Friday, January 21, 2011

இஸ்லாமியர்களை வாக்குகளை மனிதநேய மக்கள் கட்சி பெறுகிறது

லயோலா கல்லூரியின் காட்சி ஊடகத் துறை, அவ்வப் போது, பொது விவகாரங்கள் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம். இதே போல, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 2011ல் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறியதால், உளவுத் துறை கொடுத்த நெருக்கடியில், அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியிடப் படவேயில்லை.

இப்போது, மீண்டும் லயோலா கல்லூரி மீண்டும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில், இப்போது தேர்தல் நடந்தால், அதிமுக கூட்டணிக்கு 181 முதல் 185 இடங்கள் கிடைக்கும் என்றும், திமுகவுக்கு 51 முதல் 55 வரை கிடைக்கும் என்றும் முடிவுகள் வந்திருக்கின்றன.

சீமான் பெருவாரியான மக்கள் ஆதரவை பெற்றுள்ளதாகவும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தலித் மக்களைப் பொறுத்த வரை, தென் மாவட்டங்களில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்திற்கும், வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஆதரவு உள்ளதாகவும் முடிவுகள் கூறுகின்றன.

இசுலாமியர்களைப் பொறுத்த வரை, இருக்கும் முஸ்லீம் அமைப்புகளில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின், மனித நேய மக்கள் கட்சி, ஆதரவு பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த முடிவுகளை நாளை வெளியிடலாம் என்று லயோலா கல்லூரியின் காட்சி ஊடகவியல் துறை முடிவெடுத்திருந்தாலும், உளவுத்துறை மற்றும் காவல்துறையின் நெருக்கடி காரணமாக, நாளை வெளியிடக் கூடாது என்று கல்லூரி நிர்வாகத்திற்கு கடும் நெருக்கடியை அளித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நவம்பர் மாத கருத்துக் கணிப்பை முடக்கியது போலவே, இந்த முறையும் கருத்துக் கணிப்பு முடிவுகளை முடக்க ஜாபர் சேட்டும், கருணாநிதியும் கடும் முயற்சிகளை எடுத்து வந்தாலும், லயோலா கல்லூரி நிர்வாகம் இந்த முறை முடிவுகளை வெளியிடுவது என்ற தீர்மானத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

அப்படி அந்த முடிவுகள் வெளியிடப் படாவிட்டாலும், சவுக்கு தனது வாசகர்களுக்காக எப்படியாவது அந்த விபரங்களை எடுத்து வெளியிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது. மண்ணுக்குள் தலையை புதைத்து கொள்ளும் நெருப்புக் கோழிகளைப் போல, கருணாநிதியும், ஜாபர் சேட்டும், மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டுள்ளனர். ஆனால், மீண்டும் கருணாநிதி முதலமைச்சர் என்பதும், மீண்டும் ஜாபர் சேட் உளவுத் துறை தலைவர் என்பதும், முடவன் ஆசைப் படும் கொம்புத் தேனே, தவிர வேறு ஒன்றும் இல்லை.

நன்றி- சவுக்கு இணையதளம்,

No comments :