Saturday, August 21, 2010

இராமநாதபுரம் மாபெரும் மருத்துவ முகாம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம், மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் இப்ராகிம் அலி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி துவக்கி வைத்தார். தமுமுக அமைப்பின் மாவட்டத் தலைவர் சலிமுல்லா கான், மருத்துவ அணி செயலாளர் அன்வர் அலி, ரியாஸ் கான், பரக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் சுல்த்தான் வரவேற்றார்.
முகாமில் 513 பேருக்கு இலவசமாக ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டன.அப்பல்லோ மருத்துவமனையும் தமுமுகவும் இணைந்து நடத்திய இம்முகாமில், 22 பேருக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேல் சிகிச்சைக்காக இருதய அறுவைச் சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
கிழக்கு மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா நன்றி கூறினார். முகாமை ஆசிரியர் ஐயப்பன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

No comments :