Monday, October 12, 2009

முஸ்லீம் மக்கள்: மூன்றாவது இடத்தில் இந்தியா

முஸ்லீம் மக்கள்: மூன்றாவது இடத்தில் இந்தியா

அமெரிக்காவில் உள்ள திங்டாங் ஆய்வு மையம் உலகில் வாழும் முஸ்லிம் மக்கள் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தி உள்ளது. 1500 வகையான ஆதாரங்களை மையமாக வைத்து இந்த கணக்கெடுப்பை நடத்தி உள்ளது.

அதில் உலகில் மொத்தம் உள்ள 680 கோடி மக்களில் 157 கோடி பேர் முஸ்லிம்கள் என்று தெரிய வந்துள்ளது. அதாவது உலகில் 23 சதவீத மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். 232 நாடுகளில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடு இந்தோனேசியா. அங்கு 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். 2-வது இடம் பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. அங்கு 17 கோடியே 40 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 16 கோடியே 9 லட்சம் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் 13.4 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

உலகில் வாழும் மொத்த முஸ்லிம்களில் 87-ல் இருந்து 90 சதவீதத்தினர் ஷன்னி பிரிவு முஸ்லிம்கள் 10-ல் இருந்து 13 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள்.

ஷியா முஸ்லிம்களில் 68ல் இருந்து 80 சதவிதத்தினர் இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர்.

மக்கள் வாழும் அனைத்து கண்டங்களிலும் முஸ்லிம்கள் உள்ளனர். உலகில் 60 சதவித முஸ்லிம்கள் ஆசியாவில் வசிக்கின்றனர்.

No comments :