Wednesday, August 12, 2009

புதுவை முஸ்லிம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு: பட்ஜெட் உரையில் அறிவிப்பு!

தமுமுக தொடர் போராட்டத்தின் வாயிலாக சென்ற 05.08.09 அன்று புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் உரையில் முதலமைச்சர் வி.வைத்திய லிங்கம் அவர்கள் முஸ்லிம் வகுப்பினருக்கு 2.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவிப்பு செய்தார். இந்த அறிவிப்பினை கேள்விப் பட்ட தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் புதுவை அரசுக்கும், முதலமைச்சர் வைத்தி யலிங்கம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இடஒதுக்கீட்டின் அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த தமுமுக நிர்வாகிகள் புதுவை அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நகர் முழுவதும் வால்போஸ்டர்கள் ஒட்டி முதலமைச்சர், சமூகநல அமைச்சர் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியினை வெளியிட்டனர்.

இடஒதுக்கீடு அறிவிப்பில் குளறுபடி?

புதுச்சேரி மாநிலத்தில் இடஒதுக்கீடு முறை கீழ்க்கண்டவாறு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. அதில் எஸ்.சி. பிரிவுக்கு 16%, எம்.பி.சி. 20%, ஓ.பி.சி. 13%, பொது 51% கடைப்பிடிக்கப்படு கிறது. இதில் எம்.பி.சி. பிரிவில் 34 சாதிகளும், ஓ.பி.சி.யில் 75 சாதிகளும் (முஸ்லிம்கள் உட்பட) உள்ளனர். புதுவை அரசு அறிவித்த முஸ்லிம் களுக்கான இடஒதுக்கீட்டில் 1.5 சதவிகிதம் எம்.பி.சி.யிலிருந்தும், 1 சதவிகிதம் ஓ.பி.சி.யிலிருந்தும் கொடுப் பதாக அறிவித்துள்ளது. ஆனால் முஸ்லிம்கள் அனைவரும் ஓ.பி.சி. பிரிவிலேயே உள்ளதால் இந்த 2.5 சதவிகித இடஒதுக்கீட்டை ஓ.பி.சி.யின் 13 சதவிகிதத்திலிருந்தே கொடுக்க வேண்டும், எம்.பி.சி.யிலிருந்து பிரித்து கொடுக்கக்கூடாது என பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத் தில் அமளியில் ஈடுபட்டதால் சென்ற 7.8.09 அன்று முதலமைச்சர் வைத்தி யலிங்கம், முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் மீண்டும் கருத்து கேட்கப்படும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் உரையில் வெளியிட்டப் பட்ட வரலாற்று சிறப்புமிகு இந்த அறிவிப்பு, தடங்கல் இன்றி நடை முறைக்கு வரவேண்டும் என்பது தான் புதுவை மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

தமுமுக வரவேற்பு

இது குறித்து கடந்த 05.08.2009 அன்று தமுமுக தலைவர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

புதுச்சேரியில் வாழும் முஸ்லிம்களின் நீண்டக் கால கோரிக்கையை ஏற்று இன்று புதுவை சட்டமன்றத்தில் முஸ்லிம் களுக்கு 2.5 சதவிதம் தனி இடஒதுக்கீடு வழங்கிய காங்கிரஸ் அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

புதுவையில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க கோரி நீண்ட காலமாக தமுமுக மாநாடுகளையும் போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளது. 2007ல் காரைக்கால் முதல் புதுச்சேரி வரை இருசக்கர வாகன பேரணி போராட்டத்தை இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து தமுமுக நடத்தி யுள்ளது. இதன் விளைவாக புதுவை சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இருப்பினும் இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதன் பிறகு புதுவை சட்டமன்றத்தில் முஸ்லிம் களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறை வேற்றிய பிறகும் ஒரு ஆண்டுக்கும் மேலாக அதை மத்திய அரசுக்கு அனுப்ப தவறிய திரு. ரங்க சாமி தலைமையிலான புதுவை அரசை கண்டித்தும், தீர்மானத்தை டெல்லிக்கு அனுப்ப வலியுறுத்தியும் ஆயிரக்கணக் கான ஆண்களும், பெண்களும் பங்குக் கொண்ட சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமுமுக நடத்தியது. இந்த போராட்டங்களின் பலனாக இன்று புதுவை மாநில பட்ஜெட் உரையில் 2.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளதை வர வேற்கிறோம் என்று டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

No comments :