Wednesday, November 19, 2014

இலங்கை வெலிக்கடை சிறையில் வாடிய தமிழகத்தை சேர்ந்த அனைத்து சமுதாய சிறைவாசிகள் எட்டுபேர் மனிதநேய மக்கள்கட்சியின் தொடர் முயற்சியால் விடுதலையடைந்தனர்

இலங்கை வெலிக்கடை சிறையில் வாடிய தமிழகத்தை சேர்ந்த அனைத்து சமுதாய சிறைவாசிகள் எட்டுபேர் மனிதநேய மக்கள்கட்சியின் தொடர் முயற்சியால் விடுதலையடைந்தனர் !

இலங்கை சிறையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த நபர்கள் தண்டனை அனுபவித்து வந்தனர். கடந்த 2010 ல் நடந்த இலங்கை மற்றும் இந்தியாவின் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை வெலிக்கடை சிறையில் இருந்து 16 கைதிகள் தமிழகம் கொண்டு வரப்பட்டு இங்குள்ள தமிழக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் தண்டனை பெற்று தன் குடும்பத்தாருடன் திருந்திவாழ விருப்பப்படும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த நபர்களின் நிலை அறிந்து சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றகுழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான  பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் தமிழக அரசிடம் பரிந்துரை செய்து இப்பிரச்சினையில் கூடுதல் கவனமெடுத்து பேசி வந்தார்கள்.

அதனடிப்படையில் கடந்தமாதம் திருச்சி சிறையில் இருந்த மஞ்சத்திடல் திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிங்கராயர் 50/M, கண்ணன் 45/M, ராமநாதன் 48/M, ராஜகோபால் 49/M, முனியசாமி 50/M, காசீம் 50/M, இபுராஹீம் மகன் மீரா முஹைதீன் 50/M, மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த முஹைதீன் மகன் முஹைதீன் அபூபக்கர் 40/M ஆகிய எட்டு நபர்களும் தன் வாழ்நாளில் அதிகமான நாட்களை தன்னுடைய மனைவி மக்களை விட்டு பிரிந்து சுமார் 11 வருடங்களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி தற்போது விடுதலையடந்துள்ளனர்.

மேலும் சிறையில் உள்ள மீதமுள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் உட்பட எட்டு நபர்களும் வரும் மாதங்களில் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.


சிறையிலிருந்து விடுதலையான அனைவரும் தொலைபேசியிலும், நேரிலும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முஹைதீன் அபூபக்கர் பேராசிரியர் அவர்களை நேரில் சந்தித்து அறிவுரை ஏற்றார்.

No comments :