Wednesday, January 7, 2015

தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் இரங்கல் அறிக்கை:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் இரங்கல் அறிக்கை:
பிரபல தொழில் அதிபரும், சமூக சேவகருமான பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று மறைந்துவிட்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம்.
தன் ஆற்றலாலும், அறிவாலும் உலகம் போற்றும் தொழில் அதிபராக உருவாகி, பெரும் தொழில் சாம்ராஜ்யங்களை பன்னாட்டளவில் நிறுவியவர்.
பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியவும், செல்வம் ஈட்டவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் அவர் வழிகாட்டினார்.
சென்னை கிரஸண்ட் பொறியியல் கல்லு£ரி, கீழக்கரை தாஸிம் பிவீ மகளிர் கல்லு£ரி, டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம், ஆகியன அவரது பெரும் புகழுக்கு மகுடம் சூட்டுபவை.
பன்னாட்டாளவில் சிறந்த தொழில் அதிபராக திகழ்ந்த அவர், ஏழை&எளிய மக்களுக்கு அறப்பணிகள் ஆற்றிய மனித நேரயராக திகழ்ந்தார்.
அன்னாரின் புகழ் வரலாற்றில் பொறிக்கப்படும் என்பதில் ஐயமில்லை, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் மறுஉலக வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
(ஜே.எஸ்.ரிபாயீ) 
தமுமுக தலைவர் 

No comments :