Wednesday, June 9, 2010

குவைத் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக இளைஞரை மீட்க த.மு.மு.க நடவடிக்கை:

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள் ளிட்ட அரபு நாடுகளில் ஏராளமான தமிழக இளைஞர்கள் அங்குள்ள ஸ்பான்சர்களால் அவதிக் குள்ளாகின்றனர்.பலர் சிறைகளில் அநியாய மான முறையில் வாடி வருகின் றனர். இவர்களை மீட்டெடுக்க அங்குள்ள த.மு.மு.க சகோதரர் கள் தங்களால் இயன்ற அளவு முயற்சிகளை எடுத்து வருகின் றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு குவைத்தில் நிர்கதியாக இருந்த 9 பேரை தாய்நாட்டிற்கு அனுப்ப முயற்சிகளை எடுத்து சென்னையில் இயங்கும் அதன் தூதரகத்தின் துணையுடன் மீட் டெடுத்தது நினைவிருக்கலாம். தொடர்ந்து இதுபோன்ற பணிக ளில் குவைத் த.மு.மு.க ஈடுபட்டு வருகிறது.கடந்த 22.04.2010 அன்று மாரி யப்பன் என்கிற இளைஞரை அவரது குவைத் ஸ்பான்சர் இந்தி யத் தூதரக வாசலில் வைத்து பொதுமக்களின் முன்பாகவே இரும்புப் பைப்பால் அடித்து காயப்படுத்தியதுடன் அவரை போலீசிலும் ஒப்படைத்துள்ளார். இச்செய்தி அங்குள்ள நாளிதழில் வெளிவந்துள்ளது. மாரியப்பனை ஸ்பான்சரிடமிருந்து மீட்க வேண் டுமானால் இந்தியத் தூதரகத்திடம் எழுத்துப்பூர்வமான புகார் அளிக் க வேண்டும். யாரும் புகார் அளிக் காத நிலையில் குவைத் த.மு.மு.க நிர்வாகிகள் தூதரக அதிகாரி சேஷாத்ரிராவ் அவர்கள் நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இதையடுத்து மாரியப்பனை அவரது ஸ்பான்சரிடம் இருந்து விடுவித்து, தூதரகக் காப்பகத்தில் வைத்துள்ளனர். விரைவில் அவர் தாய்நாடு திரும்ப உள்ளார். மாரியப் பனை த.மு.மு.க நிர்வாகிகள் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளனர்.செய்தித் தாள்களில் வெளிவந்த செய்தியை வைத்து நேரில் வந்து விசாரித்து, ஒரு முஸ்லிம் அல்லாத சகோதரரின் உரிமைக்காகப் போராடும் த.மு.மு.க வினரைப் பற்றி தூதரக அதிகாரி கேட் டறிந்து பாராட்டினார். ஏற்கன வே, திருவாரூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற சகோதரர் துப்பாக்கி குண்டடிப்பட்டு, அவ திக்குள்ளான போது, த.மு.மு.க &வினர் மற்ற அமைப்பு சகோ தரர்கள் (டி.எம்.சி.ஏ) துணையுடன் செயல்பட்டனர். பல நாட்களுக்குப் பின் ஜெயக்குமார் ஊர் திரும்பினார்.-குவைத்திலிருந்து அபுஃபாயிஸ்.

No comments :