Saturday, October 30, 2010

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கீழக்கரை, அக். 29: கீழக்கரை அருகே வியாழக்கிழமை இரவு சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புக்கப்பட்டது.
கீழக்கரையில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கீழக்கரையிலிருந்து, ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மின்வாரியம் (பவர் ஹவுஸ்) அருகில் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து, சாலையின் குறுக்கே விழந்தது.
இதனால் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை, ஏர்வாடி, திருநெல்வேலி, தூத்துக்கடி, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் வாகனங்கள் செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்பட்டது.
கீழக்கரை காவல்துறையினரின் முயற்சியால் மரத்தின் ஒரு பகுதி வெட்டப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.
30-ம் தேதி தேவர் குருபூஜை விழாவும், 31-ம் தேதி ஏர்வாடி சந்தனக்கூடு விழாவும் நடைபெற உள்ளதால் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது.ஆகவே நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தை அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments :