Thursday, September 2, 2010

சவுதி அரேபியா அல்ஹஸா-வில் தமுமுக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக, சவுதி அரேபியா அல்ஹஸா மாநகர கிளையின் சார்பாக , நோன்பு துறக்கும் (இஃப்தார்) நிகழ்ச்சி, ஷோபா , ஹொலைலா ஆகிய இடங்களை தொடர்ந்து, செனையா பகுதியிலும். தமுமுக அல்ஹஸா மாநகர தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் நடைப்பெற்றது.
“ரமலானின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றிய சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமுமுக துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி தனது உரையில், “ வெளிநாடுகளில் பணியாற்றி விட்டு விடுமுறையில் தாயகம் செல்லவிருக்கும் ஒவ்வொருவரும், சில மாதங்களுக்கு முன்பாகவே அதற்கான திட்டமிடலிலும், ஏற்பாடுகளிலும் எப்படி உற்சாகத்துடன் ஈடுபடுகிறார்களோ அதுப்போன்ற குர்ஆன் அருளப்பட்ட இந்த கண்ணியத்திற்குரிய மாதத்தினை வரவேற்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.
ஒவ்வொரு இறைத்தூதர்களுக்கும் வழங்கப்பட்ட அற்புதங்கள் எல்லாம் அவர்களுக்கு பிறகு நீடித்திருக்கவில்லை, ஆனால் நபிகள் நாயகம் முஹம்மது ரசூல் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதமான இந்த குர்ஆன் மட்டும் தான் இறைவனால் பாதுகாக்கப்படுகிறது. மனித வாழ்வின் தத்துவங்களை கூறும் இந்த குர்ஆனின் கருத்துக்களை ஒவ்வொருவரும் அவர் தம் வாழ்விலும் கொண்டு வர வேண்டும்.
இந்த ரமலான் மாதத்தில் எப்படி கட்டுப்பாடுடனும், இறையச்சமிக்கவர்களாகவும் இருக்கிறோமோ, அதுப்போன்றே ரமலான் அல்லாத காலங்களிலும் அவற்றினை தன் வாழ்வியல் நெறியாக கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவு செய்தார்.
நோன்பு துறப்பதற்கான உணவு ஏற்பாடுகளை அஹமது சுகர்னோ தலைமையில் அப்துல் ரஹ்மான், அமானுல்லாஹ், தொண்டரணி முஹம்மது ரஃபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்: ஹம்துன் அப்பாஸ்

No comments :