Wednesday, August 26, 2009

கீழக்கரையில் ரூ. 300 லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கைது



ராமநாதபுரம், ஆக. 25: கீழக்கரை காவல் நிலையத்தில் ரூ. 300 லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த அப்பா முகைதீன் கருணை மகன் செய்யது முகம்மது பாக்கர் (34). இவரது மனைவி ஆயிஷத் மர்லியா. இவருக்கு வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் விசாரணைக்கு கீழக்கரை காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, தலைமைக் காவலர் சண்முகவேல் ஆகியோர் ரூ. 300 லஞ்சம் கேட்டனராம். இதுகுறித்து செய்யது முகம்மது பாக்கர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரிடம் புகார் செய்தார். புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் மாறு வேடத்தில் சென்றனர். அப்போது கீழக்கரை காவல் நிலையத்தில் ரூ. 300 லஞ்சமாக தலைமைக் காவலர் சண்முகவேலிடம்(படம்) செய்யது முகம்மது பாக்கர் கொடுக்கும்போது, கைது செய்யப்பட்டார். லஞ்சம் கேட்ட கீழக்கரை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி ஏர்வாடியில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்குப் பாதுகாப்புக்குச் சென்று விட்டதால், அவர் கைது செய்யப்படவில்லை. இருவர் மீதும் விசாரணை நடந்து வருகிறது.

thanx to: dinamani

No comments :