Saturday, September 12, 2009

முஸ்லிம் ஜமாத் நிர்வாகத் தகராறு ஊராட்சித் தலைவி, கணவர், மகன் உள்பட 61 பேர் மீது வழக்கு

கடலாடி, செப். 11: கடலாடி அருகே வாலிநோக்கத்தில் முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தில் ஏற்பட்ட தகராறில் வீடு மற்றும் வாகனங்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. மேலும் வீடு புகுந்து 150 பவுன் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டன. இதுகுறித்து ஊராட்சித் தலைவி, இவரது கணவர், மகன் உள்பட 61 பேர் மீது போலீஸôர் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகப் பொறுப்பை ஊராட்சித் தலைவி வகிதா சகுபர் (திமுக) தரப்பினரிடம் வக்ஃப் வாரியம் ஒப்படைத்துள்ளதாம். ஆனால், இதை எதிர்த்து அப்துல் ரசாக் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், புதுப் பள்ளிவாசல் ஒன்றில் பெண்கள் தொழுகைக்கு ஊராட்சித் தலைவி வகிதா சகுபர் தரப்பினர் ஏற்பாடு செய்ததாகவும், இதை எதிர் தரப்பினர் ஆட்சேபித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் அப்துல் ரசாக் தரப்பினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி புதுப் பள்ளிவாசலில் 17.9.2009 வரையில் பெண்கள் தொழுகை நடத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக காவல் துறை அதிகாரிகள் தடுத்ததன் பேரில், பள்ளிவாசலுக்கு வெளியே பெண்கள் தொழுகை நடத்தினார்களாம். இதில் ஏற்பட்ட விரோதத்தில் ரகமத்துல்லா என்பவரது வீட்டுக்கு ஊராட்சித் தலைவி, இவரது கணவர் சகுபர், மகன் தவ்பீக் ரகுமான் மற்றும் 21 பெண்கள் உள்பட 61 பேர் திரண்டு சென்றார்களாம். வீடு, கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைத் தாக்கி சேதப்படுத்தினார்களாம். மேலும் வீட்டுக்குள் புகுந்து 150 பவுன் நகைகளை அபகரித்துச் சென்று விட்டார்களாம். இச் சம்பவம் குறித்து சிக்கல் காவல் துறை ஆய்வாளர் (பொறுப்பு) பிரதாபன், உதவி ஆய்வாளர் (பொறுப்பு) மேனகா ஆகியோர் வாலிநோக்கம் வகிதா சகுபர், கணவர், மகன் உள்பட 61 பேரைத் தேடி வருகின்றனர்.

thanx :dinamani

No comments :