Thursday, November 25, 2010

டிசம்பர் 6 அன்று மாவட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் - தமுமுக அறிவிப்பு

தமிழ்நாடு முஸலிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:தமிழ்நாடு முஸலிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று எனது தலைமையில் சென்னையில் நடைபெற்றது. தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது: ”இந்திய ஒருமைப்பாட்டின் சின்னமாகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிகு பாப்ரி பள்ளிவாசல் 1992 டிசம்பர் 6 அன்று மதவெறி கும்பலால் இடித்து நொறுக்கப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைகிறது.பாப்ரி பள்ளிவாசல் நிலம் தொடர்பாக சமீபத்தில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நியாயவான்களால் விமர்சிக்கப்பட்டு தற்போது அது உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கிறது.அதேநேரம் பாப்ரி பள்ளிவாசலை இடித்தது தொடர்பான வழக்கு ராய்பரேலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுகுறித்து அமைக்கப்பட்ட -பர்ஹான் ஆணையம், அத்வானி, வாஜ்பேயி உள்ளிட்ட 68 பேரை குற்றவாளிகள் என அறிவித்தது.இந்நிலையில் 1995 முதல் கடந்த 16 ஆண்டுகளாக தமுமுக தமிழகத்தில் ஜனநாயக வழியில் ஒவ்வொரு டிசம்பர் 6 அன்றும் அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகிறது.அதேபோல் இவ்வருடம் உச்சநீதிமன்றம், 1) பாப்ரி பள்ளிவாசலை இடித்த லிபர்ஹான் ஆணையம் சுட்டிக்காட்டிய குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 2) அத்வானி உள்ளிட்ட பாப்ரி பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகள் மீதான வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், 3) பாப்ரி பள்ளிவாசல் இடம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் விரைந்து தீர்ப்பை வழங்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வ-யுறுத்தி மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்கள் (தர்ணா) நடைபெறவிருக்கிறது.இந்த தர்ணா போராட்டத்தில் முஸலிம்கள் மட்டுமின்றி, மதச்சார்பற்ற சிந்தனையாளர்களும் பங்குகொண்டு கண்டன உரைகள் வழங்குவார்கள்.

No comments :