Saturday, July 11, 2009

தமுமுகவின் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம்

தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்

மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்களை உயர்வடையச் செய்வதற்காக தாங்கள் முஸ்லிம்களுக்கு என 3,5% சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கி கடந்த செப்டம்பர் 15/2007 -ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தீர்கள். அந்த ஆணையில் அந்தந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களுக்குரிய பிரிவில்தான் சேர வேண்டும் என்று தெளிவாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வுகளில் OC(Merit Muslim)) பிரிவில் சேரக்கூடிய மாணவர்கள் அவர்களுக்குரிய கல்லூரிகள் கிடைக்கவில்லை என்பதால் முஸ்லிம்களுக்கு என வழங்கப்பட்ட BC (M) பிரிவில் ஒதுக்கப்படுவதாக அறியப்படுகிறது. இதனால், முஸ்லிம் மாணவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மருத்துவ படிப்பிற்கான தனி இட ஒதுக்கீடு இவர்களுக்கு மறுக்கப்பட்டு மருத்துவ படிப்பிற்கு செல்ல தடை ஏற்பட்டு சமூக நீதி மறுக்கப்படுகிறது.

ஆகவே முதல்வர் அவர்கள் சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்களுக்காக வழங்கப்பட்ட 3.5% சதவீத தனி இட ஒதுக்கீட்டில் வேறு பிரிவில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பிரிவில் சேரவும், BC (M) பிரிவில் உள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தர தாங்கள் ஆவணம் செய்யுமாறும் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கின்ற அச்ச உணர்வை போக்கி சிறுபான்மை மக்களின் நலனை காத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

No comments :