Tuesday, September 14, 2010

வேலூர் மத்திய சிறையில் கைதிகளுடன் பெருநாள் கொண்டாடிய தமுமுகவினர்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுடன் ஈகைப் பெருநாளைக் கொண்டாடினர்.ஆண்டுதோறும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெருநாட்களின் போது வேலூரில் உள்ள மத்திய சிறையில் இருக்கும் கைதிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வரிசையில் ஈகைப் பெருநாளான நேற்று (செப்டம்பர் 10) வேலூர் மாவட்ட தமுமுக சார்பில் மத்திய சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் பெருநாள் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வேலூர் மாவட்ட தமுமுக செயலாளர் ஏஜாஸ் அஹ்மது, மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் மவ்லவி ஷம்சுதீன் நாஸர் உமரி தலைமையில் சுமார் 50 தமுமுக நிர்வாகிகள் ஈகைத் திருநாள் அன்று வேலூர் மத்திய சிறைக்குச் சென்றனர். அங்குள்ள 50 முஸ்லிம் கைதிகளுடன் சிறையில் உள்ள பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் பங்குக் கொண்டனர். மவ்லவி ஷம்சுதீன் நாஸர் உமரி பெருநாள் பேரூரை நிகழ்த்தினார்.சிறையில் உள்ள 60 முஸ்லிம் ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கும் 15 குழந்தைகளுக்கும் தமுமுக சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன.பிறகு வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் சேகர் முன்னிலையில் சிறையில் உள்ள 1400 ஆண் கைதிகளுக்கும் 300 பெண் கைதிகளுக்கும் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டதுரமலான் மாதம் முழுவதும் வேலூர் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கும் சஹர் மற்றும் இப்தாருக்கான சமையல் பொருட்களை தமுமுக சார்பாக வழங்கப்பட்டு வந்தது.இல்லத்தாருடன் கழிக்க வேண்டிய நேரத்தில் சிறைவாசிகளுடன் கொண்டாடிய தமுமுகவினரை சிறை அலுவலர்கள் பாராட்டினர். இந்த நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறைத் துறை தலைவர் திரிபாதி மற்றும் கண்காணிப்பாளர் சேகர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு தமுமுக வேலூர் மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் ஏஜாஸ் அஹ்மது தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்
வேலூர் மத்திய சிறை உட்பட சென்னை, மதுரை, கோவை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் சேலம் மத்திய சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்குரமலானில் சஹர் மற்றும் இப்தார் உணவுக்கான பொருட்கள் துணிமணிகள் தமுமுக சார்பாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும்.

No comments :