Thursday, January 1, 2015

சாலை வசதி இல்லாத கிராமத்தில் இரவு நேரத்தில் சென்று மக்களிடம் குறைகளை கேட்கும் மக்கள் எம்.எல்.ஏ

சாலை வசதி இல்லாத கிராமத்தில் இரவு நேரத்தில் சென்று மக்களிடம் குறைகளை கேட்கும் மக்கள் எம்.எல்.ஏ

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புல்லாணி ஒன்றியம், மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகர் பகுதியில் விடுதலை பெற்ற இந்தியாவில் இதுவரை இந்த மணல் பாதையில் சாலை அமைக்கப்படவே இல்லை இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி புதிய சாலை வசதி செய்து தரவேண்டி கோரிக்கை. 

மேற்கண்ட கிராமத்திற்கு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறியும் விதமாக இரவு 7 மணிக்கு சாலையோ, வெளிச்சமோ இல்லாத இப்பகுதிக்கு இரவு நேரம் என்று கூட பாராமல் உடனடியாக சென்று ஆய்வு செய்தார்.ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர் Dr.M.H.ஜவாஹிருல்லாஹ் MBA.,M.Phil.,PhD.,MLAJawahirullah MH அவர்கள் கீழ் மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்களேஸ்வரி (அரண்மனை தோப்பு) முதல் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட தொத்தமகன்சாவடி, நாச்சியம்மைபுரம், பொன்னகர், அரைக்காசு அம்மாள் தர்கா வழியாகஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி வரையுள்ள சுமார் ஐந்து கி.மீ.சாலை மிக மோசமாக பழுதடைந்துள்ளது. 

10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இச்சாலை ஒருமுறை கூட பராமரிக்கப்படவில்லை.பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளதுடன் சில இடங்களில் சாலை இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் சிதைந்து போயுள்ளது.இந்நிலையில் தொத்தமகன்சாவடி முதல் சுமார் இரண்டு கி.மீ. தூரத்திற்கு மணல் பாதையாக உள்ளது. விடுதலை பெற்ற இந்தியாவில் இதுவரை இந்த மணல் பாதையில் சாலை அமைக்கப்படவே இல்லை என்பது வேதனையான தகவலாகும்.இந்த மணல் பாதை குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பட்டா இடமாக இருப்பதாகவும், தங்களது சமூக மக்களின் கால்நடை பராமரிப்பிற்காக மட்டுமே மணல் சாலையாக பயன்படுத்திட விட்டு வைத்துள்ளோம், அரசு சாலை அமைத்தால் எங்கள் நிலத்திற்கு பாதுகாப்பு இல்லை என அந்த சமூக மக்கள் கூறுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியை துவக்கப்பள்ளி மாணவர்கள் மங்களேஸ்வரிநகர் செல்வதற்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஏர்வாடி செல்வதற்கும் மணல் பாதையை கடந்தே செல்ல வேண்டியுள்ளது.உயிருக்குப் போராடும் ஆபத்தான நோயாளிகளை ஏற்றி செல்ல அவசர ஊர்திகள் கூட செல்வதற்கு வழியில்லை.விடுதலை பெற்ற காலத்திலிருந்து சாலை போடப்படாத மங்களேஸ்வரி நகர் - ஏர்வாடி சாலையில் உள்ள மணல் பாதையை தார்ச்சாலையாக தரம் உயர்த்தவும்மங்களேஸ்வரி நகர் - ஏர்வாடி சாலையில் குறுக்கிடும் தனியார் பட்டா இடத்தில் உள்ள மணல் பாதையை சம்பத்தப்பட்ட நில உரிமையாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, நிலத்திற்கு சொந்தக்கார்கள் பாதிப்படையாத வகையில் தார்ச்சலையாக அமைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

No comments :