Saturday, November 27, 2010

கீழக்கரையில் ஏடிஎம் மையங்கள் அடிக்கடி மூடல்: பொதுமக்கள் அவதி

கீழக்கரை,நவ. 24: கீழக்கரையில் அடிக்கடி ஏடிஎம் மையங்கள் மூடிக்கிடப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
கீழக்கரையில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி,
ஐசிஐசிஐ வங்கி, பாண்டியன் வங்கி, ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி என பல்வேறு வங்கியின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
அனைத்து வங்கிகளும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் மையங்களைச் சார்ந்தே செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டுகளை மட்டும் வழங்கி விட்டு ஏடிஎம் மையங்கள் அமைக்காமல் உள்ளன.
இதுசம்பந்தமாக பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் தங்கவேல் கூறியதாவது:
கீழக்கரையில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் ஏடிஎம் மையத்தில் இருக்கும் பேட்டரி 30 நிமிடங்கள் மட்டுமே வேலைசெய்வதாலும், எங்களது கிளையின் மூலமாக குறிப்பிட்ட தொகை மட்டுமே வைப்பதற்கு அனுமதி இருப்பதாலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.
இது விரைவில் சரி செய்யப்படும் என்று அவர் கூறினார்.ஐசிஐசிஐ வங்கி கிளஸ்டர் மேலாளர் ரங்கராஜ் கூறியதாவது: மின்சாரம் தடைபட்டவுடன் 30 நிமிடங்கள் மட்டுமே ஏடிஎம் இயந்திரம் வேலைசெய்கிறது என்று எங்களது கிளையின் சார்பாக தலைமைஅலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்து விட்டோம். இரண்டு நாள்களில் சரியாகிவிடும் என்று கூறினார்.

No comments :