Friday, September 18, 2009

சேவையின்போது உயிர் நீத்த தமுமுக தொண்டர்


-அனீஸ்

திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த முகம்மது அலி ஜின்னா தமுமுகவின் உயிர் துடிப்புமிக்க நிர்வாகிகளில் ஒருவர். இவர் கூத்தா நல்லூர் நகர தலைவராக பணியாற்றி வந்தார்.

கடந்த 9ம் தேதி அல்அமான் என்கிற ஜமாத்திற்குச் சொந்தமான ஆம்புலன்ஸில் மற்றொருவருக்கு சேவை செய்துவிட்டு சென்னையி­ருந்து தனது சொந்த ஊரான கூத்தாநல்லூருக்கு திரும்பி வந்தார். வரும்போது கடலூர், சிதம்பரம் அருகே அதிகாலை 4 மணியளவில் ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக் குள்ளானது. ஜின்னா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தமுமுக மாநில துணைச் செயலாளர் எஸ்.எம்.ஜின்னா மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக சம்பவ இடத் திற்கு விரைந்தனர்.

ஜின்னாவின் உடலை மீட்ட தமுமுக நிர்வாகிகள் உடனடியாக பிரேத பரிசோதனையை முடித்துவிட்டு கூத்தாநல்லூர் கொண்டு சென்றனர்.

சம்பவ நடந்த அன்று மாலை மக்ரிப் தொழுகையை நிறைவு செய்ததும் கூத்தாநல்லூர் சின்னப் பள்ளிவாசலில் ஜின்னாவின் உடல் ஏராளமான தமுமுக மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மிகச்சிறந்த தொண்டரான ஜின்னாவின் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் தமுமுக வினரை மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூத்தாநல்லூரில் மாவட்ட தொண்டரணி செயலாளர் நூர்முகமது படுகொலை செய்யப்பட்டார். இரண்டு வாரங்களுக்குள் இரண்டு செயல் வீரர்களை இழந்து வாடும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதுபோன்ற நேரங்களில் அதிகமதிகம் இறைவனை வேண்டியும், மனம் தளராமலும் பணிபுரிய வேண்டும்.

No comments :