Tuesday, November 24, 2009

இத்தாலிய பெண்களை முஸ்லிமாக மாற்றிய லிபியா அதிபர் கடாபி!

ரோம் நகரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட லிபியா அதிபர் கடாபி, 200 இத்தாலிய பெண்களை முஸ்லிம் மதத்துக்கு மாற செய்தார்.

ரோம் நகரில் கடந்த வாரம் உணவு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லிபியா அதிபர் கடாபி வந்திருந்தார். லிபியா நிறுவனம் சார்பில் 200 அழகிய இளம் பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப் பட்டிருந்தனர். லிபியா தூதரகம், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடாபியை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் 200 பெண்களும் வந்திருந்தனர். கடாபி உறுதி மொழி படிக்க அந்த பெண்களும் அந்த உறுதி மொழியை சொன்னார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குரான் புத்தகம் அளிக்கப்பட்டது. முஸ்லிம் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் கடாபி இந்த கூட்டத்தில் பேசினார்.

இதுபற்றிய விரிவான கையேடு ஒன்று 200 பெண்களுக்கும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில பெண்கள் குறிப் பிடுகையில், " இந்தகூட்டத்தில் கலந்து கொண்டால் சில ஆயிரம் ரூபாய் பணமும், லிபியா நாட்டு பரிசு பொருட்களும் கிடைக்கும், என கூறினார்கள். ஆனால், குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை' என்றனர்.

கடாபி கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான கருத்துக்களும் கூறப்பட்டனவாம். அதாவது, "ஏசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை. அவர் இருந்த இடத்தில் யாரோ ஒரு நபர் இதேபோல இருந்துள்ளார்'என, இந்த கூட்டத்தில் பேசிய சிலர் தெரிவித் தார்கள், என மதமாறிய பெண்கள் தெரிவித்தனர்.

No comments :