Monday, January 25, 2010

திருவாரூரில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை மாநாட்டில்






திருவாரூர்,​​ ஜன.​ 24:​ சிறுபான்மையினருக்கு தேசிய அளவில் கல்வி,​​ வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ​ ​ மனித நேய மக்கள் கட்சி சார்பில் திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ​ ​ மேலும்,​​ மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிடி கத்தரிக்காயை இந்திய மண்ணில் அனுமதிக்கக் கூடாது.​ மான்சாண்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளே ஆந்திர விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளின.​ தாய்நாட்டின் மண்ணைத் தரிசாக்கும் வெளிநாட்டு விதைகளுக்குத் தடைவிதிக்க வேண்டும். ​ ​ இறக்குமதி கோதுமைக்கு அதிக விலை கொடுக்கத் தயாராக உள்ள மத்திய அரசு,​​ உள்நாட்டில் உற்பத்தியாகும் உணவு தானியங்களுக்கு உரிய கொள்முதல் விலை வழங்க மறுப்பது கொடுமை.​ நெல்,​​ கரும்பு விவசாயிகள் நிர்ணயிக்கும் நியாயமான கொள்முதல் விலையை அரசு வழங்க வேண்டும். ​ ​ புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டுக்கு மேலாகியும் புதிய அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை.​ ஜாதி,​​ மத வெறியைத் தூண்டும் வகையில் பொதுஇடங்களில் பேசுபவர்களைக் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். ​ ​ திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம்,​​ அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கிய மத்திய,​​ மாநில அரசுகளுக்கு நன்றி.​ வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களில் திருவாரூர்,​​ தஞ்சாவூர்,​​ நாகை,​​ புதுக்கோட்டை,​​ கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பதால் திருவாரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.​ இதன் மூலம் காரைக்கால்,​​ நாகையில் செயல்படும் துறைமுகங்களின் முன்னேற்றம்,​​ வளர்ச்சி அதிகமாகும்.​ ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூரில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்க வேண்டும். ​ ​ அகல ரயில் பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட நாகூரிலிருந்து சென்னை,​​ எர்ணாகுளம்,​​ பெங்களூர் ஆகிய ஊர்களுக்குச் சென்ற ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.​ மேலும் நாகூரிலிருந்து மும்பை,​​ தில்லி,​​ கொல்கத்தா போன்ற நகரங்களுக்கும் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தித் தர வேண்டும். ​ ​ மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பறிக்கும் வகையில் மத்திய அறிமுகப்படுத்தவுள்ள புதிய மீன்பிடி மசோதாவை உடனடியாக நிறுத்த வேண்டும்.​ தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி,​​ படுகொலை செய்யும் இலங்கை கடல்படையை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.​ சர்ச்சைக்குரிய பகுதிகளில் இந்திய கடல்படை ரோந்து சென்று தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும். ​ ​ ஆதிக்கச் சக்திகளுக்கு அஞ்சாமல் தமிழகத்துக்கு பெரும் நன்மை பயக்கக் கூடிய சேதுக் கால்வாய் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். ​ ​ தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை ஆண்டுக்கு 200 நாளாகவும்,​​ கூலியை ரூ.150-கவும் உயர்த்தி வழங்க வேண்டும்.​ குடியிருக்க இடமில்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை,​​ ஆதிதிராவிட மக்களுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகளை அதிகாரிகளோ அபகரித்துக் கொள்வதைத் தடுத்து,​​ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனைகள் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ​ ​ மாநாட்டுக்கு திருவாரூர் மாவட்டச் செயலர் எம்.​ முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். ​ ​ மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எம்.எச்.​ ஜவாஹிருல்லா,​​ பொதுச் செயலர் பி.​ அப்துல் சமது,​​ பொருளாளர் எஸ்.எம்.​ ஹாருண் ரஷீது,​​ துணைப் பொதுச் செயலர் எம்.​ தமீமுன் அன்சாரி,​​ அமைப்புச் செயலர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆபிதீன்,​​ மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலர் புதுவை கோ.​ சுகுமாறன்,​​ தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ.​ திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பேசின


No comments :