Tuesday, September 22, 2009

கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் திங்கள்கிழமை ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, சிறப்புத் தொழுகை நடைபெற்றது

கீழக்கரை, செப். 21: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் திங்கள்கிழமை ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, சிறப்புத் தொழுகை நடைபெற்றது. கீழக்கரையில் உள்ள மொத்தம் 8 ஜமாத் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும், ரம்ஜான் பெருநாள் சிறப்புத் தொழுகை 8 முதல் 11 மணி வரை நடைபெற்றது. கீழக்கரை பெரிய ஜூம்மா மசூதி, பழைய குத்பா பள்ளி மசூதி, கிழக்குத் தெரு அப்பா பள்ளி மசூதி, தெற்குத் தெரு பள்ளி மசூதி, மேலத்தெரு புது பள்ளி மசூதி ஆகிய மசூதிகளில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை, பெருநாள் குத்பா பேருரையும் நடைபெற்றது. மேலும், கே.இ.சி.டி. ஈத்கா மைதானம் மற்றும் பல இடங்களில் ஜூம்மா பேருரை நடைபெற்றது. காலை 11 மணிக்கு மேல் அனைத்து ஜமாத்தினர்களும் சம்பிரதாய முறைப்படி பெரிய ஜூம்மா பள்ளியில் ஒன்று கூடி ஜூம்மா குத்பாவில் கலந்துகொண்டனர். நடுத்தெரு ஜூம்மா பள்ளியில், கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ் உசைன் தலைமையில் தொழுகை நடைபெற்றது. கீழக்கரையில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சேர்த்து 5000-க்கும் மேற்பட்டோர் சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர். மேலும், வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பெருநாளை முன்னிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் இந்த சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், கே.இ.சி.டி. அறக்கட்டளை மூலமாக அரிசி, காய்கறி, மளிகை சாமான்கள் அடங்கிய பைகள் 1000-க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு வழங்கப்பட்டது.

No comments :