Wednesday, January 19, 2011

கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

பரமக்குடி, ஜன. 18: பரமக்குடி மேல முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியருக்கான கல்வி விழிப்புணர்வு கலந்தாய்வு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தலைவர் மு.சம்சுதீன் சேட் தலைமை வகித்தார். சலிமுல்லா கான், மாவட்ட செயலாளர்கள் சகுபர் சாதிக், ஜபருல்லா கான், துணைத் தலைவர் வி. முகம்மது அப்பாஸ், துணைச் செயலாளர் முகம்மது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் எஸ்.அகமது கபீர் வரவேற்றார்.

கல்வி பயில்வதில் பள்ளி மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், தேர்வுக்கு தயாராகும் முறை மற்றும் தேர்வு எழுதுவது குறித்தும் கல்வித் துறை முன்னாள் இணை இயக்குநர் நயினா முகம்மது, பட்டதாரி ஆசிரியர் எம்.புரோஸ்கான், தலைமையாசிரியை எஸ்.மெகர் பானு ஆகியோர் எடுத்துக் கூறினர்.

இதில் பரமக்குடி பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், ஹாஜா கனி ஆகியோர் எதிர்காலத்தில் சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் த.மு.மு.க., மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மனித நேய மக்கள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் இக்பால் நன்றி கூறினார்

No comments :