Tuesday, June 22, 2010

ஊடகங்களின் பார்வையில் ராமநாதபுரம் மாவட்ட, இலவச பாட நோட்டுகள் வழங்கல்

ராமநாதபுரம், ஜூன் 21: தமுமுக சார்பில் ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய ஊர்களில்ஏழை மாணவ,மாணவியருக்கு இலவச பாட நோட்டுக்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ராமநாதபுரம் சின்னக்கடை தெருவில் நடந்த விழாவுக்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் சலிமுல்லாகான், தமுமுக மாவட்டத் தலைவர் சாதிக்பாட்சா ஆகியோர் தலைமை வகித்தனர். நகர் தலைவர் பரக்கத்துல்லா, செயலர் அப்துல்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் அப்துல்கனி வரவேற்றார். தமுமுக மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஹனீபா கலந்து கொண்டு அரசுப்பள்ளியில் பயிலும் 300 ஏழை மாணவ, மாணவியருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான கல்வி உதவிகளை வழங்கிப் பேசினார். மாவட்டத் துணைச் செயலர் அன்வர் அலி, ம.ம.க. பொருளாளர் சாகுல்ஹமீது,மருத்துவ அணி செயலர் ரியாஸ்கான், மாணவரனி செயலர் புரூக்கான் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.


கீழக்கரையில் இலவச பாட நோட்டுகள் வழங்கும் விழாவிற்கு தமுமுக வின் மாவட்டச் செயலர் தஸ்பீக் தலைமை வகித்தார். நகர் கழக நிர்வாகிகள் உஸ்மான் சேட்,முஸ்தகீன், பாக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர் தலைவர் முஜ்புர் ரகுமான் சுமார் 500 ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள் மற்றும் பென்சில், பேனாக்கள் வழங்கினார். பின்னர் கீழக்கரையில் 45 ஆண்டுகளாக கூர்காவாக பணியாற்றும் நேபாளத்தைச் சேர்ந்த பகதூருக்கு இரு கைவிளக்குகளையும் வழங்கி பேசினார். கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளையின் இணைச் செயலர் ஜமீல் முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments :