Saturday, July 6, 2013

நாளை தடையை மீறி பேரணி நடைபெறும்: தமுமுக அறிவிப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
ஜனநாயக முறையில், சட்டத்தின் வழியில் தமுமுக நாளைய தினம் நடத்தவிருந்த பேரணிக்கு காவல்துறை தடை விதித்திருக்கிறது.  சிறுபான்மையின மக்களின் ஜனநாயக உரிமைகளை குழி தோண்டிப் புதைப்பதை சகித்துக்கொள்ள முடியாது. சிறுபான்மையின முஸ்லிம் மக்களுக்கான இடஒக்கீட்டை உயர்த்த வேண்டும், சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், திருமணப் பதிவு சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்க பேரணி என்பது ஒரு வழிமுறையாகும். இதை தடுக்க முனைந்தது அரசியல் பழிவாங்கல் ஆகும்.
எனவே திட்டமிட்டபடி நாளை மதியம் 3 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தின ஸ்டேடியத்திலிருந்து பேரணி புறப்படும். காவல்துறையின் இடையூறுகள், அவர்கள் வாகன உரிமையாளர்களுக்கு தரும் நெடுக்கடி ஆகியவற்றையும் மீறி அலை, அலையாய் புறப்பட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உரிமைகளை வெல்ல, கருத்துவேறுபாடுகளையும், கட்சி வேறுபாடுகளையும் மறந்து சமுதாயத்தின் அனைத்துத் தரப்பும் ஒர் அணியில் திரண்டுவருமாறு உரிமையோடு அழைக்கிறோம். திடீர் என 24 மணி நேரத்திற்கு முன்பு அரசுதரப்பு கொடுத்துள்ள நெருக்கடியை முறியடித்து புதிய சரித்திரத்தை படைப்போம். நாளைய பேரணி அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்,
(ஜே.எஸ்.ரிபாயீ )

No comments :