Tuesday, December 9, 2014

அரசியல் அரங்கில் ஆச்சரியப்படுத்தும் ஜவாஹிருல்லாஹ் MLA!

சென்னை : அரசியல் அரங்கில் எங்கும் எதிலும் கமிஷன், ஊழல் தலைவிரித்தாடும் காலகட்டத்தில், ஒரு ரூபாய் கூட லஞ்சம், கமிஷன் பெறாமல் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் MH. ஜவாஹிருல்லாஹ்,
தனது தொகுதி மக்களுக்காக முழுமையாக ரூ. 36 கோடியே 56 லட்சம் செலவில் இராமநாதபுரம் தொகுதியில் பணிகள் செய்திருப்பது பெரும் பரபரப்பாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் வருமாறு:
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் MH.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் பரிந்துரையின் பேரில்...
கடந்த 2011 முதல் 2014 வரை ரூபாய் சுமார் 17.5 கோடியில் நெடுஞ்சாலைத்துறையின் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் நீண்ட நெடிய கடற்பரப்பை கொண்ட ராம நாதபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1473 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில், 355 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளும், 340 கிலோ மீட்டர் நீளமுள்ள மாவட்ட சாலைகளும், 778 கிலோ மீட்டர் நீளமுள்ள இதர சாலைகளும் அடங்கும்.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையிலும், அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி செய்து கொடுக்கும் நோக்கிலும் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணிகளை நிறைவேற்றி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் சாலை உள்கட்டமைப்பு பணிகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு பணிகளுக்கும், அதன் பராமரிப்பு பணிகளுக்கும் தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலைகளை! நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அகலப்படுத்தி அதன் தரத்தை மேம்படுத்துதல் சாலைகள் மேம்பாடு செய்தல் சாலைகளின் இருபுறமும் உள்ள குறுக்கு வடிகால் சிறு பாலங்களை மராமத்து செய்து திரும்ப கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தந்த கால சூழ்நிலைக்கேற்ப சாலைகளில் ஏற்படும் பழுதுகளை சிறப்பு பராமரிப்பு மேற்கொள்ளுதல், காலமுறை புதுப்பித்தல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வருடாந்திர பராமரிப்பு நிதியின் கீழ் சாலைகளில் நொடிகள் சீர்செய்தல் உள்ளிட்ட பணிகள் சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 2011-2015 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் திட்டம் சாரா பணிகள் குறித்து கோட்ட பொறியாளர் ஆனந்தன் உதவி கோட்ட பொறியாளர் வேல்ராஜ் ஆகியோர் கூறியதாவது:-
இந்த நிதி ஆண்டில் 17 கிலோமீட்டர் தூர முள்ள சாலைகள் ரூ.6 கோடியே 58 லட்சம் மதிப்பில் போடப்பட உள்ளன. இது தவிர பகுதி-2 திட்டத்தின் கீழ் கட்டிட பணிகள் கடந்த 2011-12ம் நிதியாண்டில் ரூ.47 லட்சத்திலும், 2012- 13ம் நிதியாண்டில் ரூ.22 லட்சத்திலும், 2013-14ம் நிதியாண்டில் ரூ.35 லட்சத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2014 -15ம் இந்த நிதி ஆண்டில் மொத்தம் 3 திட்டங்களிலும் சேர்த்து 80 கிலோ மீட்டர் தூர சாலை பணிகள் ரூ.36 கோடியே 56 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளன. மேற்கண்ட பணிகள் மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் M.H. ஜவாஹிருல்லா MLA அவர்களின் பரிந்துரையின் பெயரில்
1 . உத்திரகோசமங்கை மங்கை முதல் திருப்புல்லாணி வரை புதிய சாலை அமைத்தல்
2 . உச்சிப்புளி புதுமடம் சாலை மேம்பாட்டுக்காகவும்
3 . வழுதூர் பெரியபட்டிணம் சாலையை மேம்படுத்துதல்
4 . திருப்புல்லாணி முதல் பிரப்பன்வலசை வரை சாலை மேம்பாடு
5 . பிரப்பன்வலசை முதல் ரெகுநாதபுரம் வரையிலும் சாலை மேம்பாடு
6 . உத்திரகோசமங்கை கிராமசாலை மேம்பாடு
7 . இராமநாதபுரம் முதல் கீழக்கரை சாலை மேம்பாடு
8 . மண்டபம் கிராமசாலை மேம்பாடு
9 . இராமநாதபுரம் முதல் கீழக்கரை செல்லும் வழியில் காஞ்சிராங்குடி வரையிலும் சாலை மேம்பாடு
10 . இருமேனி மீனவர் காலணி சிறப்பு பழுதுநீக்கி சாலை செப்பனிடுதல்
11 . வேதாளை மீனவர் காலணி சிறப்பு பழுதுநீக்கி சாலை செப்பனிடுதல்
12 . பெரியார் நினைவுத்தூண் முதல் கேணிக்கரை வரையிலும் சிறப்பு பழுதுநீக்கி சாலை செப்பனிடுதல்
ஆகிய பணிகளும் இது தவிர குறிப்பாக கோப்பேரிமடம் முதல் ஆற்றாங்கரை வரையில் 5 கிலோ மீட்டர் சாலை ரூ.4 கோடியே 20 லட்சத்திலும், உச்சிப்புளி அருகே தேசிய நெடுஞ்சாலை முதல் கடுக்காய்வலசை வரை யிலான 1.7 கிலோ மீட்டர் சாலை ரூ.80 லட்சத்திலும், திருப்புல்லாணி முதல் குத்துக்கல் வலசை வரையிலான 2.4 கிலோ மீட்டர் சாலை ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பிலும் போடப்பட உள்ளது.
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் பரிந்துரையின் பெயரில் மேற்கண்ட பணிகளுக்காக ரூ.17.5 கோடி நிதி புதிய சாலைகள் அமைக்கவும், சாலைகள் மேம்பாட்டுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த சாலைப்பணிகள் தவிர மற்ற பணி நிறைவு பெறாத சாலைப்பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு 2015 மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது

No comments :