Friday, September 18, 2009

டெல்லியில் இமாம் மீது தாக்குதல்



டெல்லியின் புறநகர் பகுதியான ராஜாப்பூர் கிராமம் 9வது செக்டர், ரோஹினி ஏரியாவைச் சேர்ந்த முஸ்லிம்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அருகிலுள்ள பூங்கா ஒன்றினை தங்களது ஈத் பெருநாள் திடலாக உபயோகித்து வருகின்றனர்.

இவ்வருடமும் எதிர்வரும் ஈத் பெருநாள் தொழுகையை இதே பூங்காவில் நிறைவேற்றுவதற்காக தயாராகி வரும் முஸ்லிம்கள், இதற்கென ஒரு கமிட்டியை உருவாக்கியுள்ளனர். அதன் தலைவரான முஹம்மது ஃபஹீம் என்பவரைத் தாக்கி கடத்துவதற்கு கடந்த இரவு முயற்சி நடந்துள்ளது.

இதே ஏரியாவைச் சேர்ந்த சிலர் கடந்த சில மாதங்களாக இவ்வருடம் ஈத் தொழுகையை இந்த பூங்காவில் நடத்த விடமாட்டோம் என மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 5 நபர்களைக் கொண்ட ஒரு குழு முஹம்மது ஃபஹீமை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் நிலை குலைந்து போன ஃபஹீமை கடத்திச் செல்லவும் முயற்சித்துள்ளது.

இதற்கிடையில் ஃபஹீமின் கூக்குரலைக் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டதால் வன்முறையாளர்கள் ஓடிவிட்டதாக தெரிகிறது. முஹம்மது ஃபஹீம் தற்சமயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பெற்று வருகிறார்.

இச்சம்பவத்திற்கு மார்க்ஸிஸ்ட் லெனின் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அருகிலுள்ள பிரஷாந்த் விஹார் காவல் நிலைய அதிகாரி சஞ்செய் ஷர்மாவிடம் முறையிட்ட அவர்கள் செப்.16 அன்று இத்தாக்குதலை கண்டித்து ஊர்வலம் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஐந்து நாட்களுக்கு முன்பு தான் டெல்லி புறநகர் உயர் காவல் அதிகாரி அடுல் கத்தியார் முன் சமாதான கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இத்தாக்குதல் குறித்து அப்பகுதி கவுன்ஸிலரிடம் முறையிட்ட பொழுது, ஈத் தொழுகையை எதிர்ப்பவர்களிடமே பரிந்துரை வாங்கி வரும்படி கூறினாராம்.

பிஜேபி கவுன்ஸிலரிடம் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்.

செப்டம்பர் 16 பேரணி முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை தக்க வைக்க உதவுமா??!

No comments :