளர்மற்றும் தமுமுக மமக உறுப்பினர் ஊர பொது மக்கள் கலந்து கொண்டனர்

Friday, April 4, 2014

03.04.2014 அன்று கீழக்கரையில் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு









03.04.2014 அன்று ஜனநாயக முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் ஹாஜி;ஐலீல் அவர்கலை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கீழக்கரையில் திரளாக கூடியிருந்த மக்களிடையே  வாக்கு சேகரிப்பு, அப்போது அங்கு படை சூழ வந்த மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் நகர் நிர்வாகிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர் .  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விடுதலை சிறுத்தை கட்சி புதிய தமிழக கட்சி திமுக நகர்  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூடி இருத்த பொதுமக்கள்  மதில் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினர் 

Thursday, April 3, 2014

01.04.2014 அன்று கீழக்கரை ஜனநாயக முற்போக்கு கூட்டணி உழியர் கூட்டம் நடந்தது

01.04.2014 அன்று கீழக்கரை ஜனநாயக முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் ஹாஜி;ஐலீல் அவர்கலை ஆதரித்து கீழக்கரை ஹுசைனிய மஹாலில்உழியர் கூட்டம் நடந்தது   இந்த கூடத்தில் கீழக்கரை தமுமுக தலைவர்   முகம்மது சிராஜுதீன் மற்றும் கீழக்கரை மமக தலைவர் கோஸ் முகம்மது அவர்கள் உரை நிகழ்த்தினார், இந்த கூடத்துக்கு கீழக்கரை திமுக நகர் தலைவர் பசீர் அஹ்மத்  தலைமை தாங்கினார். மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர் தலைவர் லாப்பை தம்பி விடுதலை சிறுத்தை கட்சி நகர் பொறுப்பாளர் முஹமத் மொகைதீன் புதிய தமிழக கட்சி  பொறுப்பாளர் சுலைமான் முன்னிலை வகித்தனர்.








கீழக்கரை  நகர் தமுமுக மமக நிர்வாகிகள் மற்றும்  பொறுப்பாளர், செயலாளர் கிங்ஸ் ட்ராவல்ஸ் அமீன், இக்பால்  சலீம்,அபுதாஹிர்,ஈசி சாதிக், புஹாரி , துபாய் மண்டல் துபாய் மண்டல துணைச்செயலாளர்  ஜெயினுல் ஆப்தீன், இக்பால்  மற்றும் தமுமுக மமக உறுப்பினர் கலந்து கொண்டனர்.

Tuesday, April 1, 2014

ஹைத்ராபாதில் தொடர்ந்து வரும் காவல்துறை அராஜகம்





புகழ்பெற்ற மார்க்க அறிஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஹைத்ராபாதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, 
ஹைத்ராபாதில் உள்ள அஷ்ரபுல் உலூம் அரபிக் கல்லூரியின் நிறுவனரும், அக்பரி மசூதியின் இமாமாகவும் உள்ள மவ்லானா அப்துல் கவி அவர்கள், கடந்த 23/03/14 அன்று, உ.பி மாநிலம் தேவ்பந்தில் நடக்கும் மதராஸாக்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஹைத்ராபாதில் இருந்து விமானம் மூலம் புதுடெல்லி சென்றார், இரவு 7.30மணியளவில், அங்குகாத்திருந்த குஜராத் போலீசார், மார்க்க அறிஞர் அப்துல் கவி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர், முன்னாள் அமைச்சர் ஹரீஷ் பாண்டியா கொல்லப்பட்ட வழக்கில் இவருக்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர், இவரது கைது ஹைத்ராபாதில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது, அங்குள்ள அனைத்து சமுதாய அமைப்புகளும், இவரின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் மமக மாநில அமைப்பு செயலாளர் மவ்லவி சம்சுதீன் நாசர் உமரி தலைமையில் வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹ்மத், மவ்லவி அப்துல் கதீர் காஜி, மாவட்ட து.செயலாளர் கிசர் உசேன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் பாபுசேட் ஆகியோர் அடங்கிய ஐவர் குழுவை, உண்மை நிலையை அறிய, ஹைத்ராபாதிற்கு தமுமுக அனுப்பியுள்ளது, அவர்கள் அங்குள்ள அரசியல் தலைவர்கள், அஷ்ரபுல் உலூம் அரபிக் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர், மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், ஹைத்ராபாதின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிஸ்டர் அசதுத்தீன் உவைசி அவர்களை சந்தித்தும் ஆலோசனை நடத்தினர்,

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் 6 இடங்களில் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர்அலி வாக்குறுதி அளித்தார்.

ஹைதர்அலி பிரசாரம்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக மனித நேய மக்கள் கட்சி யை சேர்ந்த ஹைதர்தலி போட்டியிடுகிறார். அவர் நேற்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே உள்ள தளவாய்பாளையத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
வீதி, வீதியாக சென்று ஹைதர்அலி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். எனக்கு நீங்கள் வாய்ப்பு அளித்தால் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியை சீறிய முறையில் சிறந்த தொகுதியாக மாற்றுவேன். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் முதன்மையான தொகுதியாக மாற்றுவேன். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் 6 தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ ராமலிங்கம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சோம.செந்தமிழ்ச்செல்வன், அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் தியாக.சுரேஷ், அம்மாப்பேட்டை பேரூராட்சி தலைவர் கார்த்திகேயன், துணைத்தலைவர் ரமேஷ், பேரூராட்சி செயலாளர் வீரமணி, கத்தரிநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மகரூப் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஹைதர்அலி நிருபர்களிடம் கூறுகையில், “மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் ஐனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். மக்கள் மத்தியில் தி.மு.க. கூட்டணிக்கு மிகுந்த எழுச்சி உள்ளது. இதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட எம்.பி.யை தேர்தலுக்கு பிறகு நாங்கள் பார்க்கவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை போல விவசாயிகளின் அவல நிலையை போக்க, மீனவ சமுதாயத்தை, பழங்குடி சமுதாயமாக மாற்ற, மாணவர்களின் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்ய நான் பாடுபடுவேன்”என்றார்.

செய்திகள்: Daily Thanthi