Saturday, October 30, 2010

ஓரணியில் சமுதாயப் பிரமுகர்கள்!




முஸ்லிம் சமுதாய அமைப்புகள் ஓரணியில் திரளுமா? என்ற கேள்வியை அடிக்கடி பலரும் கேட்பதுண்டு. கொள்கை அடிப்படையில் இல் லாமல், குறைந்தபட்ச செயல் திட்டங்களின் அடிப்படையிலாவது உட்கார்ந்து பேசலாமே என்பது தான் பலரின் கடைசி வேண்டுகோளாக இருந்தது. அது இப்போது சாத்தியப்பட்டிருக்கிறது.
வன்முறைக் கும்பலால் திருவிடச்சேரி பள்ளிவாசலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டையும், ஜமாத் நிர்வாகிகளின் படுகொலையை கண்டித்தும், அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து விவாதிக்கும் விதமாகவும் வலுவான முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி அனைத்து தலைமைகளும் கடந்த 19.10.2010 அன்று சென்னையில் அசோகா ஓட்டலில் ஒன்று கூடினர்.ஏற்கனவே தமிழக அரசு கொண்டு வந்த திருமண பதிவுச் சட்டத்திற்கு எதிராக அனைவரும் அமர்ந்து ஆலோசித்தனர். மேலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு சந்திப்புகளை விட இப் போது நடைபெற்ற சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. திருவிடச்சேரி சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் வன் முறைக் கும்பலுக்கு எதிராக அமைப்புகள் சார்பில் தமிழகமெங்கும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத் துள்ள நிலையில், உடனடியாக கொலைகாரன் ஹாஜி முகம்மது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான். இதற்குப் பின்னணியில் இருக்கும் சதிகாரர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்த நிலையில், 19 முஸ்லிம் அமைப்புகள் ஓரணியில் திரண்டிருப்பது ஆட்சியாளர்களை மிரள வைத்திருக்கிறது.
தொடர்ந்து இது குறித்து அதிகாரிகளை சந்திப்பதற்கு பேரா.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் ஒரு குழுவும் தமிழக முதல்வரை சந்திப்பதற்கு காங்கிரஸ் பிரமுகரும், இஸ்லாமிய இலக்கிய கழகத் தலைவருமான ஹிதாயத் துல்லாஹ் தலைமையில் ஒரு குழுவும், அமைக்கப்பட்டது.19.10.2010 அன்று நடந்த கூட்டத்தில் பாபர் மஸ்ஜித் தீர்ப்புக் குறித்து லக்னோவில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் விளக்கினார்.இக்கூட்டத்திற்கு ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் அப்துல்ரஹ்மான் ஹஜ்ரத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஜமாத்துல் உலமா, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, ஜமாத்&இ&இஸ்லாமி, இந்திய தவ்ஹீத் ஜமாத், இந்திய தேசிய லீக், தேசியலீக் கட்சி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்), இஸ்லாமிய இலக்கியக் கழகம், மில்லி கவுன்ஸில், மஜ்லிஸே முஷாவரத், ஜம்மியத்துல் உலமா&இ&ஹிந்த், தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன், முஸ்லிம் தனியார் சட்டவாரியம், ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி), ஷரியத் பாதுகாப்பு பேரவை, இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம், தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம், சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் இதில் பங்கேற்றன.

No comments :