Thursday, May 20, 2010

பிரான்ஸில் பெண்ணின் பர்தா கிழிப்பு

பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்களின் பர்தாவை தடை செய்வதற்கான ஏற்பாடுகளில் அந்நாடு மும்முரமாகியிருக்கும் சூழலில்
கடைத்தெருவில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் பர்தாவை இன்னொரு பெண் கிழித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரான்ஸின் மேற்கு மாகாணத்தில் உள்ள நான்டஸ் என்ற நகரில் 26 வயதான ஒரு முஸ்லிம் பெண் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 60 வயதான ஒரு பெண்மணி ( இவர் ஒரு வழக்குரைஞர்) முஸ்லிம் பெண்ணை கேவலமாக பேசியதோடு அவருடைய பர்தாவையும் கிழித்தார். இதனால் இரண்டு பெண்மணிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. முஸ்லிம் பெண்ணுடைய கணவர் அவர்களை விலக்கி விட்டார்.
காவல்துறை அதிகாரியிடம் ஒரு பெண் பர்தா அணிந்து எனக்கருகில் வருவது எனக்கு பிடிக்கவில்லை என்றும் உடனடியாக பிரான்ஸ் பர்தாவை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்குரைஞர் பெண்மணி கூறியுள்ளார். இன,மத பாகுபாட்டால் தாக்குதல் நடந்ததாக முஸ்லிம் பெண் அந்த வழக்குரைஞர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஐரோப்பாவில் பெல்ஜியம் நாட்டில் பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரான்ஸ் நாடும் பர்தாவை தடைசெய்வதற்கான நடவடி்ககைகளில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் பர்தா கிழிக்கப்பட்ட சம்பவம் பிரான்ஸ் மக்களிடையே எந்தளவு கசப்புணர்வு தோன்றியுள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக உள்ளது.

No comments :