Saturday, September 27, 2014

ஜெயலலிதா மற்றும் 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு:

ஜெயலலிதா மற்றும் 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு:
ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு பாடம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ Moulavi JS Rifayee வெளியிடும் அறிக்கை:

1991-1996ஆம் ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு கடந்த 18 ஆண்டு காலமாக நீடித்து வந்தது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நீண்ட காலம் நடந்த வழக்கு என்ற சாதனையைப் பெற்றுள்ளது. 

சமீபகாலமாக பல்வேறு பதவி ஆசை வார்த்தைகளுக்கு நீதிபதிகளும் பலி ஆகிறார்களோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் உச்சக்கட்ட அதிகாரம் நீதிமன்றத்திற்கு இருக்கிறது; நீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இது அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்களுக்கும்; அதிகாரத்தில் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஒரு பாடமாக அமையும். 

இந்த தீர்ப்பினால் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று ஒரு தரப்பும், தோற்று விட்டோம் என்று இன்னொரு தரப்பும் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால் இதற்கு அடுத்தடுத்த நீதிமன்றங்களும் இந்தத் தீர்ப்பை அலசக்கூடிய வாய்ப்புள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்தவகையில் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாடமாக அமைந்துவிட்ட தீர்ப்பு என்று மனிதநேய மக்கள் கட்சி இந்தத் தீர்ப்பைப் பார்க்கிறது.

இவண்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர்

No comments :