Thursday, October 15, 2009

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் போட்டியிட்ட மூன்றில் இரண்டு இடங்களில் ம.ம.க. வேட்பாளர்கள் வெற்றி!




வெற்றி பெற்றதற்கான சான்றிதழைபெறுகிறார் தென்காசி முகம்மது அலி

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 7 அன்று நடைபெற்றது. சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் மிக குறைவான இடங்களில் மட்டுமே இடைத் தேர்தல் நடைபெறக் கூடிய நிலை இருந்ததால் அப்பகுதிகளில் மட்டுமே போட்டியிட ம.ம.க. முடிவு செய்தது.

நெல்லை மாவட்டம் தென்காசி நகராட்சிக்குட்பட்ட 16லிவது வார்டிலும், கடலூர் மாவட்டம் லால்பேட்டை பேரூராட் சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டிலும், விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டிலும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தென்காசியில் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ஆகிய வற்றின் பின்புலத்தோடு முஸ்லிம் லீக் களத்தில் இறங்கியது. திமுக மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் பெரும் படையினர் சுழன்றனர், கடைசியில் வாக்களர்களுக்கு பணப் பட்டுவாடாவும் நடைபெற்றது.

ம.மக. சார்பில் களப்பணி மட்டுமே நடைபெற்றது. தமுமுக மாநில பொருளாளர் ஓ.யூ.ராஹ்மத்துல்லாஹ் அவர்கள் முகாமிட்டு களப்பணிகளை ஒருங்கிணைத்தார். கட்டுக்கட்டான பண வினியோகத்தையும் மீறி ம.ம.க. வேட்பாளர் பி.முஹம்மது அலி 214 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அ.தி.மு.க. வேட்பாளரை தோற் கடித்தார். யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை களின் பின்னணியில் தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.


கடலூர் மாவட்டம் லால்பேட்டை பேரூராட்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் யாசர் அராபத் 102 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேசிய லீக் கட்சி வேட் பாளரை தோற்கடித்தார். இங்கு மனித நேய மக்கள் கட்சியினரின் உழைப் புக்கு ஈடு கொடுக்க முடியாத கோழைகள், ம.ம.க. சகோதரர்கள் முஹம்மது அலி, முஹம்மது காசீம், முஹம்மது சித்தீக் ஆகியோரை தேர்தல் நடைபெற்ற அக்டோபர் 7 அன்று கத்தியால் குத்தி படுகாயப்படுத்தினர். அந்த அரசியல் வன்முறைகளையும் மீறி லால்பேட்டை சமுதாய மக்கள் மனிதநேய மக்கள் கட்சிக்கு வாய்ப்பு வழங்கி வெற்றிபெற செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி யில் மனிதநேய மக்கள் கட்சியினரின் கடும் உழைப்பை பார்த்து திமுக, அதிமுக, கூட்டணிகள் திணறின. திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவர்கள் கூட ம.ம.க. தலைமையிடம் தொடர்பு கொண்டு போட்டியிலிருந்து வாபஸ் பெற நட்பு அடிப்படையில் பேசினார்.

கடைசி வரை, ம.ம.க.வினர் அசராமல் பணியாற்றினார்கள். தேர்தல் நாளன்று சற்றும் எதிர்பாராத வகையில் திமுக வேட்பாளரோடு இணைந்து அ.தி.மு.க. வினரும் பிரச்சாரம் செய்தனர். இதனால் ம.ம.க. வேட்பாளர் முஹம்மது ஹபீப் கூமாப்பட்டியில் தோல்வியடைந்தார்.

திமுக, அதிமுக கூட்டணிகளின் கடைசி நேர உறவு, பண வினியோகத்தையும் தாண்டி குறைவான வாக்குகள் வித்தியாசத்தில், வாக்குகள் பெற்று தோற்றாலும், அது தார்மீக ரீதியில் ம.ம.க.வின் பலத்தை வெளிக்காட்ட உதவியுள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்பு களுக்கான இடைத் தேர்தல்கள் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் அதிகமான இடங்களில் நடைபெற்றிருந்தால் ம.ம.க. நிறைய இடங்களில் போட்டியிட்டு பலத்தை காட்டியிருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

ம.ம.க.வுக்கு கிடைத்திருக்கும் வெற்றி சில செய்திகளை சொல்கிறது. பரந்து விரிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் அராஜகங்களை எதிர் கொண்டு ஜெயிப்பதற்கும், சிறிய பரப்பளவுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் பண வினியோகத்தை எதிர்கொண்டு ஜெயிப்ப தற்கும் உள்ள வித்தியாசத்தை புரிய வைத்திருக்கிறது. சிறிய பரப்பளவுக்குட் பட்ட பகுதிகளில் தேர்தல் பணிகளின் போது நடைபெறும் தில்லுமுல்லுகளை ஒரளவு கட்டுப்படுத்த முடியும் என்பது தெரிய வருகிறது.

இன்னொரு செய்தி முக்கியமானது. தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் அங்கீகரிக்கப்பட்ட சமுதாய கட்சியாக முஸ்லிம் லீக்கும், தேசிய லீக்கும் திகழ்ந்தன. இப்போது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் தென்காசியில் முஸ்லிம் லீக்கையும், லால்பேட்டையில் தேசிய லீக் கட்சியையும் தோற்கடித் திருப்பதன் மூலம் மனிதநேய மக்கள் கட்சியே சமுதாயத்தின் நம்பிக்கை பெற்ற கட்சி என்பது நிரூபணமாகியிருக்கிறது.

இந்த இடைத்தேர்தல் முடிவுகளின் மூலம் கூட்டணியின் முதுகில் மட்டுமே வெற்றி பெறுபவர்கள் யார் என்பதும், தனிபெரும் சமுதாய செல்வாக்குடன் தனித்து நின்று வாக்குகளை குவிப்பவர்கள் யார் என்பதும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

No comments :