Tuesday, June 11, 2013

கீழ‌க்க‌ரை தமுமுக நகர் தலைவர் சிராஜுதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது




இது  குறித்து தமுமுக நகர் தலைவர் சிராஜுதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது

தற்போது பள்ளிகள் தொடங்கி விட்டதால் பள்ளி மாணவ மாணவியர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் செயல்பட  தொடங்கி விட்டது.

கீழ‌க்க‌ரையில் அதிக‌ அளவில் ஆம்னி வாக‌ன‌ங்கள் மற்றும் ஆட்டோக்கள் ப‌ள்ளி குழ‌ந்தைகளை மாத வாடகை அடிப்படையில் அழைத்து செல்கின்ற‌ன‌ர்.இவ‌ற்றில் ப‌ல வாடகைக்கு இயக்க முறையான‌ அனுமதி பெறவில்லை மேலும் சில‌ருக்கு இதில் ஓட்டுந‌ர் லைசென்ஸ் இல்லை.சிலர் கூடுதல் வாடகைக்க்காக அதிக அளவில் ப‌ள்ளி குழ‌ந்தைக‌ளை புளி மூட்டை போல் அடைத்து ஏற்றி செல்கின்ற‌னர்.புத்தக பைகளை அதிக அளவில் மேற்கூரையில் ஏற்றுவதால் வளைவுகளில் கவிழும் ஆபத்து உள்ளது .

மேலும் தெருக்க‌ளிலும்,வ‌ளைவுக‌ளிலும் அசுர‌ வேக‌த்தில் செல‌வதால் அடிக்க‌டி சிறு சிறு விப‌த்துக‌ளும் ஏற்ப‌டுகின்ற‌ன‌.அரசு அதிகாரிகள் போக்குவரத்து வாகனங்களை முறைப்படுத்த வேண்டும்.   ஓட்டுநர்களூம் பொறுப்புணர்ந்து பாதுகாப்பான முறையில் அழைத்து செல்லும் வேண்டும்.பெற்றோர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


news by 
kilakaraitimes.blogspot.com

No comments :