Thursday, December 11, 2014

இராமநாதபுரம்-கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் ரயில்வே கதவு மேம்பாலம் அமைக்க 5 ஆண்டுள் ஆகும்

இராமநாதபுரம்-கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் ரயில்வே கதவு மேம்பாலம் அமைக்க 5 ஆண்டுள் ஆகும்

சட்டமன்றத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தகவல்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

டிசம்பர் 2014 நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரில் கடந்த 04-12-2014 அன்று நான எழுப்பிய கேள்வியும் அமைச்சரின் பதிலுரையும்

எனது கேள்வி::
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமநாதபுரம் நகரை கீழக்கரை, து£த்துக்குடி போன்ற தென் பகுதிகளிலுள்ள ஊர்களை இணைக்கக்கூடிய கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு புதிய இரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என்று இந்த அரசு 2013&ல் அறிவிப்பு செய்திருந்தது. 
அந்த இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு எந்தவொரு பணியும் நடை பெறுவதாகத் தெரியவில்லை. இராமநாதபுரம் நகரில், மிக பெரிய போக்குவரத்து நெரிசல் இரயில்வே கதவு மூடும்போது ஏற்படும் ஒரு சூழலை தவிர்ப்பதற்காக இந்த அரசு விரைவில் அந்த இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணியை செய்ய ஆவன செய்யுமா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிசாமி:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இராமநாதபுரத்தில் இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான எந்தப் பணிகளும் துவங்கப்படவில்லை என்று சொன்னார்கள், ஒரு இரயில்வே பணியை துவங்க வேண்டும் என்று சொன்னால் குறைந்தபட்சம் நான்கிலிருந்து ஐந்து ஆண்டுகள் காலமாகும். இதனை ஏற்கெனவே 2014&2015 கொள்கை விளக்க குறிப்பில் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம்.

இரயில்வே லைனில் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளகின்றபோது தல வரைப்படம் தயாரித்தல் நேர்பாடு செய்தல், இரயில்வே துறைக்கு அனுப்புதல் 3 மாதம் ஆகின்றது. துறையின் நேர்பாடு, வரைப்பாடு பெறுதல் ஆறு மாதம் நில திட்டம், வரைப்படம் தயாரித்தல் 3 மாதம் 15/2,ல் அறிவிப்பு செய்தல் 6 மாதம் 15/1 ல் அறிவிப்பு செய்தல் 6 மாதம் மதிப்பீடு தயாரிக்க மூன்று மாதம், மதிப்பீடு ஒப்புதல் வழங்குதல் மூன்று மாதம், பணம் வழங்க ஆணைகள் வழங்குதல், நிலம் கையகப் படுத்துதல் 6 மாதம், பயன்பாட்டு சாதனங்களை மாற்றி அமைத்தல் 3 மாதம், வரைப்படம் முடிவடைந்து அதனை தயாரிக்க 3 மாதம் மதிப்பீடு தயாரித்தல் தொழில்நுட்பம் ஒப்புதல் வழங்குதல் 3 மாதம், ஒப்பந்தபுள்ளி முடிவடைந்து பணி ஒப்படைப்பு மூன்று மாதம், ஆக கிட்டத்தட்ட 4 முதல் 5 ஆண்டுகாலம் இதற்கே செலவிடப்படுகின்றது. மீதி 2 1/2 ஆண்டுகள் பணிகள் செய்ய வேண்டிய இதுபோன்ற சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால், பாலம் கட்டும் பணிகளில் காலதாமதம் ஏற்படுகின்றது. எனவே, மாண்புமிகு உறுப்பினர் சுட்டிக்காட்டியதன் காரணமாக பாலப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்

No comments :