Tuesday, October 26, 2010

அல்கோபர் தமுமுக நடத்திய இரத்த தான முகாம்




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் முதல் மக்கள் பணியான கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் அவசர கால உதவிகளில் அதிக கவனம் செலுத்தி வருவது தாங்கள் அறிந்ததே, குறிப்பாக உயிர் காக்கும் உதவிகளான இரத்ததானம், மற்றும் ஆம்புலன்ஸ் சர்வீசில் தமுமுகவிற்கு நிகர் தமுமுக தான் என்றால் அது மிகையாகாது.
அதன் தொடர்ச்சியாக எதிர்வரும் ஹஜ் மாத்தில் ஹாஜிகளுக்கு அவரசகால உதவிக்காக சவூதி அரேபியா கிழக்கு மண்டலத்தில் அல்-கோபர் தமுமுக முதன் முறையாக கிங் ஃபகத் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை 3 வாரங்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை (22-10-2010) அன்று முதல் கட்ட இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் சுமார் 100க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். அதில் 60 பேர் இரத்ததானம் செய்தனர்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் தாயகத்தில் தமுமுகவின் தன்னலமற்ற இரத்தான சேவைகளைக் கண்ட மாற்று மத சகோதரர்கள் தாங்களாகவே முன்வந்து இரத்ததானம் செய்தது அனைவரையும் அகமகிழச்செய்தது.
மேலும் அல்-கோபர் தமுமுக சார்பாக எதிர் வரும் வெள்ளிக்கிழமை (29-10-2010) இரண்டாம் கட்ட இரத்தான முகாமை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்முகாம் அல்-கோபர் தமுமுக கிளைத் தலைவர் சகோ.ஹாஜா நஜ்முதீன் தலைமையிலும் துணைத் தலைவர் சகோ.இஸ்மாயில், செயலாளர் சகோ. ஹாஜா பஷிர், பொருளாளர். சகோ. ஷஃபியுல்லா ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் மண்டலச் செயலாளர் சகோ. இஸ்மாயில், மண்டலப் பொருளாளர் சகோ.நஸ்ருத்தீன் ஸாலிஹ், துணைத்தலைவர் சகோ. ஜக்கரியா, துணைச் செயலாளர் சகோ.அஸ்ரப், துணைச் செயலாளர் சகோ.சீனி முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரத்ததானம் செய்வீர்!! உயிர் காப்பீர்!!!சீனி முஹம்மது


No comments :