Wednesday, December 10, 2014

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பத்திரிகை அறிக்கை

பத்திரிகை அறிக்கை

திருப்பதியில் தமிழக செய்தியாளர்கள் மதிமுகவினர் மீது தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கத

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
--------------------------------------------------------------------------------------------

திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கருப்புக்கொடி காட்டிய மதிமுக-வினர் மீது சரமாரியாக தடியடி நடத்தியதுடன் போராட்டத்தை படம் பிடித்த தமிழக பத்திரிக்கையாளர்கள் மீது ஆந்திர போலீசார் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளiதை வன்மையாக கண்டிக்கிறேன். 
கருப்புக்கொடி போராட்டத்தை படம் பிடித்து கொண்டிருந்த தமிழக தொலைக்காட்சி செய்தியாளர்கள், காணொளி பதிவாளர்கள் மற்றும் ஏனைய தமிழக பத்திரிக்கையாளர்கள் மீது ஆந்திர போலீசார் கொடூர தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர். செய்தியாளரின் கேமரா, மைக் போன்றவற்றையும் உடைத்து எறிந்துள்ளனர். ஒன்னரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்து விட்டு இன்று சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ராஜபக்சேவிற்கு திருப்பதியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சந்திரபாபுவின் தெலுங்கு தேச அரசு. இதே நேரத்தில் ஜனநாயக ரீதியில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுகவினர் மீது காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியதுடன் அதனை செய்தியாக்கிக் கொண்டிருந்த தமிழக பத்திரிகையாளர்களையும் மோசமாக ஆந்திர மாநில காவல்துறையினர் தாக்கியுள்ளது மன்னிக்க முடியாத குற்றமாகும். பாஜகவின் ராஜபக்சே விசுவாசத்திற்கு தாங்களும் விசுவாசமாக இருக்கின்றோம் என்பதை சந்திரபாபு நாயுடு வெளிப்படுத்துவதற்காகவே ஒத்துமொத்த தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும்வகையில் திருப்பதியில் தமிழர்கள் மீது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று கருதுகிறேன். 
கைதுச் செய்யப்பட்ட மதிமுகவினரையும்பத்திரிகையாளர்களையும் உடனடியாக ஆந்திர அரசு விடுவிக்க வேண்டும் என்று கோருகின்றேன்.
தொடர்ந்து தமிழர்களின் நலனுக்கெதிராக செயல்படும் பாஜக கூட்டணியிலிருந்து மதிமுக விலகியது போல் தேமுதிகவும் பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய முற்போக்கு கூட்டணியும் வெளியேற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

(ஒ-ம்) எம்.எச். ஜவாஹிருல்லா

No comments :