Wednesday, July 23, 2014

ரமலான் நோன்பு வைத்து இருந்த மனிதரை கட்டாயபடுத்தி உணவு அருந்த வைப்பதா ? வரம்பு மீறிய சிவசேனா எம்பிக்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவேண்டும். . . த மு மு க கடும் கண்டனம்

ரமலான் நோன்பு வைத்து இருந்த மனிதரை கட்டாயபடுத்தி உணவு அருந்த வைப்பதா ? வரம்பு மீறிய சிவசேனா எம்பிக்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவேண்டும். 
. . த மு மு க கடும் கண்டனம் 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தலைவர் ஜே எஸ் ரிபாயி வெளியிடும் பத்திரிகை அறிக்கை 

டெல்லியில் உள்ள மகராஷ்டிரா மாநில இல்லத்தில் உணவு வழங்கல் மேற்பார்வையாளராக பணியாற்றும் அர்ஷத் என்ற சிறுபான்மை சகோதரர் மீது சிவசேனா எம்பிக்கள் வெறித்தனமாக, நாகரிக வரம்பு மீறி நடந்து கொண்டதாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்திகளும், பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது . இந்த செயல் எந்த வகையிலும் ஏற்றுகொள்ள முடியாத காட்டுமிராண்டி தனமானதாகும் இது வன்மையாக கண்டிக்க தக்கது, 
அதனை தொடர்ந்து நாடாளுமன்ற அவைகளில் இது விவாதமாக மாறி இருக்கிறது.
ரமலான் நோன்பு வைத்து இருக்கும் உணவு வழங்கல் மேற்பார்வையாளர் அர்ஷத் க்கு சிவசேனா எம்பிக்கள் கட்டாயப்படுத்தி சப்பாத்தி சாப்பிட வைத்துள்ளதாக வெளியான தகவல் நாடுமுழுவதும் வாழும் அமைதி விரும்பும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

அனைத்து குடிமக்களுக்கும் முன்மாதிரியாக திகழவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்விதம் வரம்பு மீறி நடந்து கொள்வது நாகாரீக உலகில் இந்திய திருநாட்டின் பெருமையை குலைத்து விடக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. சம்பந்த பட்ட எம்பி வரம்பு மீறிய செயல் வீடியோ ஆதாரங்களாக வெளி வந்து இருக்கும் நிலையில் மத்திய அரசும் , நாடாளுமன்ற சபாநாயகரும் இது விஷயத்தில் உடனடியாக தலையிட்டு குற்றம் இழைத்த சிவசேனா எம்பிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

ஜே எஸ் ரிபாயி 

தலைவர் தமுமுக

No comments :