Friday, January 8, 2010

கீழக்கரை மாணவர்களுக்கு தேசிய அளவிலான பரிசு

கீழக்கரை, ஜன. 7: நாசா அமைப்பு சார்பில் கட்டடக்கலை மாணவர்களுக்கு சென்னையில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் கீழக்கரை கல்லூரி மாணவர்கள் அர்பன் ரிடிசைன் என்ற போட்டியில் வெற்றிபெற்று தேசிய அளவிலான சிறப்புப் பரிசை பெற்றுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியா, நேபால், இலங்கை, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட கல்லூரி கட்டடக்கலை பிரிவு மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கருத்தரங்கைத் தொடர்ந்து பல பிரிவுகளில் கட்டடக் கலை தொடர்பான போட்டிகள் நடைபெற்றன.

இதில் அர்பன் ரிடிசைன் என்ற போட்டியில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி கட்டடக்கலை மாணவர்கள் கலந்து கொண்டு தேசிய அளவிலான சிறப்பு பரிசை பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் எ. செய்யது அப்தாகிர், கல்லூரி சேர்மன் எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர், செயலாளர் எஸ்.எம். கபீர் சாகிப், சிறப்பு இயக்குநர் எஸ்.எம். யூசுப்சாகிப் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

No comments :