Thursday, July 22, 2010

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு

திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு இடைத்தேர்தல்:
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு
மாநில பொதுசெயலாளர் அப்துல் சமது தகவல் திருச்சி, ஜுலை.21-திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் மீரான் மைதீனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.இது குறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-கண்டனம்திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு இடைத்தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்மீரான் மைதீன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து எங்கள் கட்சியினர் பிரசராம் செய்த சென்ற போது, தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு வேட்டி- சேலைகளை வழங்கி உள்ளனர். இதை கொடுத்த தி.மு.க.வினர் மீது போலீசார் எந்த வித வழக்குப்பதிவு செய்யவில்லை. அதற்கு மாறாக பஸ் மீது கல்வீசியதாகவும் எங்கள் கட்சியினர் மீது பொய் வழக்குபதிவு செய்துள்ளனர்.கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவுஅதைப்போல, மனித நேயமக்கள் கட்சி விமானநிலைய தலைவர் பாபா பக்ரூதீன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சாதாரண வழக்கு போட்டு உள்ளனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் கூடிய மனிதநேய மக்கள் கட்சியினர் 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு போட்டு உள்ளனர். இது கண்டனத்துக்குரியதாகும். பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட எங்கள் கட்சியினரை போலீசார் விடுதலை செய்ய வேண்டும். நாங்கள் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை விரும்புகிறோம். இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை தருகின்றனர். அதுபோல, இந்த தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும் அ.தி.மு.க. கட்சியிடம் ஆதரவை கேட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.பேட்டியின் போது திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் பஷீர்அகமது, மாவட்ட துணைச்செலயாளர்கள் ரியாசுதீன், ராஜாமுகமது, வக்கீல காஜாமைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
நன்றி: தினத்தந்தி

No comments :