Monday, July 20, 2009

நாடாளுமன்றத்தில் ரெங்கநாதன் மிஸ்ரா, லிபரான் கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் த.மு.மு.க. மாநில தலைவர் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் ரெங்கநாதன் மிஸ்ரா, லிபரான் கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என த.மு.மு.க. மாநில தலைவர் வலியுறுத்தி பேசினார்.

லிபரான் கமிஷன்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் 67-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மனிதநேய விழா நேற்று சிவகாசியில் நடந்தது. இதையொட்டி முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை சார்பில் சிறுபான்மை மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை செய்து வருகிறது. சிறுபான்மை மக்களுக்காக ரெங்கநாதன் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த கமிஷனில் சிறுபான்மை மக்களுக்காக 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், அதில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி போராட்டம் நடத்தும்.

இடைத்தேர்தல்

மேலும் நீண்டகால விசாரணைக்கு பின்பு பாபர்மசூதி இடிப்பு பற்றிய நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கை பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதை இந்த நாடாளுமன்ற கூட்ட தொடரிலேயே தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடை தேர்தல் நடைபெற உள்ளதால் அது பற்றி முடிவு எடுக்க மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 1-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இதில் இடைத்தேர்தல் குறித்த கட்சியின் நிலைபாடு குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போத தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட தலைவர் அஜ்மீர் கான், மாநில பொதுச் செயலாளர் அப்துல்சமது, மாவட்ட பொருளாளர் முஸ்தபா, சிவகாசி நகர தலைவர் மாபுபாட்ஷா ஆகியோர் உடனிருந்தனர்.

No comments :