Tuesday, March 1, 2011

பஸ்டே கொண்டாட்டத்தை தடை செய்க! தமுமுக மாணவரணி கோரிக்கை!

தமுமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் வெளியிட்டுள்ள அறிக்கை.

"பஸ் டே" என்ற பெயரில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை வாடகை எடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ்ஸின் உள்ளேயும், கூரை மேலும் ஏறி நின்று ஆட்டம் போடுவதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதும், பாதுகாப்புக்கு வந்த போலீசார் மீது கல்வெறிவதும் வன்மையாக கண்டிக்கதக்க ஒன்று.

உயர்நீதிமன்றம் ‘பஸ்டே’ கொண்டாடட்பவருக்கு தடை போட்டிருந்தும் காவல்துறை மாணவர்களின் அராஜகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் மாணவர்களின் கல்லெறிக்கு உள்ளாவதும் காவல்துறையின் கண்ணியத்தை காப்பாற்ற கூடியதல்ல.

மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம், நடத்தப்படுகையில் அவர்களை ஒடுக்கும் தமிழக அரசும், காவல்துறையும் ‘பஸ் டே’ விஷயத்தில் மென்மையாக நடந்துக் கொள்வது மாணவர்களிடையே போக்கிரித்தனத்தையே உருவாக்கும்.

எனவே தமிழக அரசு "பஸ் டே" கொண்டாட்டங்களை நிரந்தரமாக தடை செய்வதோடு இது போன்ற போக்கிரி செயலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக மாணவரணி கேட்டுக் கொள்கிறது.

No comments :