Monday, October 19, 2009

தமிழ்நாடு முஸ்லி­ம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் என்ஜினீயர் அப்துஸ் ஸமது காலமானார்.




தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் சென்ற சனிக்கிழமை (அக்டோபர் 17) அன்று பிற்பகல் சென்னையில் காலமானார்கள். அவருக்கு வயது 78 ஆகும்.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பிறந்த ஹெச். அப்துஸ் ஸமது அவர்கள் ஒரு பொறியாளர் ஆவார். பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர் பொறியியல் கல்லுரிகளில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் அமைப்பின் முதல் பொதுச் செயலாளராக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் துடிப்புடன் செயலாற்றினார். பின்னர் உடல்நலக் குறைவின் காரணமாக அப்பதவியில் இருந்து விலகினார். சமுதாய மற்றும் மார்க்கப்பணியில் அதிக நாட்டம் உடையவராக விளங்கிய இஞ்சினியர் அப்துஸ் ஸமது அவர்கள் தமது கடைசி மூச்சு வரை அப்பணிகளை ஆற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பல மார்க்க நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளார். இந்தியன் இஸ்லாமிக் மிஷனின் அறங்காவலர்களில் ஒருவராகவும் அவர் விளங்கினார்.

அவரது மரணச் செய்தி அறிந்த உடன் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பொதுச்செயலாளர் எஸ். ஹைதர் அ­லி, பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச்செயலாளர ஜே.எஸ். ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் பி.எஸ். ஹமீது மற்றும் ஜிப்ரி காசிம் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப. அப்துஸ் ஸமது சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மறுநாள் அக்டோபர் 18 அன்று காலை சென்னை அமைந்தக்கரை பள்ளிவாச­ல் ஜனாசா தொழுகை நடைபெற்று பிறகு அங்குள்ள அடக்கத்தலத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது ஜனாசா தொழுகையில் தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட ஏராளமான மக்கள் பங்குக் கொண்டார்கள்.

இறைவன் அன்னாருக்கு மறுமையின் நற்பேறுகளை அளப்பரிய அளவில் வழங்க பிராரத்தனைச் செய்வோமாக.

No comments :