Friday, July 17, 2009

ரியாத் மாநகரில் நியு செனையா பகுதியில் ஒரு நாள் தர்பியா முகாம்!



கடந்த 10-07-2009 தேதி வெளளிக் கிழமையன்று ரியாத் மாநகரின் தொழிற் சாலை பகுதியான நியு செனையாவில் அல்சரக் கம்பெனி வில்லாவின் பள்ளி வாசலில் த.மு.மு.க - தாஃவா நியு செனையா கிளையின் சார்பாக ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் தர்பியா முகாம் இனிதே நடைபெற்றது.

மௌலவி ஹுசைன் சிராஜ் அவர்கள் கிராத் ஓத மௌலவி அலி உஸ்மான் அவர்கள் நாம் ஒவ்வொரு வரும் செய்ய வேண்டிய அழைப்புப் பணி (தாஃவா) குறித்தும், இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் உரையாற்றினார். இத்துடன் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.


மதிய உணவிற்கு பிறகு மௌலவி ஹியாத்துல்லாஹ் மற்றும் மௌலவி யுசுப் அவர்கள் தொழுகையின் அவசியம் மற்றும் சிறப்புகள் குறித்து எடுத்துரைத் தாரகள். த.மு.மு.க மத்திய மண்டலத்தின் தாஃவா பொறுப்பாளர் சகோ. ஜரஜிஸ் அவரகள் நாம் மனணம் செய்து தினமும் ஓத வேண்டிய துஆக்களையும் இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகளையும் விளக்கிக் கூறினார். அஸர தொழுகைக்குப் பிறகு ஈமானியச் சிந்தனை பற்றி பல விளக்கங்களுடன் மௌலவி செய்யது ஜமாலி சிறப்புரையாற்றினார். இடையி டையே கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் சொல்பவர்களுக்கு மார்க்க புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.


இறுதியாக சகோ. மீரான் நன்றியுரை யாற்ற மாலை தேநீருடன் இம்முகாம் இனிதே முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியை நியூசெனையா கிழக்கு பகுதி மற்றும் அல்சரக் பிளாஸ்டிக் வில்லா கிளையின் த.மு.மு.கவினர்களும் இணைந்து சிறப்பாக அனைத்து ஏற்பாட்டையும் செய்திருந்தார்கள். தர்பியா நிகழ்ச்சிக்கு நியூ செனையா பகுதியிலிருந்து 50 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

No comments :