Saturday, July 25, 2009

கம்யூனிஸ்டு கட்சி வற்புறுத்தல்: இளையான்குடி தொகுதியில் மனித நேய கட்சி போட்டியா?

இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்டு 18-ந்தேதி நடக்கிறது.

இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அ.தி.மு.க. அறிவித்து விட்டது. பா.ம.க.,ம.தி.மு.க., புதியதமிழகம் கட்சியும் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது.

மார்க்கிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சி தொண்டாமுத்தூர், கம்பம் தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பர்கூர், ஸ்ரீ வைகுண்டம் தொகுதியிலும் போட்டி யிடுவதாக அறிவித்துள்ளன.

இளையான்குடி தொகுதியை நட்பு கட்சிக்கு விட்டு கொடுப்பதாக வரதராஜனும், தா.பாண்டியனும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இளையான்குடி தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

இது குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.எச்.ஜவாஹிருல்லா விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இளையான்குடி தொகுதியில் மனித நேய கட்சி போட்டியிட வேண்டும் என்று இரு கம்யூனிஸ்டு கட்சியினரும் எங்களை அணுகி உள்ளனர்.

எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை உயர் நிலை குழுவில் விவாதித்து முடிவு செய்து அறிவிப்பதாக கூறி உள்ளோம்.

சென்னையில் விரைவில் எங்கள் கட்சியின் உயர் நிலை குழு கூடும். அதன் பிறகு முடிவை அறிவிப்போம்.

இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

No comments :