Sunday, November 8, 2009

கேரள அரசைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


கேரள அரசைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


கம்பம்,நவ.7: பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் கம்பத்தில் ஏ.கே.ஜி. திடலில் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் முஹமதுசாதிக் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அஜ்மீர்கான்ஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு மாநில துணைச் செயலாளர் தமிமுன்அன்சாரி, மாநில அமைப்புச் செயலாளர் முஹமது கொளஸ் கேரள அரசைக் கண்டித்துப் பேசினர். தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் கேரள அரசுக்குப் புதிய அணை கட்ட நில அளவீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை கேரள அரசு கைவிட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். மீறினால் கேரளத்துக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் மறைத்தும், உணவுப் பொருள்களைத் தடுத்தும் போராட்டம் நடத்துவோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் 5மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் ஹக்கீம் நன்றி கூறினார்.

No comments :